இறைவனின் வாக்குத்தங்கள் நமக்கு!



சகோதரர் பால், புதுவாழ்வு தியான நிலையம், மத்தளம்பாறை, தென்காசி

கிறிஸ்துக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே!
இயேசு சிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.


zechariahகிறிஸ்மஸ் நமக்குக் கூறும் செய்தி என்னவென்று பார்ப்போமானால் லூக்கா நற்செய்தியாளர் 1:20ல் ”இதோ பாரும், உரியக் காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை. ஆதலால் அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர். உம்மால் பேசவே இயலாது” என்றார் வானதூதர் செக்கரியாவிடம். இங்கு யோவான் பிறப்பதற்கு முன் செக்கரியாவிடம் லூக்கா 1:13-17 செல்லுகிறார். இந்தச் செய்தியை நம்பவில்லை. உன் மனைவி எலிசபெத் ஒரு மகனைப் பெறுவார். தூய ஆவியால் ஆட்கொள்ளபடுவார். ஆண்டவருக்காக ஒரு மக்களினத்தை உருவாக்கச் செய்வார் என்ற செய்திகளை எல்லாம் செக்கரியா நம்பவில்லை. ஆகவே தான் அவர் பேச்சற்று இருந்தார். நம்முடைய வாழ்க்கையிலும் நாமும் சில காரியங்களை மறந்துவிடுகிறோம். நம்பமாட்டோம் என்கிறோம். நாம் எல்லாம் நம்பும்படியாகவே கலா4:5 கடவுள் தன் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்துக்கு உட்பட்டவராகவும் அனுப்புகிறார். குறித்தகாலத்தில் எல்லாம் நிறைவேறும் என்ற விசுவாத்தை ஊட்டுகிறார்.


குறித்தகாலத்தைக் கொடுத்த அவர் வாக்குதத்தங்களை நிறைவேற்றுகிறார். தொடக்கநூல் புத்தகத்தில் மூன்றாம் அதிகாரத்தை வாசிக்கும் போது மனிதர்கள் துன்பநிலைக்கு ஒன்று பாவத்தினாலும்(3:1-7) இரண்டு விசாரனையாலும்(3:14-19) தள்ளப்படுவதைப் பார்க்கிறோம். பாவம் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி நம்பிக்கை இழந்த முதற்பெற்றோருக்கு ஆறுதைலான வார்த்தை (3:15) அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும் என்ற வாக்குதத்த வார்த்தையைக் கொடுத்துத் தீமைகள் ஒழிந்து நன்மைகள் நம் வாழ்வில் நிறைவேறும் என்று வாக்குதத்தம் செய்கிறார். உங்களுடைய வாழ்வில் கடவுள் கொடுத்த வாக்குதத்த வசனங்களைத் தியானித்துப் பாருங்கள். அற்புதம் நடக்கும். நம் புனிதர்கள் வாழ்வில் ஒரு வார்த்தைதான் அவர்களைப் புனித நிலைக்கு உயர்த்துகிறது. சான்றாக : புனித சவேரியார் மத்:16:26 அன்னை தெரசா மத்25:40, பனித அகஸ்டின் உரோ 13:13. இந்த வார்ததைகள் அவர்களை உருமாற்றியது.


ஏனெனில் அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. இதைத் தான் லூக்கா 1:37-செல்லுகிறது. இருக்கிறதை இல்லாமலும் இல்லாததை இருக்கிறவைகளாக மாற்றுகிறவர் நம் ஆண்டவர். ஆகவே அவரால் கூடாதது ஒன்றுமில்லை.


எகிப்துக்கு குழந்தையுடன்தூதர்களுடைய பணிவிடை நமக்கு உண்டு. தோபியா வாழ்க்கையில் வந்த போராட்டம் இன்னல்கள் எல்லாம் பார்த்து நான் உடனிருந்து உதவி செய்தேன். இரபேல் தூதர் ”ஆண்டவரடைய மாட்சிமிகு திருமுன் பணிபுரியும் தூதர் நான். அஞ்சாதீர்ககள். உங்களக்கு அமைதிப் பெருகட்டும். இதோ கடவுளின் திருவுளப்படியே நான் உங்களோடு இருந்தேன். உங்கள் வாழ்நாள் முழுவதும் கடவுளை போற்றிப் புகழுங்கள்” என்றார். தோபித்து 12:15-18 நம்முடைய வாழ்வில் ஆண்டவரைப் போற்றிப் புகழும்போது நமக்குப் பணிவிடைச் செய்வார்கள். பணிவிடைச் செய்பவர்கள் மட்டும் அல்ல, நம்மைப் பாதுகாப்பார்கள். ஆண்டவரின் பெயரால் நம்மை வழிநடத்துவார்கள். அப்படியாகத் தான் யோசேப்பும் மரியாவுக்குக் கருத்தரித்த பின்பும் சரி, மரியாளையும் குழந்தையுடன் எகிப்திற்கு சென்ற போதும் சரி கனவுகள் வழியாகக் காட்சிகள் வழியாக நடத்துகிறார். கடவுள் உங்கடைய வாழ்வில் கரம்பிடித்த வழிநடத்துவதற்கே தூதர்கள் உள்ளார்கள்.


நம்மீது அன்பு கொண்ட தெய்வம் அவர் ஆராதனைக்குரியவராய் இருக்கிறார். எனக்குப் பிரியமானவர்களே ஏரோது அரசன் ஞானிகளை அனுப்பிக் குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு அறிவியுங்கள் என்று கூறி அவர்களை இரகசியமாய் அனுப்புகிறார். இப்படித் தான் என் வாழ்வில் நான் கேட்டச் சம்பவம் ஒன்று. எங்கள் ஊர் வல்லம் பெரியார் கல்லூரிலிருந்து ஏழு பேர் சாலக்குடி தியானத்தில் என்ன நடக்கிறது? என்று ஆராய்வதற்குச் சென்றார்கள். இவர்கள் ”கடவுளே இல்லையென்று அறிக்கை செய்துகொண்டிருகிறோம். இவர்கள் ஆண்டவர் இருக்கிறார்” என்கிறார்கள் என்று அங்கு வந்து பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்து நான்கு பேர் மனம் மாறிவிட்டனர். ஏனெனில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். மற்றவர்கள் சென்றுவிட்டனர். அதேபோல் ஞானிகளும் வருகிறார்கள். தாய்மரியா குழந்தையுடன் கையில் வைத்திருப்பதைக் கண்டு அவர்கள் மூவரும் குழந்தை இயேசுவை நெடுஞ்சான் கிடையாய் விழுந்து வணங்கினர்கள். அவர்கள் கையில் கொண்டு வந்த காணிக்கைப் பொருட்களையும் கொடுத்தனர்.


நாமும் நற்கருணைநாதரிடம் நம்மையே காணிக்கையாகக் கொடுத்து நம் தேவைகளை ஏற்றெடுப்போம். உருவமில்லாத இறைவன் உருவெடுக்க வருகிறார் குழந்தை வடிவில். வாருங்கள் ஆராதனை செய்து மகிழ்வோம்.

அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.