முகப்பு | வரலாறு | நிகழ்வுகள் | விருதுகள் | அமுதமொழிகள் | மன்றாட்டு |  அன்பின்மடல்

mother teresa young

இறையன்பின் ஒளிமயமாக உலாவந்த அமைதிப்புறா ஆகஸ்ட் மாதம் 26ம் நாள் 1910ம் ஆண்டில் அல்பேனியாவின் ஸ்காப்ஜே நகரில் நிக்கோலா-திரானா என்ற கட்டிடத் வல்லுனரின் முன்றாவது குழந்தையாகப் பிறந்தார். ஆக்னஸ் கொன்சகா பொஜாக்ஸியு என்பது தான் அன்னையின் இயற்பெயர். இயேசு சபையினரால் செவ்வனே நடத்தப்பட்ட தூய இயேசுவின் திரு இருதயப் பங்குக் கோவிலில் அவரது ஆன்மீகம் வளர்ந்தோங்கியது. ஐந்தரை வயதில் புதுநன்மை முலம் இறை இயேசுவைத் தன் உள்ளத்தில் பெற்றவா;, 1916ம் ஆண்டில் தூய ஆவியில் திருநிலைப்படுத்தப் பட்டார்.


தனது 18ம் வயதில் 1928ம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் உள்ள லொரேட்டோ கன்னியர் சபையில் துறவியாகத் தன்னையே இணைத்துக் கொண்டார். டிசம்பர் 1ம் தேதி, 1928 ஆண்டு இந்தியத் திருநாட்டிற்குப் பயணித்தவர் ஜனவரி 6ம் தேதி 1929 ஆண்டுக் கொல்கத்தா வந்தடைந்தார். அங்குள்ள புனித மேரிஸ் பள்ளியில் புவியியல் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.


மே 24ஆம் தேதி 1931 ஆம் ஆண்டில் 16ம் நூற்றாண்டின் ஸ்பெயின் நாட்டுப் புனிதை அவிலா தெரசாளின் ஞாபகமாகத் தெரசா என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு துறவற வாழ்க்கையின் முதல் வார்த்தை எடுத்துக் கொண்டார். மே 14ம் தேதி 1937ஆம் ஆண்டுத் தனது துறவற வாழ்வின் இறுதி வார்த்தைப்பாட்டை எடுத்துக்கொண்டார். 1931ம் ஆண்டு முதல் அதே பள்ளியின் ஆசிரியையாகப் பணியாற்றியவர் 1944ம் ஆண்டு அதன் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார்.


செப்டம்பர் மாதம் 10ந் தேதி, 1946ம் ஆண்டில், கொல்கத்தாவிலிருந்து டார்ஜுலிங்குக்கு ரயிலில் பயணித்தபொழுது, ”வா மகளே, என் ஒளியாக இரு”என்று இறைவன் அவரோடு பேசினார். ஆயிரக்கணக்காக ஏழைகள் சாக்கடையிலும், வீதிகளிலும் இறந்து மடிந்துக் கொண்டிருக்கின்றனர். நான்கு சுவர்கள் மத்தியில் நீ முடுங்கிக்கிடக்கின்றாயே? ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கச் சாக்கடையிலும், குப்பைத்தொட்டிகளிலும் வீசி எறியப்பட்டுள்ள குழந்தைகளையும், வயோதிகர்களையும் காப்பாற்று. தன்னந்தனியாக என்னால் செய்ய முடியாது. உனது உதவி எனக்குத் தேவை என்று இறைவன் அவரோடு பேசினார்.


தனது எண்ணத்தைத் தன் ஆன்மகுருவான இயேசு சபையைச் சார்ந்த அருட்தந்தை வான் எக்சம் என்பவரிடம் தெரிவித்தார். அவர் உதவியுடன் பல சோதனைக்குப் பின் ஆகஸ்ட் 17ம் தேதி 1948ம் ஆண்டில் நீல வண்ணப் பட்டைகள் கொண்ட வெள்ளைச் சேலை உடுத்தி லொரேட்டோ மடத்தை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு வயது 39. முன்று மாத காலம் பாட்னாவில் மருத்துவப் பயிற்சிப் பெற்றுக் கொல்கத்தா வந்தவர் தற்காலிகமாக ஏமைகளின் சிறிய சகோதரிகளின் இல்லத்தில் இருந்தார். டிசம்பர்21ம் தேதி 1948ஆம் ஆண்டு வீதியோரம் செத்துமடிந்து கொண்டிருந்த ஏழைகளை வாரியணைத்துத் தூக்கிப் பராமரிக்கும்பணியில் ஈடுபட்டார்.


மார்ச் 19ம் தேதி 1949ஆண்டிலிருந்து சகோதரி தெரேசா அன்னை தெரேசாவாக மாறினார். திருதந்தையின் அங்கீகாரத்துடன் அக்டோபா; 7ம் தேதி 1950 ஆண்டு மிஷனரிஸ் ஆப் சேரிட்டி என்ற துறவறக் கன்னியர் சபை அதிகாரப்பூர்வமாகக் கொல்கத்தா மறைமாவட்டத்தில் தொடங்கப்பட்டது.


மரணத்தின் விழிம்பின் ஓரத்திற்கு வந்தவர்களுக்கு என்று நிருமல் ஹிருதய் தொடங்கப்பட்டது. பிப்ரவரி 1965 ஆண்டு டிட்டாகூர் என்னும் இடத்தில் தரிசு நிலமாக இருந்த 34 ஏக்கர் நிலத்தை அன்றைய மேற்கு வங்க முதல்வர் திரு பி. சி. ராயிடம் பெற்றார். இப்போது காந்திஜி பிரேம் நிவாஸ் என்று அழைக்கப் படுகிறது. பிப்ரவரி 15ஆம் தேதி 1953 ஆண்டில் குழந்தைகளுக்காகச் சிசுபவன் ஆரம்பிக்கப்பட்டது.


தந்தை வான் எக்சம் அடிகளாரின் செல்வாக்கில் அவரது முஸ்லிம் நண்பர் ஜனப் இஸ்லாம் என்பவர் கட்டியிருந்த வீட்டை ரூபாய் 1,20,000 கொடுத்து வாங்கினார். லோயர் சர்க்குலர் வீதியில் 54எ என்கிற எண் கொண்ட அந்த இல்லத்தில் பிப்ரவரி மாதம் 1953 ஆண்டில் குடியேறினார். இதுவே அவரது சபையின் தாய்மடமாகவும், தலைமை அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது. 1959-ல் முதற்கிளையாக ராஞ்சியிலும் புதுடில்லியிலும் தொடங்கினார்.


தனது பணியைச் செவ்வனே தொடர்ந்து நடத்த 5 சபைகளை நிறுவினார்.
1.மிஷனரிஸ் ஆப் சேரிட்டி- துறவறக் கன்னியர் கிளை-1950
2.மிஷனரிஸ் ஆப் சேரிட்டி- துறவறச் சகோதரர் கிளை-1963
3.மிஷனரிஸ் ஆப் சேரிட்டி- துறவற மௌனக் கன்னியர் கிளை-1963
4.மிஷனரிஸ் ஆப் சேரிட்டி- துறவற மௌனச் சகோதரர் கிளை-1979
5.மிஷனரிஸ் ஆப் சேரிட்டி- துறவறக் குருக்கள் சபை 1984
அன்னை இறந்தசமயத்தில் அவரது சபையில் 4000 கன்னியர்களும், 300 துறவறச் சகோதரர்களும், 1,00,000 உடன் உழைப்பாளரும், 610 மடங்களும் 123 நாடுகளில் பரவி இருந்தது.


இவரது பணிக்காகப் பெற்ற விருதுகள் பல.
பத்மஸ்ரீ விருது, பாப்பிறை 23மருளப்பர் அமைதி விருது, நோபல் பரிசு, பாரத் ரத்னா விருது
1983ஆம் ஆண்டு முதன் முறையாக அன்னைக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உடல் நலம் குறை ஆரம்பித்தது.
செப்டம்பர் 5ம் தேதி 1997ஆம் ஆண்டில் இறைவனோடு இரண்டறக் கலந்து இறைபதம் சேர்ந்தார்.
செப்டம்பர் 13ம் தேதி 1997ஆம் ஆண்டில் வரலாறு காணாத மாபெரும் இறுதி ஊர்வலத்தில் பல்வேறு நாடுகளின் அரசர்கள், அரசிகள், தலைவர்கள், பிரதம மந்திரிகள், பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.


காந்தி, நேரு இவர்களின் பூதடலைத் தாங்கிய அதே பிரங்கிவண்டி அன்னை தெரசாவின் புனித உடலைத் தாங்கிச் சென்றது. இந்திய தேசிய கொடி அவரது பூதவுடல் மீது போர்த்தப்பட்டது. தேசமரியாதையுடன் பீரங்கிமுழங்க அவரது புனித உடல் மிஷனரிஸ் ஆப் சேரிட்டித் தாய் மடத்தில் அடக்கம் செய்யப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது.

வாழ்க புனித அன்னை தெரேசாயின் புகழ் !