இயேசுவின் இனிய நண்பர் இஞ்ஞாசியார்..

பக்கம் 1 + 2 + 3 + 4 + 5


65. இயேசுசபையின் சட்டதிட்டங்களை அவர் எழுதிய பொழுதுப் பலமுறை மூவொரு இறைவன் அவருக்குக் காட்சியளித்தார். அன்னை மரியாளும் தோன்றி அவர் எழுதியதை உறுதிப்படுத்தினார்.

66. பிடிவாதத்தோடு அடம் பிடித்த பலரது மனத்தை மாற்றினார். ஐசக் என்ற யூதர் ஒருவரது மனத்தை மாற்றித் தன்னோடு தங்கி வாழ்ந்துப் புதிய பாதையில் நடக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அதில் வெற்றியும் பெற்றார்.

67. அவர் செபம் செய்யும்போது சாத்தான்கள் பலமுறை அவரை வதைத்தன. இரவில் அவர் உறங்கும்பொழுதுகூட அவை அவர்க்குப் பலசோதனைகளையும் இன்னல்களையும் தந்தன..

68. வானத்தில் உள்ள விண்மீன்களைப் பார்த்துப் பலமுறை பரவசம் அடைந்தார். ஆனந்தக் கண்ணீர் வடித்தார். விண்ணை நான் நோக்கும் பொழுது இம்மண்ணுலகம் எவ்வுளவு பயனற்றது என்று பலமுறை உரக்கக் கூறினார். கண்ணீர் உருக்கும் கொடை அவரது கண்களுக்குப் பாதிப்பை உண்டாக்கியது. அவை அகலவேண்டுமென்று வேண்டியபோது கண்ணீர் வடிவது நின்றுவிட்டது.

69. திருப்பலியின்போது, இயேசுவின் திருவுடலை இறைத்தந்தையின்பால் உயர்த்தியபொழுது, இவரது தலைமேலிருந்து அக்கினிச் சுவாலைகள் புறப்பட்டு வெளியேறின.

70. ஒரு முறை அவர் செபித்துக் கொண்டிருந்த பொழுது உலகார்ந்த காரியங்களில் ஈடுபட்டுத் தவவாழ்விலிருந்து வெளியேற வந்தது. இதைப்பற்றி அவர் எழுதிய கடிதக்கட்டுகளை எடுத்து நெருப்பில் வீசி எறிந்தார்.

71. ஒரு தீர்க்கத்தரிசியைப் போல பலருடைய ஆன்மாக்களில் ஒளிந்திருந்த இரகசியங்களை உணர்ந்து வெளிப்படுத்தினார். எதிர்காலத்தில் நிகழப் போகும் காரியங்களைப் பற்றி அன்னை மரியாளின் உதவியுடன் வெளிப்படுத்தினார்.

72. பல வண்ணங்களுடைய பாம்பு வடிவங்கள் அவருக்கு அடிக்கடித் தோன்றுவதுண்டு. சிலசமயங்களில் மகிழ்ச்சியும் சிலசமயங்களில் குழப்பங்களும் அவரை வந்தடைந்தன. இவை சாத்தானின் மறுரூபம் என்று கண்டுணர்ந்து, ஒரு தடியால் அவற்றை விரட்டித் துரத்தி விட்டார்.

73 புனித பிலிப்பு நேரி இஞ்ஞாசியாரின் நெருங்கிய நண்பர். அவர் இஞ்ஞாசியாரின் முகத்தை நோக்கிய பொழுதெல்லாம் அது மிகப்பிரகாசமாக ஒளிர்ந்தது. அதன் வழியாக இஞ்ஞாசியாரின் புனிதத் தன்மையை அவரால் உணரமுடிந்தது

74. அலொக்ஸ்ண்டர் பெத்ரோனி நோயுற்று இருந்தபொழுது புனித இஞ்ஞாசியார் அவருக்குக் காட்சியில் தோன்றினார். மின்னல் வேகத்தில் அவரது நோய் பறந்தது. அவருக்கு விடுதலை அளித்தது. அங்கிருந்த பலரும் இக்காட்சியைக் கண்டு களித்தனர்.

75. இலாரன்ஸ் கல்லூரியில் வாழ்ந்த அருட்தந்தையரை அலகை அலைக்கழித்தது. புனித இஞ்ஞாசியாரின் கடிதங்களை அவர்கள் படித்தபொழுது அலகையின் பயம் அவர்களை விட்டு நீங்கிற்று.

76. ஜெர்மனியில் உள்ள கொலோன் நகரத்தில் வாழ்ந்த ஒரு இயேசுசபை அருட்தந்தை உரோமை நகருக்குச் சென்று புனித இஞ்ஞாசியாரைக் கண்டு பரவசமடைய விரும்பினர். இஞ்ஞாசியாரே அவருக்குக் காட்சியளித்து அவர் இருந்த இடத்திலேயே அவரது விருப்பத்தை நிறைவேற்றினார்.

77. புனித இஞ்ஞாசியார் இறந்த அக்கணமே அவர் விண்ணகத்தில் நுழைந்துவிட்டதாக ஒரு சீமாட்டிக் காட்சிக் கண்டாள்.

78. காசநோயால் வாடிய ஒரு பெண்மணி இஞ்ஞாசியாரின் பூதவுடலைக் கொண்ட பெட்டியருகில் செல்ல முடியாதபோது இஞ்ஞாசியாரின் உடையிலிருந்து எடுக்கப்பட்ட சிறிய துண்டைத் தொட்டவுடன் அவளது நோய் நீங்கிற்று. அப்பெட்டியிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இலைகளும் பூக்களும் பலருக்குக் குணம் தந்தது.

79. புனித இஞ்ஞாசியாரின் எலும்புகள் வேறுஇடத்தில் மாற்றப்பட்ட பொழுது விண்ணில் பிரகாசமான விண்மீன்கள் தோன்றின. விண்ணக இசையும் ஒலித்தது.

80. மார்ச் மாதம் 12ம் தேதி 1622ம் ஆண்டில் திருத்தந்தை 15 ஆம் கிரகோரியார் ஆடம்பரமான வழிபாட்டில் நிகழ்வில் இஞ்ஞாசியாருக்குப் புனிதப்பட்டம் கொடுத்துத் திருச்சபையின் புனிதர்களின் சமூகத்தில் சேர்த்தார்.

பக்கம் 1 + 2 + 3 + 4 + 5


இணைந்து செயல்படுவோம்.. இறையரசை அறிவிக்க...
A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2020 | Email ID: anbinmadal at gmail.com