வாழ்த்து மடல் அன்பின் வெளிப்பாடு பிறப்பில் எளிமை பகிர்வின் மகிழ்ச்சி முகப்பு பக்கம்
merry xmas

பிறப்பில் ஏழ்மை!

சூசையும் மரியாளுடன் பெத்லகேம் சென்றார்
ஒரு குன்றின் சரிவில் கன்றின் தொழுவில்
இரவு தங்கினர் திங்கள் விளக்கெரிந்தது
தென்றலும் பாடிற்று தேன் சிந்திற்று வானம்

நள்ளிரவு நேரம் நகர மக்கள்
தெள்ளிய துயிலில் தூங்கிடும் நேரம்
கொடுங்குளிர் வாடையும் இருளின் கொடுமையும்
இடுக்கண் தந்தே இப்புவியோரை

வருத்தும் நேரம், வானில் புத்தம் புதிய
உருவுடன் வால்மீன் ஒன்றும் தோன்றிடிட
விண்ணில் மீன்கள் வியந்து பார்த்திட
விண்ணின் அரசன் மண்ணில் குழந்தையாய்
பிறந்திடலானர் திருக்குமரன் உதித்திடலானார்

star
mary&jesus

அறம்வளர் மரியவள் அன்னையாகிட்டாள்
புள்ளினம் ஆர்த்தன,பூவினம் மலர்ந்தன
வண்ணபுறாக்களும் வளைய வந்தன
கழுதைகளும் எருதுகளும் காவல் நின்றன
மெசியா பிறந்த மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!!

வான்தூதர் வந்துரைக்க மேய்ப்பரும் வந்தார்
முன்னட்டியில் பொதிந்து கிடந்த முதல்வனை
கண்டு களித்தனர், காணிக்கை செலுத்தினர்
குவலயத் தலைவனை குழந்தையாய்
புவியில் பெற்றிடும் புதுமை கொண்டனள்

angle
madonna

கன்னி இறைமகன் கனியைத் தந்த
உன்னத நிலைக்கே உயர்த்தப் பட்டாள்
பிறந்த குழந்தையை துணியில் பொதிந்து
கரங்களில் கனியென ஏந்தி தூய
அன்பைப் பொழிந்தாள் அருள் நிறை மரியாள்

மாடுகள் அடையும் மலைக்குன்றில்
கடின உழைப்பாளி தச்சன் வளவன்
மரியிடமாக மாபரன் கடவுள்
திருவுருவெடுத்துப் பிறந்தார் என்றால்
ஏழ்மையின் வடிவால் இருந்த குன்றும்
தூய்மையின் உருவால் துலங்கிய தாமோ?

இறைமகன் ஏழ்மையை ஏற்ற நிகழ்ச்சியில்
மறைந்துள்ள கருத்தை மனத்தில் கொள்வீர் !.

வி.எஸ்.போஸ்கோ. சென்னை 88

அன்பின் மடல் 2007


A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com