தேடிவந்த இயேசு

நாம் இந்த உலகில் பிறந்தது முதல் எத்தனையோ கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறோம்? நாம் இதை எப்படி கொண்டாடுகிறோம்? பிறரை சந்தோஷப்படுத்தவா? அல்லது இயேசு நம் உள்ளத்தில் பிறந்த மகிழ்ச்சியிலா?

இயேசு நம் உள்ளத்தில் பிறக்க நாம் என்ன செய்யவேண்டும்?

மத். 25:40 வசனத்தில் இயேசு “இச்சின்னஞ்சிறிய சகோதரருக்கு இவற்றை செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்” என்று கூறுகிறார். ஆம் நாம் நம்மைச் சுற்றி வாழ்வோர், தேவையில் உழல்வோர், அநாதைகள் ஆதரவில்லாமல் வாழ்வோர், வீடுகளிலே தனிமையிலே இருப்போர், ஊனமுற்றோர், முதியோர், பிற மக்களால் ஒடுக்கப்பட்டோர், வியாதிப்படுக்கையில் இருப்போர், மனநோயால் பாதிக்கப்பட்டவர் போன்றோர்க்கு நாம் ஏப்படி நம் உதவிகரங்களை நீட்டுகின்றோம்? நாம் நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களைப் பற்றியே எப்பொழுது சிந்திக்கின்றோம்.

மத் 22:39 ஆம் வசனத்தில் இயேசு ” உன் மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக ” என்று கூறுகிறார். கிறிஸ்துமஸ் திருநாளுக்கு நமக்கு வாங்குவதற்கு நாம் திட்டமிடுகிறோம். அளவுக்கு மீறிய ஆசைகளால் நமக்காக மட்டும் அதிகமாக செலவு செய்கிறோம். ஆனால் பிறருக்கு உதவி என்றால் நம் கை குறுகிவிடும். கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட முடியாதவர்களைப் பற்றி சிந்திக்கின்றோமா?

இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்தால் ஏன் பற்றக்குறை வருகிறது?. உதாரணத்திற்கு பிள்ளைகள் தங்கள் கல்வி ஆண்டு முடிந்தவுடன் பயன்படுத்தாத நோட்டுபுத்தகங்களின் எழுதாதப் பகுதிகளையெல்லாம் பல பள்ளிகளிலிருந்து பெற்று, அவற்றை புதிய நோட்டுகளாக தைத்து ஏழை மாணவர்களுக்கு கொடுக்கிறார்கள். இவ்விதமே ஒவ்வொருவரும் தன்னிடம் உள்ளதை பகிர்ந்து கொண்டு, எல்லோரும் இந்த கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக கொண்டாடினால் கிறிஸ்து நம்மில் பிறப்பார் என்பது உறுதி. வெறும் கொண்டாடங்களே ஆண்டவர் வெறுக்கின்றார். ஆமோஸ் 5:21-ல் உங்கள் திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கின்றேன்” என்று ஆண்டவரே கூறுகின்றார். “ஆண்டவருடைய வார்த்தைக்குக் கீழ்படிவதே எல்லாப்பலிகளை விட மேலான பலியாகும்” என்று 1 சாமு 15:22 கூறுகிறது.

gift லூக் 6:38-ல் இயேசு, “கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்” என்று கூறுகிறார். நாம் எதைப் பிறருக்கு கொடுக்கிறோம்? “ இலவசமாய் பெற்றுக் கொண்டீர்கள், இலவசமாய் கொடுங்கள் “ என்ற வாசனத்தின்படி நாம் ஆண்டவரிடமிருந்து இலவசமாய் பெற்றுக் கொண்ட நம் தாலந்துகளைப் பிறருக்காக செலவு செய்ய வேண்டும். நம்முடைய நேரத்தைப் பிறருக்காக செலவு செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நாம் மன்னிப்பைக் கொடுக்கவேண்டும். நாம் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறோம் என்று சொல்லிக் கொண்டு நம்மை வெறுப்போரையும், எதிர்ப்போரையும் மன்னித்து ஏற்றுக் கொள்ளவிட்டால் என்ன பயன்? மத். 18:35-ல் இயேசு “உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதர சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை உங்களை மன்னிக்கமாட்டார்” என்று கூறுகிறார். எனவே நம் எதிரிகளை மன்னித்து அவர்களை நேசித்தால் அதுவே சிறந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.

2 கொரி 9:7-ஆம் வசனத்தில் “ முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின்அன்புக்குரியவர்” என்று புனித பவுல் கூறுகிறார். நாம் எப்படி கொடுக்கின்றோம்? வரப்போகும் கிறிஸ்துமஸ் திருவிழாக்காக நாம் எப்படி நம்மை தயரிக்கிறோம் என்பது அல்ல மாறாக ஆண்டவர் நம் உள்ளத்தில் பிறந்து, ஆலமரமாக நம்மக்குள் நிரந்தரமாக தங்க வேண்டும். செப் 3:17-ஆம் வசனத்தில் “உன் பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூறுவார்” என்று இறைவாக்கினர் கூறியதுபோல, ஆண்டவர் நம்மைக் குறித்து அகமகிழ வேண்டும்.

christmas greetingsபாவிகளை தேடிவந்த இயேசுவை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? நம் உள்ளத்தில் பாவக்கறைகள் இருக்கும்போது எப்படி இயேசு நம் உள்ளத்தில் பிறக்கமுடியும். 1யோவான் 1:9-ல் “ நம் பாவங்களை நாம் ஒப்புக் கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப் படுத்துவார்." ஆம் ஒவ்வொரு நாளும் நாம் தூய்மை அடைய வேண்டும். நாம் ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, அவருக்குப் பிரியமான வாழ்க்கை வாழும் போது நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் கிறிஸதுமஸ் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

மேரி கிறிஸ்டோபர்- சென்னை 24

icedoll

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com