merry christmas to all

விடியல்


ஒரு சரணாலயமே குயில்களை தேடி வந்த குதுகல சுபநாள்!
மண்ணக மாந்தரின் விடியல் நாள்..
சோர்ந்து போன மனிதஇனத்தை, சித்தமிழந்து சிதறிபோன
மானுடத்தைவிண்ணின் மைந்தர்களாய்வென்றெடுக்க
இறைமைந்தன் மனித வடிவங்கொண்டு
மண்ணுலகை முத்தமிட்ட நாள்!
இறைவனே இனிய மேகமாய் புறப்படுவான்!
மழையாய்! பனித்துளியாய்!
சரிந்துபோன இப்பிரபஞ்கத்தை
நனைத்திட்ட....
ஈரநாளே இந்நாள்!

வானமே தலையில் வந்தமர்ந்து வேதனை கொண்ட ஏழைகளுக்கு ஆனந்தம் அமைதி என்று பறைசாற்றிய நாள்! சகாராவை வனமாக்க நைல் நதியே இராசநடை போட்டநாள்! அதே வேளையில் யூதர்களின் அரசன் பிறந்திருப்பதெங்கே? என்று ஏரோதிடம் ஞானிகள் வினவ, அடிப்பட்ட நாகமாய் சீறி எழ! எங்கே? ஏன் இராஜங்கத்தில் இன்னொரு சிங்கமா? என் அரியாசனத்திங்கே ஆட்டமா? என்று வெகுண்டான். கொதித்தான். தன்னிலை மறந்தான். இளஞ்சூரியனுக்கே கண்ணி வைக்க எண்ணினான் மூடன்.

மறைத்தால் தாழை மனம் குறையுமா? நெருப்பில் சுடுவதால் தங்கம்தான் குறையுமா? சரி. இந்த வரலாற்றறை அடைப்புகுறிக்குள் திணித்து விட்டு அடுத்து வரும் வரிகளை படிப்போம்! இறைமகனின் பிறப்பு அன்று யூதகுலத்தை அதிர வைத்தது.

இன்று
கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டங்கள்
அர்த்தமற்றுப் போய்விட கூடாதே என்பதே எம் ஆதங்கம்!
எட்டு திசைக்கும் விழிகளை சுழற்றுங்கள்!
படிப்பிருக்கும் - வேலையிருக்காது!
அடுப்பிருக்கும் - சோறுஇருக்காது!
வேலையிருக்கும் - வீடிருக்காது!
தாய் இருக்கும் - உறவு இருக்காது!
படகு இருக்கும் - நதி இருக்காது.
வழக்கு இருக்கும் - நீதி இருக்காது!
சாலை வாழ் மக்களுக்கோ கூரை இல்லை!
வானமே எல்லை! - உறக்கம் இல்லை!
சுமைகளே கூரையாகி வாழ்பவர் பலர்!

உணர்வே இன்றி உறங்குகின்றோம். இது உறக்கமா? அல்லது மயக்கமா? மனிதவாழ்வு களவாடப்பட்டுள்ளதே! சிறைபிடிக்கப் பட்டுள்ளதே! இதனை வென்றெடுக்கவே மனுமகன் மனிதன் ஆனார். பெருவிழா கொண்டாடும் நாம் ஓர் உறுதி கொள்வோமா? உமது பிறப்பு, சாதி, சமயம், இனம், மொழி கடந்தது என்பதை ஏன் இன்னும் மானிடர் சிறை வைத்துள்ளனர். தகர்த்தெறிந்து உன்னையே அடுத்தவருக்காய் தாரைவார்த்து கொடு. இன்று இனவெறியால் துயறுரும் ஈழத்தமிழனை நினைவில் கொள்! உன் பணிக்காய் இமயமே இறங்கி வரும்! என்ற நினைவலைகளோடு கிறிஸ்து பிறப்பு விழா உன்னில் நிகழ்த்தும் செயல் தான் என்னே! சிந்திப்பாய்!

Good Shepherds at their watch

டிசம்பர் 25 கிறிஸ்து பிறப்பு விழாவிடியலை நோக்கி பயணிக்கும் புதிய நாள்வாருங்கள் அவருடன் செல்வோம்.



கிறிஸ்துமஸ் மடல்-2010

santa
home

வழங்கியவர்:
திருமதி அருள்சீலி அந்தோணி
ஆலந்தூர்
சென்னை

 

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com