ஆண்டவராகிய இயேசுவே! உறுதியான நம்பிக்கையைப் பற்றியெரியும் அன்பை எளிமையான ஆன்மீக சாட்சியத்தை மனித நேயத்தை மாண்பை அதிஉன்னத வகையில் போதித்த மாண்புமிகு ஆசிரியையாக அன்னை தெரசாவை எங்களுக்கு முன்னுதாரணமாகத் தந்தீரே! திருச்சபையின் புனிதரகளில் ஒருவராக நாங்கள் வணங்கவும் பின்பற்றவும் அவரை உயரத்துவீராக!
அவரது பரிந்துரையால் நாங்கள் கேட்கும் வரங்களைத் தந்தருளும்.
(இங்கு உங்கள் விண்ணப்பங்களைக் குறிப்பிடுக.)
அன்னை தெரசாவைப் பின்பற்றிச் சிலுவையிலிருந்து வரும் உமது குரலுக்குச் செவிமடுத்து இவ்வுலகம் அன்பைத்தர மறுத்து ஒதுக்கிததள்ளும் ஏழை எளியோரகளில் நீர மறைந்து நின்று வேதனையுறுகின்றீர என உணரந்து இம்மக்களின் வழியாக உம்மை நாங்கள் மகிழ்ச்சியோடு அன்பு செய்ய எங்களுக்கு வரம் தருவீராக. ஆமென்.
அன்னை தெரசாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்