சின்னசிறியவர்களுக்கு...
நம் இதயவேந்தனாம் இயேசுவின் பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்.
பல்வேறு பிறந்தநாள் கொண்டாட்டங்களை நாம் கடந்து வந்தாலும், ஒவ்வொரு வருடமும் இறைஇயேசுவின் இந்த பிறந்தநாள் - கிறிஸ்மஸ் பெருவிழா நாம் அனைவரின் உள்ளத்திலும் இல்லத்திலும் சிறப்பான இடம் பெறுகின்றது. இது ஒரு அன்பின் பெருவிழா, பகிர்வின் திருவிழா இறைமகன் இயேசு தன் அன்பின் பகிர்வாக தன்னைத் தியாகம் செய்து மனிதனாய் கடும் குளிரில் மாட்டுதொழுவமதில் பிறந்தார். அவர் எந்த பிரதிபலனும் பாராது இதனைச் செய்துள்ளார் என்றால் நாம் இந்த பெருவிழாவை எப்படி சிறப்பிக்க வேண்டும்.?
மீண்டும் நமக்கு உதவி செய்ய முடியாத அல்லது உதவி பெற முடியாத நிலையில் உள்ளவருக்கு கிறிஸ்;து பிறப்பு பெருவிழா பரிசுகள் கொடுத்து அன்பின் பகிர்வை கொண்டாடுவோம். இதை தான் இயேசுகிறிஸ்து நமக்காய் செய்துள்ளார். எனவே இயேசுவின் சின்னசிறியவர்களுக்கு உதவும் போது இயேசுவின் இந்த பகிர்வை, கரிசனை அன்பை நாம் நிறைவு செய்ய முடியும். இதையே குழந்தை இயேசுவும் நம்மிடையே எதிர்பார்க்கின்றார்.
கிறிஸ்மஸ் விழா காலம்-உல்லாச விடுமுறை காலம் என்று இல்லாமல், இறைஇயேசுவின் அன்பில், அவரையே மையமாகக் கொண்டு நம் அயலாரோடு அவரின் அன்பை,மீட்பை பகிர்ந்தக் கொள்ளும் விழாவாக கொண்டாடுவோம்.
வண்ண வண்ண வாழ்த்துஅட்டைகளுக்காக அஞ்சல் ஊழியரை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த காலம்! அந்த இனிய நாட்கள் மறைந்து வரும் வேளையில் தொலைபேசியின் வாயிவாக மறக்காமல் நம் அன்பு வாழ்த்துக்களை பரிமாறி, பெரியவர்களின் ஆசீர் பெற முயற்சிப்போம். இந்த பகிர்வின் விழாவை இறை இயேசுவின் எண்ணங்கள் நிறைவேறும் வகையில் கொண்டாடுவோம்.