புதுப் பிறப்பாவோம் வாரீர்!



திருமதி அருள்சீலி அந்தோனி - சென்னை 16

ஹாலோ குட்டீஸ்,
எப்படி இருக்கிறீங்க? குட்டி இயேசு பாப்பா பிறந்த நாளை கொண்டாடப் போறோம் நான் ரெடி நீங்க ரெடியா?
ஒரு சிறு உண்மை நிகழ்வைச் சிறு உரையாடல் வழியாக மழலை இயேசுவின் பிறப்பைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
ஒரு நாட்டை ஓர் அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஒரு சந்தேகம் -“கடவுள் ஏன் உலகை மீட்கத் தானே மனிதனாகப் பறக்கவேண்டும்? ஏன் எங்களைப் போன்று அவருக்குக் கீழே எத்தனையோ சீடர்கள் - புனிதர்கள் உள்ளனரே ஏன் அவங்க வழியாக மனிதரை மீட்கக் கூடாது?” என்ற எண்ணம் அவன் மனதில் தோன்றி, அவையில் கூடியிருந்தவர்களிடம் கூறினான். அவர்கள் கூறியப் பதில் அவனுக்குத் திருப்தியளிக்கவில்லை. ஆனால் அமைச்சர் மட்டும் ”மன்னா நான் நாளைக்கு வந்து பதில் கூறுகிறேன்” என்று சென்றார்.

மறுநாள் மன்னனும், அமைச்சரும், மன்னனுடைய குழந்தையும் அரண்மனையின் அருகிலிருந்து ஆற்றிற்குச் சென்றனர். மன்னன் கரையில் நின்றார். அமைச்சரும் மன்னனின் மகனும் படகில் உல்லாசமாகச் சென்றனர். அரசர் கரையிலிருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

திடீரென்று அமைச்சர் குழந்தையை எடுத்து ஆற்றில் தூக்கிப் போட்டார். இதனைக் கண்ட மன்னன் உடனே ஆற்றில் குதித்துத் தன் குழந்தையைக் காப்பாற்றினார். ஆனால் - அது பொம்மைக் குழந்தை. ஆச்சரியத்தோடு அமைச்சரைப் பார்த்தார். அமைச்சர் ”மன்னா! உன் குழந்தை ஆற்றில் விழுந்துவிட்டதைக் கண்டதும், உடனே நீர் ஆற்றில் குதித்து உம் குழந்தையைக் காப்பாற்ற முயன்றீர். இவ்வாறே இறைவன் தன் மக்கள் பாவமெனும் சேற்றில் விழுந்து மூழ்கும் வேளையில் தானே குதித்த தன் மக்களை மீட்க இறைவன் மனிதன் ஆனார் என்பதே கருப்பொருள் ஆகும்.

குட்டீஸ்
அந்த மன்னனுக்கு அவர் கேட்ட வினாவிற்குப் பதில் கிடைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை..
ஓர் உரையாடல் -இறைவனுக்கும், குட்டீஸ்க்கு.....
இறைவன்: குட்டீஸ் உங்கள் இதயங்களைப் புல்லாங்குழல் போல வெறுமையாக்கிடுங்கள்.
குட்டீஸ்:
நீர் இல்லாத இடமுண்டோ? எல்லா இடங்களிலும் நீர் இருப்பதாகச் சொல்கிறார்களே!
இறைவன்:
உண்டு
குட்டீஸ்:
அது எந்த இடம் சாமி?
இறைவன்:
சாமி அது தான் வழிபாட்டுதலம் என்றார்.
குட்டீஸ்:
எனக்குத் தூக்கி வாரிபோட்டது ஏன்? என்றேன் ஐயத்துடன்.
குட்டி இயேசுப்பாப்பா:
நான் தூய்மையான உன்னைப் போன்ற குழந்தை உள்ளம் கொண்ட இதயங்களைத் தேடி அலைவதால் பாப்பா என்னால் பேழைக்குள் இருக்கமுடியவில்லை என்றார்.
பாவஇருள் சூழ்ந்த இதயங்களைத் தூய்மையாக்கவே குழந்தை இயேசுவாக மனிதரைச் சந்திக்க இந்தப் புவியை முத்தமிட்டேன். குட்டீஸ்! குட்டீஸ்...
”மலர் மணத்தைச் சந்திப்பதுண்டு
வானம் நிலவைச் சந்திப்பதுண்டு
நிலம் நீரைச் சந்திப்பதுண்டு
அலைக் கரையைச் சந்திப்பதுண்டு
மயில் மேகத்தைச் சந்திப்பதுண்டு
குயில் சோலையைச் சந்திப்பதுண்டு
குட்டீஸ்! மேற்கண்டச் சந்திப்புகளை விடக் கடவுள் உம் போன்ற குட்டிப் பாப்பாக்களைச் சந்திக்க 2016 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது மட்டுமல்ல. மாறாக ஒவ்வொரு நிமிடமும் பிஞ்சு உள்ளமதில் அரங்கேறும் ஒரு நிகழ்வே கடவுள் மனிதரானார். நம்மிடையே குடிக்கொண்டார்.
காலம் நிறைவேறியபோது ....கடவுள் தன் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார்” (கலா 4-4)
குட்டி இயேசு பாப்பா ஏழைகளோடு ஏழையாக மாட்டுத் தொழுவமதில் பிறந்துத் தன் முதல் காட்சியை இடையருக்கு அளித்தார். அவ்வாறே நாமும் நம் மனதினைப் புல்லாங்குழலில் எழும் இசையைப் போன்று இசைப்போம். - தூய்மையோடு குட்டி இயேசு பாப்பாவின் இதழ்களில் உங்களின் மெல்லிய இதழ்களைப் பதித்து வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
அன்புடன்
மரியின் மகள்
திருமதி அருள்சீலி அந்தோனி.