jesus
கிறிஸ்மஸ் சிறப்பு மடல்
எந்தன் மீட்பர்-ஆற்றல்-அன்பு-மனிதநேயம்-முகப்பு பக்கம்xline

மனிதநேயம்

jesus கன்னி ஈன்ற செல்வமே - இம்
மண்ணில் வந்த தெய்வமே
என் பொன்னே தேனே இன்பமே
எண்ணம் மேவும் வண்ணமே
என்னைத் தேடி வந்ததேன்
ஆரிராரொ - ஆராரொ

உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார்

இறைவன் மனிதன் ஆனார். அவர் மனித சரித்திரத்தில் இடம் பிடித்தார். இது ஒரு சரித்திர சம்பவம் என்பதை லூக்காஸ் தரும் சில சரித்திர நுணுக்கங்களிருந்து உணருகிறேம். அதே சமயம் அவர் ஒரு சரித்திர ஆசிரியனாக, புள்ளி விவரங்களை எழுத முனையவில்லை. நவீன காலத்தில் வாழும் நாம் சரித்திர விவரங்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேம். கடவுன் மனிதன் ஆனார் என்ற உண்மையை மீட்புப் பெற விரும்புவோர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே அவர் நோக்கம்.

மகிழ்ச்சியூட்டும் மாபெரும் நற்செய்தி

மக்கள் தொகையை கணக்கிடும்படி அகுஸ்து சீசர் கட்டளை பிறப்பித்தான்.உரோமை மக்கள் அன்று அகுஸ்து சீசரைத் தான் மீட்பர் என்றும், அவன் தரும் சட்ட விளம்பரங்களை மக்களுக்கு நற்செய்தி என்றும் கருதினர். அவன்; சாம்ராஜ்யத்தில் சமாதானம் நிலவியதும் உண்மை தான்.அகுஸ்து சீசரின் கட்டளைக்குப் பணிந்து யோசேப்பும் தன் மனைவி மரியாளோடு யோசேப்பின் சொந்த ஊராகிய பெத்லெகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். அரச கட்டளைக்கு பணியும் குடிமக்கள் அவர்கள். இப்படி அரசன் கட்டளை பிறப்பிக்க யோசேப்பும் மரியாளும் அதற்கு பணிந்து நடக்க, இறைவனின் மாபெரும் திட்டம் நிறைவேறுகின்றது.

jesus

எளிமையிலே பிறந்தவர் இயேசு, அவரை அடையாளம் கண்டு கொள்வதும் அந்த எளிமையில்; தான். வானதூதர்கள் இந்த செய்தியை முதன்முதலாக எளிய மக்களாகிய இடையர்களுக்கு 'இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவிதின் ஊரிலே பிறந்துள்ளார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்: இதுவே உங்களுக்கு அடையாளம்' ( லூக். 2. 11,12) என்று அறிவிக்கின்றனர் எளிமையே அடையாளமாக இருந்தாலும் அங்கே தேவ மகிமையும் வல்லமையும் அருளும் வெளிப்பட்டது. கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அமைதிப் பாதையிலே அவர்களை நடத்த வந்திருக்கிறார். இயேசு ஆண்டவர் என்பதையும் வானதூதர்கள் இடையர்களுக்கு சொல்லித் ருகின்றனர்.எனவே வானதூதர்கள் துதிகீதம் பாடுகின்றனர். உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக. உலகிலே அவர் தயவு பெற்றவர்களுக்கு அமைதி ஆகுக. ( லூக். 2: 14)

jesus

கிறிஸ்து பிறப்பை தியானிக்கும் போது இயேசுவின் அன்னையையும், அவரின் தாழ்ச்சியையும் நாம் மறக்க முடியாது. நற்செய்தியை கேட்டவர்களுள் முதல் நபர் நம் அன்னை தான். இறைவன் வார்த்தைக்கு ஆம் என்று சொன்னவர் இயேசு பிறந்த அந்த அதிசய நிகர்ச்சியையும் மற்றும் நிகழ்ந்தவற்றையும் உள்ளத்தில் இருத்தி தியானித்தார். சுபசெய்தியை கேட்ட இடையர்கள் விரைந்து சென்று மரியாளையும், யோசேப்பையும், தீவனத் தொட்டியில் கிடத்தி இருந்த குழந்தையையும் கண்டனர் (லூக்.2:16) அந்த மகிழ்ச்சியில் அதை மற்றவர்களுக்கு அறிவித்தனர். அதைக் கேட்டவர்கள் வியப்படைந்தனர்.

jesus

அன்று இடையர்கள் அன்பின் மகிழ்ச்சியை நாம் கிறிஸ்து பிறப்பு விழாவில் உணரலாம். கிறிஸ்மஸ் நம் உள்ளங்களையெல்லாம் பரவசப்படுத்தும் மாபெரும் விழா. காணமுடியாத இறைவன் இவ்வுலகில் அனைவரும் காணக்கூடியவராய் பிறந்த நன்னாள். அன்பு தேடி வந்த நாள். இறைவன் அன்பை மனிதனுடன் பகிர்ந்தக் கொண்ட நாள். எனவே தான் உலகம் முழுவதும் ஒருமனதாய் பூரணமகிழ்வுடன் அன்பை ஒருவரோடு ஒருவராக பகிர்ந்துக் கொள்ளுகிறோம்.

jesus

இவ்வேளையில் உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் வன்முறைகளும், சண்டைச்சச்சரவுகளும் ஒய்ந்து அன்பு நிறைந்திருக்க இறைமகன் சமாதானப்பிரபு இயேசு அமைதி அருள்வாராக!

jesus

எத்தனை முறை இயேசு பெத்லெகேமில் பிறந்தாலும்
எத்தனை முறை இயேசு உலகத்திற்கு வந்தாலும்
எத்தனை முறை நாம் புத்தாடை அணிந்து திருவிழா கொண்டாடினாலும்

இயேசு நம் உள்ளத்தில் பிறக்காவிடில்
அதனால் பயனொன்றும் இல்லை.

jesus

அனைவருக்கும் அன்பின் மடல் சார்பில் கிறிஸ்துப்பிறப்பு அன்பு நல்வாழ்த்துக்கள் !!

a tamil catholic website based on the scripture acts 4:20 to share your experience in jesus and mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | email id: anbinmadal at gmail.com