கொல்கத்தாவின் அழுக்குத் தெருக்களில் ஒன்று அது. தெருவின் ஓரத்தில் ஓரு கடையில் நிற்கிறார் அன்னை. அனாதைக் குழந்தைகளுக்காக அவர் தொடங்கிய ஆசிரமத்திற்கு நன்கொடைக்காகக் கை ஏந்தி நின்கிறார். கொல்கத்தா துப்புறவுத் தொழிலார்களின் சீருடையில் (நீல பார்டரிலான வெள்ளைச் சேலை) நிற்கும் அன்னையை அருவருப்போடு பார்க்கிறான் அந்தப் பணக்கார நகை வியாபாரி. ”ஐயா அனதைக்குழந்தைகளுக்கு ஏதாவது கொடுத்து உதவுங்கள் ” ஏந்திய கரங்கள் அவன் முன்பு நீள்கின்றன. தன் முன் நீண்ட உள்ளங்கையில் காரி உழ்ழிகிறான் அவன். அன்னையின் முகத்தில் புன்னகை மாறவேவில்லை. ”ஐயா, இப்போது நீங்கள் கொடுத்ததை நான் எடுத்துக் கொள்கிறேன். ஆனால் குழந்தைகளுக்கு ஏதாவது நிதி உதவி செய்யுங்கள்”. அதிர்ச்சியில் உறைந்து தலை குனிந்து கொள்கிறான் அவன்.
அமெரிக்க நாட்டின் செனட்டர்களில் ஒருவரான ராபர்ட் கென்னடி அன்னையைக் காண ஆசிரமத்துக்கு வந்தார். அந்த ஆசிரத்தில் அன்னை தொழுநோயளார் பிரிவில் துணித் துவைத்துக் கொண்டிருக்கிறார். அன்னை வருவதற்குக் காத்திராமல் நேரே அவர் பணிச் செய்து கொண்டிருக்கும் இடத்துக்கே செல்கிறார் ராபர்ட் கென்னடி. துவைத்துக் கொண்டிருந்த அன்னையிடம் கைகுலுக்கும் நிமித்தமாகக் கையை நீட்டுகிறார் கென்னடி. பதிலுக்குத் தன் கைகளை நீட்டாமல் ”என் கைகள் அழுக்காக இருக்கின்றன ' என்கிறார் அன்னை. ”அன்னையே! சேவையால் அழுக்கடைந்துள்ள இந்தக் கரங்களைத் தொட விரும்புகிறேன். அதை எனது பேறாகக் கருதுகிறேன்” என்றார் ராபர்ட் கென்னடி.
கொல்கத்தா காளிக் கோயில் ஒன்றின் வயது முதிர்ந்த அர்ச்சகர் ஒருவர் ஆதரவின்றித் தெருவில் விடப்பட்டார். பசியும் நோயும் வாட்டிய அந்த முதியவரை அன்னை தன் ”நிர்மல் ஹிருதய்” ஆசிரமத்தில் சேர்த்துக் கவனித்து வந்தார். அந்த அர்ச்சகர் ஒரு காலத்தில் இந்த ஆசிரமத்துக்கெதிராக இடையூறுகள் செய்ய முயன்றவர். அப்படிப்பட்டவரை அன்னை எவ்வித வருத்தமுமின்றிக் காப்பற்றி ஆதரித்தார். அந்த அர்ச்சகர் தன் இறுதி நாளில் கூறிய வார்த்தைகள் மிக முக்கியமானவை. ''நான் உலகமாதாவை என் வாழ்நாளெல்லாம் பூசித்தேன். கடைசியில் அன்னையின் உருவில் உலகமாதா எனக்குத் தரிசனம் தந்தாள்.”