சிறப்பு செய்திகள்

messages

சிந்தனைக்குரிய செய்திகள்

கட்டுரைகள்

கருத்துள்ள கட்டுரைகள்

கதைகள்

மகிழ்வூட்டும் கதைகள்

கவிதைகள்

இதமான வார்த்தைகள்

அன்புடன் வாழ்த்துக்கள்

இறைமகன் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்!
கிறிஸ்மஸ் விழா கோலம் காண இவ்வுலகம் தயாராகிவிட்டது. நம்பிக்கைக் கொண்டோருக்கு கிறிஸ்மஸ் விழா. நம்பிக்கை இல்லாதவருக்கு விடுமுறை விழா.
கிறிஸ்து பிறப்பின் நோக்கம் உலக மக்கள் அனைவரும் வாழ்வில் நிறைவுப் பெறுவதற்கே!
நமக்கொரு பாலன் பிறந்துள்ளார். நம்மோடு இருக்கிறார். நாம் அவரோடு இருக்கிறோமா? சிந்திப்போம்.
அமைதியின் அரசராய், அன்பின் சிகரமாய் விண்ணை விட்டு மண்ணில் வந்து உறவின் பாலமாய் உலகில் உதித்தார். குடிலில் உதித்த பாலன் நம் உள்ளத்தில், இல்லத்தில் வர விசாலமாய் கதவுகளைத் திறந்து வைப்போம். இறைத் தென்றல் நம் குடும்பங்களில் தவழ்ந்தாட, தன்னையே தாழ்த்திய இயேசு ஆண்டவரின் மீட்பினை எல்லோரும் அறிந்திட இறைமகன் இயேசுவின் சாட்சிகளாய் வாழ்ந்திடுவோம்.
ஒருவர் ஒருவரை மகிழ்வுடன் வாழ்த்தி கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடுவோம்.

அன்பின் மடலின் 17ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு பெருவிழா சிறப்பு மலரை எம் பார்வையாளராகிய உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கின்றோம். தங்கள் படைப்புகளைத் தந்து உதவிய படைப்பாளிகள் அனைவருக்கும் எம் இதயம் கனிந்த நன்றி உரித்தாகுக.

அனைவருக்கும் இனிய கிறிஸ்து பிறப்பு பெருவிழா வாழ்த்துக்கள்!!

அன்புடன்
ச.நவராசன்.-அன்பின்மடல்