நமது பாக்கியம்

  • எண்ணற்ற ஆண்டுகளாக
  • ஏங்கி ஏங்கி தவித்தனர்
  • இறைவாக்கினர் பலர் வழிவழியாய்
  • இறைமகனின் வரவை எதிர் நோக்கினர்.
  • மோயிசன் விடுவித்த இஸ்லேயர்
  • மெசியாவை எதிர் நோக்கினர்
  • அவர்களில் பலரும் இறைமகனின்
  • அன்பையும் அறிவுரையும் அடையவில்லை.
merry christmas
  • மாட்டு கொட்டகையில் நள்ளிரவில் பிறந்த
  • மாமன்னர் பாலனை பலரும் பார்த்தனர்
  • அவரின் மகிமையை உணர
  • அருளில்லை மக்கள் பலருக்கு.
  • நமக்கு கிடைத்தது அந்த பாக்கியம்
  • இறைவனின் ஆசீரையும் அருளையும்
  • ஆண்டாண்டு கொண்டாடி மகிழ
  • அளிக்கப்பட்ட நாள் இயேசு பிறப்பு.
  • இந்நான்னாளில்
  • பாக்கியம் பெற்ற நாம்
  • பகிர்ந்து கொள்ளுவோம்
  • இறைவனின் மகிமையையும்
  • நல்மனதோரின் அமைதியையும்
  • வரும் புத்தாண்டில் இறைவனிள் அருளை
  • வளமாக நாம் தினமும் அடையவும்
  • பல நன்மைகள் பெற்றிடவும்
  • பாக்கியமான வாழ்வை பெறுவோம்.


icedoll

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com