கிறிஸ்மஸ் கவிதைகள்



திருமதி ரீனா ரவி - கன்னியாகுமரி

1. அன்பு மனம் மலர்ந்திட
அகிலத்தில் பாவம் மறைந்திட
அல்லல்பட உதித்த இளம் விடியலே
மாந்தரின் மதியை வென்றிட
மண்மீது பொழிந்திட்ட மகிமைஇன்பமே
மனதாலே பாடுகிறேன் இனிய தாலாட்டு


chismalar

2. தாலேலோ... தாலேலோ... தாலேலோ...
தாய்மடியில் கனிந்த மீட்பரே தாலேலோ...
தங்கதாரகை பெற்றெடுத்த தவப்புதல்வா தாலேலோ...
விடியற்காலை நட்சத்திரமே தாலேலோ...
விண்ணவரின் தேவாதிதேவனே தாலேலோ...
பெத்தலகேம் சூரியனே தாலேலோ...
மாட்டுதொழுவத்து மணிமுடியே தாலேலோ...
மங்கா குலகொழுந்தே தாலேலோ...
தாலேலோ... தாலேலோ... தாலேலோ...




3. மல்லிகை முல்லை சம்மங்கி யெடுத்து
மார்கழி குளிரில் அணிவகுத்து
மரகத ஒளியில் தீபமேந்தி
மாட்டுத்தொழுவ நாயகனே வாழ்த்திடுவோம்...


மண்ணில் பூத்ததோ விண்ணகப்பூ
மனதினிலே ஆனந்தத்தின் ஆரம்பம்
மறந்துப்போனது கண்ணீரும் கவலையும்
மகிழ்வோம் அவர்பிறப்பை போற்றி...