Merry Christmas



--
-
mary with baby Jesus

அன்பின் சீடர்களாய் வலம் வருவோம்!

'அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சி ஊட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்." லூக்கா 2: 10

கிறிஸ்துவின் அன்பு வாசகர்களுக்கு இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள். பல்வேறு விதமான பிரச்சனைகளின் நடுவே வாழும் நாம், இவ்வாண்டில் பல அழிவுகளையும், பயங்கரவாதத்தையும் தாண்டி வந்திருக்கும் வேளையில், அன்பின் வெளிப்பாடான கிறிஸ்துமஸ் விழா நம்மை எதிர்நோக்குகிறது. கிறிஸ்துவின் உடன் உழைப்பாளாராகிய நம் ஒவ்வொருவரையும் எதிர்கொண்டு இருக்கும் சவால்களை, குறிப்பாக மதவெறி போன்ற நிகழ்ச்சிகளை சந்திக்க அன்பு என்ற ஆயுதம் நமக்கு தேவைப்படுகிறது. தாம் அன்பு தெரிந்தும் கிறிஸ்து இவ்வுலகில் பிறக்க தந்தை திருவுளமானார். இந்த அன்பு தந்தையின் விருப்பத்தை கிறிஸ்து முழுவதும் செய்து முடித்தார். இதைத்தான் அவர் பிள்ளைகளாக சுவீகரித்துள்ள நாமும் செய்யவேண்டும் என்பதே இறை விருப்பம்.

வாக்குறுதிகளின் இருப்பிடமாம் நம் கடவுள் தாம் முன்குறித்த இறைமகன் (மீக். 5:2, மலாக்கி 3:1, எசா 9:2, எசா 9:6,7) நம்மிடையே பிறக்கச் செய்தார். லூக்கா நற்செய்தியாளார் வானதூதர் இடையிரிடையே தோன்றியபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்;தது என்றும் விண்ணகத்தூமரணி மகிழ்ச்சிப்பண் இசைத்தது என்றும் கூறுகிறார் மேலும் பெத்தலேகம் சென்ற இடையர் தாம் கேட்டது, கண்டது உண்மை என அறிந்த போது, அதைஅனைவரிடமும் பறைசாற்றி, இறைவனை புகழ்ந்து பாடிய வண்ணம் திரும்பியதாக அறிகிறோம். இதைக் கேட்டோர் பெரும் வியப்புக்குள்ளாகினர்.

அன்னை மரியாள் இந்நிகழ்ச்சிகளை தியானித்தது போல, நாமும் இந்நன்னாளில் அன்பு இயேசுவை தியானித்து அவர் வாக்களித்த அமைதி, மாட்சி, மகிழ்ச்சி ஆகியவற்றைச் சுவீகரித்துக் கொள்ள அனைவரிடமும் அன்பாய்
அன்பின் சீடர்களாய் வலம் வருவோம்....

டாக்டர்.ஜே.கிளிங்டன்
நிர்வாக ஆசிரியர், சீயோன் குரல்
home