இயேசுவின் பிறப்பில் என்ன பெரும் அதிசயம் ?
உலகில் பல மதங்களை தோற்றுவித்த மகான்கள் தத்தம் நாடுகளில் ஊரில் பிறந்தார்கள், வாழ்ந்தார்கள், போதித்தார்கள் அருஞ்செயல்களை செய்தார்கள் ..பூத உடலை நீக்கி இன்னும் நம்மோடு இருக்கிறார்கள் இதுபோலத்தானே இயேசுவின் பிறப்பும் என்று நாம் நினைத்து விடக்கூடாது. ..மற்றவர்கள் புது மார்க்கத்தை உருவாக்கினார்கள். ஆனால் இயேசு ஏற்கனவே உள்ள மார்க்கத்தை செம்மைப்படுத்தி முழுமையும் நிறைவும் உள்ளதாக்கினார்
உலகம் உண்டானபோதே தந்தை மகன் தூய ஆவியார் என்ற மூவரும் இணைந்து இவ்வுலகத்தை உருவாக்கினார்கள் ”ஒளி உண்டாகுக” என்றார் கடவுள் ....ஒளி உண்டாயிற்று ..கடவுள் வார்த்தை என்னும் தாரக மந்திரத்தை பயன்படுத்தினார் ..அவர் நினைத்தாலே போதும் உலகம் உண்டாயிருக்கும் . அப்படியிருக்க ஏன் வார்த்தையால் சொல்லவேண்டும். தன் மகனை உலகிற்கு வார்த்தை வடிவத்தில் அனுப்பி விட்டார். தந்தை வார்த்தை என்னும் மகனை விடுத்தார் ஆவியானவர் தண்ணீர் மீது அசைவாடிகொண்டிருந்தார் உலகம் உண்டானபின் முதலில் தோன்றிய ஆதாம் முதல் தொடர்ந்து வார்த்தையாக இயேசு இருந்திருக்கிறார் ...அவர் மனித உடல் எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது, மனிதனாக அவதரித்தார்
மனிதன் தன ஆணவத்தால் பாபேல் கோபுரத்தையும் கட்டினான் மொழிகளை உண்டாக்கி மனித ஆணவத்தை அழித்தார் ....குற்றங்களும் பாவங்களும் பெருகிய காலத்தில் மனித குலத்தை நீரால் அழிக்கபோகிறேன் என்று ......சொன்னார் ..யாரும் கேட்கவில்லை.
நோவா என்னும் நீதிமான் ஒரு பேழையை செய்து தானும் தன் குடும்பமும், தக்க விலங்குகள் தகாத விலங்குகள் எல்லாவற்றையும் எடுத்து கொண்டார் ..ஜல பிரளயம் வந்தது ..நாற்பது நாட்கள் பேழை நீரில் மிதந்தது ...மீண்டும் மக்களின் மேல் கருணை கொண்டு ஆசீர்வதித்தார்.
..மீண்டும் மனிதன் குற்றங்கள் ... புரிபவனானான் ..சோதோம் கொமாரா தீர் பட்டணங்கள் குடிவெறியாலும் ஓரின சேர்க்கையாலும் ஒழுக்கமின்றி வாழ்ந்தனர் ..கந்தக மழையால் மீண்டும் அழித்தார்
..மீண்டும் மீண்டும் உலகை புதிப்பிக்கவும் பின்னர் அழிக்கவும் கடவுளுக்கு மனமில்லை ...எனவே தானே மனித உருவெடுத்து மக்களுக்கு முன்னுதாரனமாக வாழ்ந்து காட்ட வேண்டுமென்று கடவுள் திருவுளம் கொண்டார்....
வார்த்தையானவர் மனு உரு எடுக்க திட்டமிட்டார் .. (யோவான்1: 14 ) இவருடைய பிறப்பை இவருக்கு முன்னரே இருந்த இறைவாக்கினர்கள் ஏசாயா எரேமியா எசக்கியேல் தானியல் மீக்கா நாகூம் அபகூக் போன்றவர்கள் " மீட்பர் எங்கே எப்படி எந்த ஊரில் பிறப்பார் ”என முன் கூட்டியே சொல்லியிருக்கின்றனர்.
1 கன்னி ஒருத்தி கருத்தாங்கி ஒரு மகனை பெற்றெடுப்பாள்.
2 யூதாவின் நகரங்களில் பெத்லேகேமே நீ சிறியது அல்ல.
3 நம் பிணிகளை ஏற்றுக்கொண்டார் நம் நோய்களை சுமந்து கொண்டார் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றன ..இயேசு செய்ய வேண்டிய பணிகளை ஏசாயா முன் கூட்டியே சொல்லியிருக்கிறார்
1 எளியோருக்கு நற்செய்தி
2 சிறைபட்டோருக்கு விடுதலை
3 ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு
4 குருடருக்கு பார்வை
5 அருள் தரும் ஆண்டினை அறிவித்தல் என்ற ஐந்து பணிகள் அவைகள்
இயேசு ஒரு மாட்டு தொழுவத்தில் பிறந்தார் ..நம் உள்ளத்திலும் அவர் பிறக்க வேண்டுமானால் நம் உள்ளங்களும் மாட்டு தொழுவமாக வேண்டும் ..அங்கே யார் இருந்தார்கள்? அன்னை மரியா, யோசேப்பு, விண்மீன், ஆடு, மாடு இடையர்கள் ....பணக்காரனோ அரசரோ வேறு பெண்களோ இல்லை பரிசுத்தமான இடம்....... மீட்பர் ஊரில் பிறக்கும் போது ஒரு விண்மீன் தோன்றுவதை வான சாஸ்திர அறிஞர்கள் உணர்ந்திருக்கிறார்கள். விண்மீன் வழிகாட்ட தத்தம் நாடுகளிலிருந்து புறப்பட்டு போய் தங்கம் வெள்ளை போளம் தூபம் ஆகியவற்றை காணிக்கையாக கொடுத்தார்கள். இயேசு ஒரு அரசர், ஒரு குரு, ஒரு இறைவாக்கினர் ,என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தார்கள் ...ஏரோது ரகசியமாய் கொல்ல நினைத்தான் இதை அறிந்த ஞானிகள் வேறு வழியாக தத்தம் ஊர்களுக்கு சென்றார்கள். இன்று நமக்கு விண்மீன் எது ? ...அதுதான் விவிலியம் ..அது காட்டுகின்ற வழியில் செல்வோம்....அப்போது இயேசுவை காண்போம்!!
அப்படி என்ன விவிலியம் வித்தியாசமாக கூறுகிறது ??? 1 நம்மை சிந்திக்க வைக்கிறது ---நாம் மாறுவதற்கு ( விபசார பெண் –கல்லெறிதல் முதியோர் ஓட்டம் ) 2 ஒருவன் எத்தனை முறை தவறு செய்தாலும் அவனை மன்னித்து விடு ( மற்ற மார்க்கங்கள் –பழி வாங்கு- தீங்கு செய் – வெறுத்து ஒதுக்கு ) 3 தூற்றுவோருக்காக ஜெபியுங்கள் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள் ( மற்றவர்கள் – தூற்றுபவன் மீது வழக்கு போடு ) 4 பணத்தின் மீது பற்று வைக்காதே –விண்ணகத்தில் இடம் பிடி ( பணம் சம்பாதிக்க எந்தெந்த வழிகள் உண்டோ-எல்லாவற்றையும் பயன்படுத்தி பணம் சேர் ) 5 உன்னிடம் உள்ளத்தை பகிர்ந்து கொள் ( மற்றவர்களிடமிருந்து பறித்துக் கொள் ) 6 மகிழ்ச்சியை உற்பத்தி செய்---மகிழ்ச்சியை பகிர்ந்து கொள் ( மற்றவனை துன்புறுத்தி நீ மகிழ்ச்சியாய் இரு ) 7 கடவுளை சார்ந்திரு ( மனிதனை, வக்கீலை , டாக்டரை ,ஆடிட்டரை ,சார்ந்திரு ) 8 மனிதனை மதித்து நட ( மனிதனை மிதித்து நட ) இத்யாதி ----இத்யாதி
இயேசுவின் வழி தனி வழி –அதிலே பயணம் செய்... கொஞ்ச தூரம் நீ நடப்பாய்... மீதி தூரத்தை அவர் நம்மை தூக்கி கொண்டு செல்வார்