அன்பின் மடல்

xmas17

அன்புடையீர்,
இறைமகன் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்!!!
அன்பின் மடலின் 16ஆம் ஆண்டுக் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா சிறப்பு மடல் மூலம் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

ஓர் அழுகை - உலகம் விழத்துக் கொண்டது.
ஒரு பிறப்பு - வரலாற்றைப் புரட்டிப் போட்டது.
ஒரு வாழ்க்கை - அனைத்தையும் மாற்றியமைத்தது.


ஆம்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசுவின் பிறப்பு எத்தனை மாற்றங்களை இச் சமுதாயத்தில் ஏற்படுத்தியுள்ளது என்று எண்ணிப்பார்த்தால் அது மாபெரும் விந்தையாகவே இருக்கும்.

அமைதியான இரவு! நம் அமலன் பிறந்த இரவு!! இறைவனின் தூதர்கள் மீட்பின் வருகையை அறிவிக்க எளியோரைத் தேடிச் சென்றனர். விழித்தெழுந்த அம்மக்கள் நம்பிக்கையோடு பாலகனைக் காணச் சென்றார்கள். அதிசயத்தைக் கண்டார்கள். தங்கள் மீட்பைக் கண்டு கொண்டார்கள்.

வரலாறும் மாறியது. அன்பின் அரசு, அமைதியின் அரசு உலகை ஆட்கொண்டது. மன்னிப்பே மாண்புடையது என்று சொல்லி மானிடநேயம் வளர்த்தது.

இவ்வுலக வாழ்க்கை எனக்கு மட்டும் இன்றி நம் அயலானையும் இணைத்துக் கொண்டு புது வாழ்வு வாழ இயேசுவின் அன்பில், அவரின் உடனிருப்பில் அனைத்தையும் புரட்டிப் போட்டது.

ஆனால் அவரின் அன்பும், அமைதியும் நம்மிடம் நிறைவாய் உள்ளதா? இயேசு புரட்டிப் போட்ட வாழ்க்கையை நாம் எப்படிப் புரட்டிப் போட்டுள்ளோம். அதை மீண்டும் பழையநிலைக்கு மாற்றிப் பக்தனாக வாழாமல் அவரின் அன்புச் சீடராய் வாழ்ந்திட நம் உள்ளக்குடிலைத் திறந்திடுவோம், குடிலில் பிறந்த குழந்தை இயேசுவிடம் வாரீர் இறையருள் வேண்டி.........



நன்றியுடன் வாழ்த்துக்கள்!

16 ஆண்டுகளாகப் பார்வையாளர்களாக எம்மை ஊக்குவிக்கும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் எமது இதயம் கனிந்த கிறிஸ்து பிறப்பு பெருவிழா வாழ்த்துக்களை எமது எழுத்தாளர்களுடன் இணைந்து தெரிவித்துக் கொள்கிறேன். இம்மடல் சிறப்பாக அமையப் பங்களித்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் எம் இதயம்கனிந்த நன்றிகள் உரித்தாகுக. வரும் ஆண்டு அனைவருக்கும் அனைத்திலும் சிறப்பாய் அமைந்திட வாழ்த்துகிறேன்.

என்றும் அன்புடன்,
ச.நவராஜன்.