அன்பியத்தில் திருவருகைக்கால கொண்டாடங்கள்


NoRoom

அன்பியத்தில் திருவருகைக்கால கொண்டாடங்கள்

மீட்பின் வரலாற்றில் நிகழ்ந்த சிறப்பான சம்பவங்களைத் தகுந்த முன்னேற்பாடுகளுடனும், எதிர்பார்ப்புடனும் சிந்திக்கத் தூண்டுவதே திருவருகைக் காலம். உலகின் மீட்பராம் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து நிறைவானத் தனது மாட்சியுடன் மீண்டும் வருவார் என்ற மறையுண்மையே நமது சிந்தனைகளில் முதலிடம் வகிக்கிறது. இந்த உண்மையை நாம் மிகுந்த எதிர்பார்ப்போடும், முழு நம்பிக்கையோடும் எண்ணத்தில் கொண்டுள்ளோம். இதன் தொடர்ச்சியாக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு ஒரு சிறு குழந்தையாக இம்மண்ணில் தோன்றினார் என்பதை நினைத்துப் பார்க்கிறோம். ஆம்! கன்னியின் மகனாகப் பிறந்த அவர், இந்த உலகினரோடு வாழ்ந்திருந்தார்.

திருவருகைக் காலத்தின் நம்பிக்கையும், கடவுளின் வாக்குறுதியும் முழுமையாக நிறைவேறுவதை நாம் உளபூர்வமாக உணர்கின்ற காலமே கிறிஸ்துமஸ். மாட்சியும், வல்லமையும் நிறைந்த கடவுள் இம்மண்ணுலகில் மானிடவுரு எடுப்பதற்காக அருள்மிகப் பெற்றவரான கன்னி மரியாவிடம் ஒரு சிறு குழந்தையாகப் பிறக்கும் விதமாகத் தாழ்த்திக்கொண்டு, அவருடைய பாதுகாப்பிலும், அரவணைப்பிலும் வளர்வதற்குத் தன்னையே கையளித்தார். இதனால், கடவுளின் தாயாரான கன்னி மரியா நமக்கும் இறையருளின் அன்னை ஆனார்.

திருவருகைக் காலத்தின் நான்கு ஞாயிறுக்கிழமைகளில் குடும்பமாக அன்பியத்தில் இணைந்து எதிர்நோக்கு, அமைதி, மகிழ்ச்சி, அன்பு என்ற கருத்துகளை உணர்ந்துக் கொண்டாட திருவருகைக் கால விவிலிய வழிபாட்டு வழிகாட்டி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

”அன்பியத்தில் திருவருகைக்கால கொண்டாடங்கள்” என்ற தொகுப்பு( pdf file) இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும். இதில் கொடுக்கப்பட்டுள்ள பாடல்கள் audio file இணைக்கப்பட்டுள்ளது.

மஇத்தொகுப்பு ஆன்மீக ஊக்கமளித்து, நமதாண்டவர் இயேசுவையும், அவரது அன்னையாம் கன்னி மரியாவையும் சந்திப்பதற்குத் துணை செய்வதாக! பிறக்க இருக்கின்ற புத்தாண்டு நம் எல்லோருக்கும் புது வாழ்வைத் தருகின்ற காலமாக அமைவதாக!

பதிவிறக்கம் செய்வதற்கான பதிவுகள்

”அன்பியத்தில் திருவருகைக்கால கொண்டாடங்கள்” PDF file

1. ஒளியாம் இறையே வாராய்
2. அரவணைக்கும் அன்பு தெய்வமே - இயேசுவே
3. குழந்தை இயேசு வருவீரே
4. இறைவா வந்தோம் இதயம் தந்தோம்