இயேசுவின் இனிய நண்பர் இஞ்ஞாசியார்..

பக்கம் 1 + 2 + 3+ 4 + 5


33. பெண்களோடு தவறாக நடந்து கொண்ட ஆண்களைக் கண்டித்தார். தவறான பாதையில் சென்ற பெண் துறவற மடங்களைச் சீர்திருத்தினார். தவறிழைத்தவர்கள் குண்டர்களைத் தூண்டிவிட்டு இஞ்ஞாசியாரை நையப்புடைத்தனர்.

34. வாழ்க்கையில் விரக்தியடைந்த ஒருவனை, அவன் தற்கொலைச் செய்ய எத்தனித்தபோது தனது ஆலோசனையால் அவனை மனம் மாற்றிக் காப்பாற்றினார்.

35. அவர் செபித்துக் கொண்டிருந்தபொழுதுச் சில வேளைகளில் தரையிலிருந்து நான்கு அடிக்குமேல் உயர்த்தப்பட்ட அனுபவத்தைப் பெற்றார். அவரது முகம் ஒளிமயமாகப் பிரகசித்தது. அப்பொழுது "ஆண்டவரே! இவ்வுலகம் உம்மை அறிந்துக் கொண்டல், உமது அன்பை உணர்ந்து கொண்டால் எத்துணை நலமாக இருக்கும் என்று கூக்குரலிடுவார்.

36. தவறாக அவர் மீது குற்றம் சாட்டி அவரைச் சிறையிலடைத்தனர். சிறையிலிருந்து கொண்டே பலருக்கு நற்செய்திப் போதித்து ஆன்மாக்களை இறைவன் பாதம் இட்டுச் சென்றார். "என்னை எத்தனை சங்கிலிகளினால் கட்டினாலும் இயேசுவைப் பற்றி அறிக்கையிட அவை ஒருதடையாக இருக்கமுடியாது" என்று கூறினார்.

37. இஞ்ஞாசியார் மீது குற்றம் சாட்டி 'தீ வந்து இறங்கி அவர் இறக்கவேண்டும்' என்று ஒரு பகைவன் ஆணையிட்டுத் கத்தி அவதூறு பேசினான். அதே நாளில் அவன் வீடு தீப்பற்றியெரிந்து சாம்பலாய்ப் போனது.

38. பாரீஸ் பல்கலைக்கழகத்தில் பல இளம் மாணவர்களை மனம் மாற்றிப் புனித பாதையில் இட்டுச்சென்றார். மாணவர்களின் வாழ்க்கை மாறினதைக் கண்டு பலர் 'இஞ்ஞாசியார் இளைஞர்ளை மூளைச் சலவைச் செய்து பித்துக்குளிகளாக மாற்றினார்' என்று கூறிப் பகிரங்கமாக அவரைப் பிரம்பால் அடிக்கவேண்டுமென்று தண்டனைக் கொடுத்தனர். கல்லூரி முதல்வரோ அவரது புனித வாழ்க்கையை உணர்ந்து பகிரங்கமாக அவர் முன் முழந்தாள்படியிட்டு மன்னிப்புக் கோரினார்..

39. பாரீஸ் நகரப் பல்கலைக்கழகத்தில் பயின்றுகொண்டிருந்த ஒன்பது இளைஞர்களைக் கவர்ந்தார். தன்னோடு நற்செய்தி அறிவிக்க அவர்களைத் தோழர்களாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

40. இஞ்ஞாசியாரைக் கொலைச் செய்ய எண்ணி ஒருவன் வாளேந்தி அவரது அறையில் நுழைந்தபொழுது "கயவனே! நீ என்ன செய்ய எத்தனித்திருக்கின்றாய்" என்று குரல் ஒன்று ஒலித்தது. அதைக் கேட்டக் கயவன் தனது தீயச் செயலை நிறைவேற்றாமல் ஓடிவிட்டான்.

41. ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி 1534ம் ஆண்டில் பாரீஸ் நகரில் உள்ள சாந்தெனி என்ற சிற்றாலயத்தில் அன்னை மரியாளின் உருவத்தின் முன் இஞ்ஞாசியாரும் அவரது தோழர்களும், எருசலேம் நகருக்குச் சென்று அங்கு இரத்தம் சிந்தி மறைசாட்சிகளாய் மாறுவோம் என்ற உறுதிப்பாட்டை எடுத்துக்கொண்டனர். அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் இந்த உறுதிப்பாட்டைப் புதுப்பித்துக்கொண்டனர்.

42. தவறான வாழ்க்கை நடத்திய ஒருவனை மனம் மாற்ற விரும்பினார் இஞ்ஞாசியார். தீயவளையுடைய வீட்டிற்குப் போகும்போது அவன் ஓரு பாலத்தைக் கடந்துச் செல்ல வேண்டும். அந்தப் பாலத்தின் கீழ் ஒடிய ஆற்றில் இஞ்ஞாசியார் மூழ்கிக் கடும் குளிரில் பனிக் காலத்தில் அவனது மனம் மாற வேண்டுமென்று தண்ணீரிலேயே வெகுநேரம் இருந்தார். இதைக் கண்டு அம்மனிதன் தனது வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொண்டார்.

43. உடல நலம் குன்றியபொழுது மருத்துவர்கள் இஞ்ஞாசியாரைப் பார்த்துச் சொந்த ஊர் மணவாசனை உமக்கு நலத்தைப் பயக்கும் என்றனர்.ஆகவே பாரீஸ் நகரத்திலிருந்து தனது சொந்த நாடான ஸ்பெயினுக்குப் பயணித்தார். அவரது புனித வாழ்க்கைப் பற்றிக் கேள்வியுற்றுக் குருக்களும் படைவீரர்களும், நகரமக்களும் ஒன்றுகூடி அவரை இனிதே வரவேற்றனர்.

44. உடல் சுகவீனமாயிருந்தும் ஸ்பெயின் நாட்டில் வயல்வெளிகளில் நற்நெய்தி அறித்தார். (ஏனென்றால் மக்கள் கோவிலுக்குச் செல்லும் வழக்கத்தைக் கைவிட்டிருந்தனர்)அவரது குரல் வெகுதூரத்தில் இருந்தவர்களுக்கும் தெளிவாகத் தொனித்தது.

45. வலிப்புநோயால் வாடிய ஒருவரை இஞ்ஞாசியாரிடம் கொண்டுவந்தனர். வானத்தை அண்ணார்ந்துப் பார்த்து அவர் செபித்தார். உடனே அந்த நோயாளி குணமடைந்தார்.

46. பேய்பிடித்த பலரை இஞ்ஞாசியாரிடம் அழைத்து வந்தனர். சிலுவை அடையாளம் வரைந்துப் பலரைப் பேயின் பிடியிலிருந்து விடுதலை அளித்தார்.

47. காசநோயினால் துன்புற்ற ஒரு பெண்மணிச் சாகும்தருவாயில் இருந்தாள். அவளுக்காக அவர் செபித்தபொழுது அவள் அந்நேரமே குணமடைந்தாள்.

48. இஞ்ஞாசியாரின் ஆடையை ஒரு பெண்மணித் துவைத்தபொழுது அவளது சூம்பிய கைக் குணம் பெற்றது

பக்கம் 1 + 2 + 3+ 4 + 5


இணைந்து செயல்படுவோம்.. இறையரசை அறிவிக்க...
A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2020 | Email ID: anbinmadal at gmail.com