Merry Christmas



--
-

கடவுள் அன்பாயிருக்கின்றார்.

come and adore

இருளை அகற்ற வந்தார்
பகைமையை விரட்ட வந்தார்
உறவை வளர்க்க வந்தார்
இருள் சூழ்ந்திருந்த நடுநிசியில் - இரவில் இயேசு பாலகன் இருளை அகற்றி ஒளியேற்ற ஒளியாகவே வந்தார். விண்மீன் என்ற ஒளியானது மூவரசர்களுக்கு ஒளியாக, பாதையாக, அருளாக அமைந்தது. விண்மீனின் வழிநடத்துதலைக் கண்டு விசுவசித்து உண்மையான ஒளியை நேரில் கண்டு மகிழ்ந்தனர். ஞானிகளாக இருந்த அவர்கள் சாலமோனைவிட மேலான ஞானியாக இயேசுவைக் கண்டது அவர்களது தாழ்ச்சிச்கும், விசுவாத்திற்கும் ஒரு சன்மானம்.

இயேசு பிறந்த வேளையில் ஏரோதைப் பகைமை ஆட்டிப் படைத்தது பகைமை கோபத்திற்கும், பழிவாங்கும் தன்மைக்கும் இட்டுச் சென்றதுமன்றி சிசுக்களைக் கொலை செய்யும் அளவுக்கு அவரைத் தள்ளியது. இத்தகைய பகைமை இன்றும் மத, இனவெறிகளால் மக்களை ஆட்டிப் படைக்கின்றது. இப் பகைமையைப் போக்கி அன்பு என்ற ஒளியேற்ற இயேசு பாலகன் மீண்டும் மண்ணில் பிறக்கத் தயாராகின்றார். இப் பகைமையை இன்று நாம் ஒழிக்க வேண்டுமென்றால் அது நம் வழியாகத் தான் சாத்தியமாகின்றது.. நம்முடைய ஒத்துழைப்பின்றி பகைமையை இவ்வுலகிலிருந்து அகற்ற முடியாது. என் அயலான் என் நண்பன் என்று கருதி செயல்பட்டால் இப்பகைமை இவ்வுலகிலிருந்து அகன்றுபோகும்.

உறவை நிலை நாட்ட வந்தார் இயேசு பாலன் இறை - மனித - மனித - மனித உறவை வளர்க்கவே இறைவன் மனிதனானார். 'யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என்ற தாரக மந்திரத்தை நம்வாழ்வில் நிலைநாட்டினால் தான் இந்த உறவு நம் இதயத்தில் உருவாகும். நம் உள்ளத்தில் உருகொடுக்க நம்மை இயேசு பாலகன் அழைக்கின்றார், இந்த உறவு நம் உள்ளத்தில் உருவானால், நேர்மை நம் இல்லங்களில் நிலை நிற்கும். அந்த நேர்மையிருந்தால் உலகில் அமைதி நிலவும்.

இருளை அகற்றி, பகைமையை விரட்டி, அன்புறவை நிலை நாட்ட உங்களை ஒரு கருவியாக இறைவன் பயன்படுத்துவாராக!

இறையாசீர் என்றும் உங்களோடு!
அருட்தந்தை தம்புராஜ் சே.ச.
home