இறைவன் நம்மை அன்பு செய்வது போல நாமும் ஒருவரையொருவா; அதிக அக்கறையோடும் தனிப்பட்ட அன்போடும் அன்பு செய்வோம். ஒருவருக்கொருவர் தயவு காட்டுவோம்.
அன்பில்லாமல் அற்புதம் செய்வதைவிடச் சாந்தத்தோடு தவறு இழைப்பதே பரவாயில்லை.
யாருமற்ற இந்த அனாதைகளிடம் நான் இயேசுவை கண்டுக்கொள்கிறேன். இதோ பாருங்கள், இந்தக் கிறிஸ்துவுக்கு உடலெல்லாம் புண்ணாக இருக்கிறது. இந்த முதியவரும் இயேசு தான். இவர் பசியால் வாடும் கிறிஸ்து. என் கண்முன்னே இருக்கும் இவர்களை இறை சொருபமாகவே பார்க்கிறேன். அவர்களுக்குச் சேவை செய்வதே கிறிஸ்துவுக்குச் செய்யும் சேவை.
எத்தகைய இன்னல்கள் வந்தாலும் அதனைப் பொறுமையோடு ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். இடையூறுகளைப் பொறுத்துக் கொள்ளும் போது பொறுமையைக் கற்றுக் கொள்கிறோம். போற்றா ஓழுக்கம் புரிந்தோரையும் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அடக்கமும் பொறுமையும் தூய்மையான வாழ்வின் இரு கூறுகள் ஆகும்.
நாமெல்லாம் மற்றவர்களை நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அயலானிடம் அன்பு பாராட்டத் தெரிந்து கொள்வது நல்லது. அடுத்தவர்களிடம் பாசத்தைத் தாராளமாகப் பொழியப் பழகிக் கொள்வதும் அவசியம். அப்போதுதான் அந்த நேசத்தை, அன்பை, பாசத்தை ஏற்றுக்கொள்வதற்கு நாம் பழகிக் கொள்வோம். எல்லா பருவக் காலங்களிலும் கிடைக்கும் கனி அன்பே.
இறைவா! பிறரிடம் ஆறுதல் தேடுவதைவிட, பிறருக்கு நான் ஆறு தல் தரவும், பிறர் என்னைப் புரிந்திடல் வேண்டுமென்பதைவிட, நான் பிறரைப் புரிந்து கொள்ளவும், பிறர் எனக்கு அன்பு செய்தல் வேண்டுமென்பதைவிட, பிறருக்கு நான் அன்பு செய்திடவும் உதவி செய்வீராக! ஏனெனில் தன்னல மறுப்பிலேதான் பொதுநலமும், மன்னிப்பிலேதான் பெருமன்னிப்பும், இறப்பிலேதான் மரணமில்லாப் பெருவாழ்வும் பெற முடியும்.
எத்தகைய இன்னல்கள் வந்தாலும் அதனைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். இடையூறுகளைப் பொறுத்துக் கொள்ளும்போது பொறுமையைக் கற்றுக்கொள்கிறோம். போற்றா ஒழுக்கம் புரிந்தோரையும் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அடக்கமும், பொறுமையும் தூய்மையான வாழ்வின் இரு கூறுகள் ஆகும்.