வாழ்த்துகள் அன்புடன்...

xmas

இரக்கம் காட்டி உதவும்போது நான் உன்னில் பிறப்பேன்!!
மகிழ்வுடன் கொடுக்கும்போது நான் உன்னில் பிறப்பேன்!!
மனமுவந்து மன்னிக்கும்போது நான் உன்னில் பிறப்பேன்!!
எக்காரணத்தைக் குறித்தும் தீர்ப்பிடாதபோது நான் உன்னில் பிறப்பேன்!!
பொறுமையில் நிலைத்திருக்கும்போது நான் உன்னில் பிறப்பேன்!!
எளியவரிடம் சமமாகப் பழகும் போது நான் உன்னில் பிறப்பேன்!!
துன்பங்களை ஏற்றுக்கொள்ளும்போது நான் உன்னில் பிறப்பேன்!!
பிறர் உயர்வில் மகிழும்போது நான் உன்னில் பிறப்பேன்!!
தாழ்ச்சியுடன் பணிபுரியும்போது நான் உன்னில் பிறப்பேன்!!
பிறரை உயர்வாகக் கருதும்போது நான் உன்னில் பிறப்பேன்!!
தீமைச் செய்பவர்களுக்கு நன்மைச் செய்யும்போது நான் உன்னில் பிறப்பேன்!!
சபிக்கிறவர்களுக்கு ஆசி வழங்கும்போது நான் உன்னில் பிறப்பேன்!!

இந்நன்னாளில் இறைமகன் இயேசு பாலன் நம் உள்ளத்திலும், நம் இல்லத்திலும் பிறக்க வேண்டும். நம் வாழ்வின் மையமாக அவர் இருக்க வேண்டும். அவரை விட்டுபிரியாமல், நாம் என்றும் அவரில் இணைந்திருக்க வேண்டும். மேலே படித்த கவிதையைப் போல் நம் நற்பணிகள் மூலம் அவர் நம்மில் தினமும் பிறந்திட வேண்டும். பிறந்தபோது அமைதியைத் தந்தவர் விண்ணகம் சென்றபோது அந்த அமைதியை நம் உள்ளத்தில் பதித்துவிட்டுச் சென்றார். அந்த அமைதியைப் பகிர்ந்திடுவோம். அன்பின் தூதராய் தரணியில் வலம் வருவோம்.

அன்பு நிறை இணையத்தளப் பார்வையாளர்கள் அனைவருக்கும் அன்பின்மடல் தனது 18ஆம் ஆண்டுக் கிறிஸ்மஸ் சிறப்பு மலரைக் காணிக்கையாக்கி மகிழ்கிறது. உங்களின் கனிவான ஆதரவுக்கு என்றும் எங்கள் நன்றியும், செபங்களும்..
எம்மை உற்சாகத்துடன் பணியாற்ற ஊக்குவிக்கும் அருள்பணியாளர்களுக்கும், பார்வையாளராகிய உங்கள் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்தக் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நல்வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இணைந்துச் செயல்படுவோம் இறையரசை அறிவிக்க...

என்றும் உங்கள் பணியில்
நவராஜன் - அன்பின்மடல்

www.anbinmadal.org ++2002-2019++ Tamil Catholic website. Email ID: anbinmadal at gmail.com