வாழ்த்து மடல் | அன்பின் வெளிப்பாடு | பிறப்பில் எளிமை | பகிர்வின் மகிழ்ச்சி | முகப்பு பக்கம்
merry xmas

கிறிஸ்மஸ் -ஓர் அன்பின் வெளிப்பாடே!

md;id khpahs;

ஆதியில் உலகை படைத்த இறைவன், அதன்முத்தாய்ப்பாக மனிதகுலத்தைப் படைத்தார். அவர்கள் தேவைகள் அனைத்தையும் அளித்தார். ஆனால் மனிதனின் வளர்ச்சியில் குறுக்கீடுகள் செய்ய அங்கே வந்தான் சாத்தான். அது முதல் இயேசுவின் காலம் வரை மனிதரிடையே பாவங்கள் அதிகரித்து வந்தது. முதல் நிலையில் உலகின் ஒருபகுதியை அழித்து மீண்டும் நோவா வழியாக புத்தம் புதிய சமுதாயம் தோன்றியது. அதன் பின்னர் அரசர்கள், இறைவாக்கினர்களை கொண்டு மனிதஇனத்தை சீர்த்தூக்கி பார்த்தார். இதுவும் தன் மக்கள் அழிவுப்பாதைக்கு செல்லக்கூடாது என்பதின் வெளிப்பாடே! இறுதியில் மண்ணக மாந்தாரை காக்கவே இயேசுவின் வருகை!!


தான் படைத்த அன்பின் வெளிப்பாடான மனித இனம் ஆதிகாலம் முதல் ஏற்றதாழ்வுகளை உருவாக்கி தமக்குள் வேறுபாடுகள் கொண்டு வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இறைவன் தன் மக்கள் மீது கொண்ட அன்பினால் தன் மகனை ( இறைவாக்கினர் ஏசாயாக் கூற்றுபடி 'கன்னி கருத்தாங்கி மகனை பெற்றெடுப்பாள்" ) சுவக்கின்- அன்னம்மாள் வழியாக சென்மப் பாவமில்லாமல் அன்னை மரியாளை காத்து, அவர் வழியாக இறைமகன் இம்மண்ணகம் வந்து பிறக்கச் செய்தார். முதலில் இடையர்கள், ஞானிகள் தரிசனம் அவரின் அன்பை வெளிப்படுத்துகிறது. இறைமகன் ஏழைஎளிய-ஒடுக்கப்பட்டோர் நோயுற்றோர், அடிதட்டு மக்கள் நலம் பேணவே வந்தார் என்பது தந்தையின் விருப்பம்.


கிறிஸ்துவின் மறையுடலாக உள்ள நாம் அவரின் பிறந்தநாளை கொண்டாடும் வேளையில் நமது உயர்வையே கருதாமல் எளியோரின் வறியோரின் இடங்களை நாடி உதவிக்கரம் நீட்டுவோமா? இறைமகன் 'சின்னஞ்சிறியோருக்கு செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள் " என்று அன்பு கட்டளை இடுகின்றார். இது நமது செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. இதை உணர்வோமா? இதையே அன்னை தெரசா நம் மண்ணில் முத்திரையாக பதித்தார். மேற்கண்ட விதத்தில் நாம் பயணிக்கும் போது இறைமகனின் பிறப்பு அன்பின் பகிர்வாக இருக்கும்.


இதுவே இறைவன் விரும்பும் அன்பின் பகிர்வாகும்.
இதுவே உண்மையான கிறிஸ்மஸ் ஆகும்!
என்ன அன்புள்ளங்களே! செயலாக்கம் தருவோமா?

அருள்சீலி அந்தோணி ஆலந்தூர் சென்னை

அன்பின் மடல் 2007


A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com