Merry Christmas



--
-
xmas

கிறிஸ்மஸ் பிராத்தனை!

எங்கள் அன்பு தந்தையே!

கிறிஸ்து பிறந்த இந்நாளில் வானதூதர்களின் பாடலையும், இடையர்களின் மகிழ்ச்சியையும், ஞானிகளின் ஆராதனையையும் நாங்கள் நினைந்திட அருள்புரிவீராக! நாங்களும் எங்கள் இதய குடிலைத் திறந்து துதி பாடி மகிழ்ந்து உம்மை ஆராதிக்கின்றோம்.

இவ்வுலகில் வெறுப்பு என்னும் கதவை முடி அன்பு என்னும் கதவு திறந்திடட்டும்! ஒவ்வொரு அன்பின் பகிர்விலும் உம் கருணை நிறையட்டும்! ஒவ்வொரு வாழ்த்துகளிலும் மனிதநேயம் பெருகட்டும்! குழந்தை இயேசுவின் வரவு எங்களுக்கு பாவங்களிலிருந்து விடுதலை தரட்டும்! தூயதோர் உள்ளத்தை என்னகத்தே உருவாக்கும்!

இந்த கிறிஸ்மஸ் நாளில் உம் பிள்ளைகளாக மகிழ்ந்திருக்கவும், நல்ல எண்ணங்களையும், மன்னிக்கும் பண்பையும், மன்னிப்பையும் குழந்தை இயேசுவின் பெயரால் எங்களுக்கு அளித்தருளும். ஆமென்

இந்த அமைதியின் பெருவிழா உங்கள் அனைவரின் இல்லங்களில், உள்ளங்களில் இயேசுவின் அன்பையும் அமைதியையும் நிறைவாய் பொழிவதாக!!!

நவராஜன்-அன்பின் மடல் தொகுப்பாளர்


home