இயேசுவின் இனிய நண்பர் இஞ்ஞாசியார்..

1609ம் ஆண்டில் இலொயோலா இஞ்ஞாசியாருக்கு முத்திபேறுபட்டம் அளித்தபொழுது கீழ்வரும் அவரது வாழ்க்கை வரலாற்றை அருள்தந்தை நிக்கோலாஸ்.சே.ச, அருள்தந்தை ஃபிலிப்போ ரினால்தி சே.ச, அருள்தந்தை நிக்கோலாஸ் பாஸ்மானி சே.ச. என்ற மூவரும் எழுதினார்கள்.

வரைபடங்களை இயேசுசபையின் நல்ல ஆன்ம நண்பரான பீட்டர் பால் ருபன்ஸ் அவர்கள் வரைந்துள்ளார்கள். புனித இலொயோலா இஞ்ஞாசியாருக்குப் புனிதர் பட்டம் கிடைக்க இவை மிகவும் உதவிடும் என்ற எண்ணத்தில் இவை வரையப்பட்டன.

இவை இயேசு சபையின் தொடக்கக் காலத்தில் சேகரிக்கப்பட்ட ஆவணங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் உள்ள ஜான் ஜே பர்ன்ஸ் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மூல ஆவணத்தில் ஒவ்வொரு வரைபடத்தின் கீழும் இலத்தீன் மொழியில் விளக்கங்கள் எழுதப்பட்டுள்ளன

இங்கு தமிழில் விளக்கவுரைகள் அருள்தந்தை தம்புராஜ் சே.ச. அவர்கள் எழுதியுள்ளார்கள்.

மொத்தம் 80 படங்கள் - ஐந்து பக்கங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிந்து கொள்ள...
The Life of St. Ignatius Loyola
Pictorial Biography
http://www.faculty.fairfield.edu/jmac/Loyola/Loyola.htm

பக்கம் 1 + 2 + 3 + 4 + 5


1. புனித இஞ்ஞாசியாரின் தாய் தனது ஏழாவது மகனைப் பெற்றெடுக்கும் முன் தன்னை ஒரு மாட்டுத் தொழுவத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். புனித இஞ்ஞாசியார் இவ்வாறு ஒரு மாட்டுத் தொழுவத்தில் கடைக்குட்டியாகப் பிறந்தார். இவர் குடும்பத்தில் 13வது குழந்தை ஆவார்.

தளபதியாக இருந்த இஞ்ஞாசியார், பம்பிலோனா கோட்டையைக் கைப்பற்றப் போர் தொடுத்தார். அப்போரின் சமயத்தில் மே மாதம் 21ஆம் தேதி 1521 ஆம் ஆண்டில் ஒரு குண்டு அவரது வலதுக் காலைத் துளைத்தது. இடது காலும் நொறுங்கியது.

3. அவர்க்கு காயம் ஆறிவந்த சமயத்தில், பத்து மாதங்கள் படுக்கையில் ஒய்வெடுக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. புனித பேதுரு மீது பற்றுக் கொண்டவர் இஞ்ஞாசியார். ஒரு நாள் புனித பேதுரு அவருக்குக் காட்சி அளித்தார். நல்ல சுகத்தையும் அளித்தார்.

4. படுக்கையில் ஒய்வெடுத்துக் கொண்டிருந்தபொழுது இயேசுவின் வாழ்க்கையையும் புனிதர்களின் வரலாறுகளையும் புனித இஞ்ஞாசியார் ஆவலோடு ஆழமாகப் படித்தார். மனம் மாறித் தனது வாழ்க்கையைச் சீரமைத்துப் புனிதர்களைப் போல வாழ வேண்டுமென்று உறுதிப் பூண்டார்.

5. அடிக்கடி இஞ்ஞாசியார்க்கு நமது இறைஅன்னை மரியாள் தனது குழந்தை இயேசுவோடு காட்சி அளித்தார்கள். இக்காட்சிகள் அவருக்கு மிகவும் பக்தியையும் ஊக்கத்தையும் அளித்தன

6. இஞ்ஞாசியார் செபத்தின் வழியாக இறைவனுக்குத் தன்னையே அர்ப்பணித்தார். இவ்வாறு தனது வாழ்க்கையை அவர் மாற்றி அமைத்துக் கொண்டதால் சாத்தானுக்குக் கோபம் மூண்டது. அப்பொழுது அவர் இருந்த வீடு முழுவதும் அதிர்ந்தது. நில நடுக்கத்தால் அவரது அறையின் சுவரில் பிளவு ஏற்பட்டது.

7. அவர் செல்லும் வழியில் முகமதியர் ஒருவர் அன்னை மரியாள் இயேசுவைப் பெற்றெடுத்தபின் கன்னியாக இருக்க முடியாது என்று சொல்லிவிட்டு நகர்ந்து போனார். இதனால் கோபம் கொண்ட இஞ்ஞாசியார் அவரைக் கத்தியால் குத்த வேன்டுமென்று விரும்பினார். குதிரையின் கடிவாளத்தைத் தளர்த்திக் குதிரையை முகமதியர் சென்ற வழியில் செலுத்தினார். ஆனால் குதிரையோ வேறு வழியில் சென்றது. ஆகவே அந்த முகமதியரைப் பழிவாங்குவது இறைவனின் வழி அல்ல என்று கண்டுகொண்டார்.

வீட்டைவிட்டு வெளியேறி ஒரு தவசியாக வாழத் தீர்மானித்தார். தனது வீட்டாருக்குப் பிரியாவிடைக் கூறினார். பகட்டாக உடை அணிந்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார். தன்னோடு 300 பக்கங்கள் கொண்ட காகிதங்களை மட்டும் எடுத்துச் சென்றார்.

9. அரான்சாசு நகரத்தில் உள்ள அன்னை மரியாளின் திருத்தலத்தில் கற்பு என்ற புண்ணியத்தைக் காக்க வேண்டுமென்று வார்த்தைப்பாடு ஒன்றை எடுத்தார். இதன் விளைவாகக் கற்புக்கு விரோதமான இச்சைகளையெல்லாம் அவரிடமிருந்து அறவே அற்றுப்போயின

10. தனது பகட்டான பட்டு ஆடைகளைக் களைந்து ஒரு பிச்சைக்காரனிடம் கொடுத்துவிட்டு, அவனது சாக்கு உடையை அணிந்து கொண்டார். பயணத்திற்கு ஒரு பாத்திரம், குடுவை, பயணியின் கோல் இவற்றை வாங்கிக் கொண்டு திருப்பயணியாக மாறினார்.

11. மோன்செராத் மலையிலுள்ள ஒரு திருதலத்திற்குப் பயணித்தார். அங்கிருந்த கருவண்ணக் கன்னி மரியின் திருவுருவத்தின் முன் ழுழந்தாள்படியிட்டு இரவு முழுவதும் கண் விழித்துச் செபித்தார். அன்னை மரியின் பாதத்தில் தனது வாளைத் தொங்கவிட்டு இயேசுவின் வீரதளபதியாகத் தன்னையே அர்ப்பணித்தார். இச்சம்பவம் மார்ச் 25ஆம் தேதி 1522ல் நிகழ்ந்தது.

12. மன்ரேசா நகரத்தில் குகை ஒன்றில் பத்து மாதங்கள் தங்கிச் செபிக்கலானார். தனிமையில் இவ்வாறு செபித்தப்பொழுது சாத்தான் பலவண்ணப் பாம்பு வடிவங்களில் அவரை அலைக்கழித்தது. ஆனால் அவர் செபிப்பதை மட்டும் கைவிடாமல் தொடர்ந்து இறைவனோடு உறவாடினார்.

13. ஏழைளோடு ஏழையாகச் சத்திரங்களில் தங்கி தனது செபவாழ்க்கையைத் தொடர்ந்தார். இதைக் கண்டு பலர் தங்களது தவறான வாழ்க்கையிலிருந்து புனித வாழ்வை ஏற்றுக்கொண்டனர்.

14. ஒவ்வொரு நாளும் ஏழு மணிநேரம் செபத்தில் நிலைத்திருந்தார். மூன்றுமுறை ஒவ்வொரு நாளும் தன்னையே கசையால் அடித்துக்கொண்டு தவவாழ்வு ஏற்றார்.

15. ஒவ்வொரு நாளும் இரண்டு ரொட்டியும், தண்ணீருமே அவரது உணவாக இருந்தது. ஆயினும் இவரது உடலில் எந்த வித பலவீனமும் ஏற்படவில்லை. தற்கொலை செய்து கொள்ளுமாறு சாத்தான் அவரைத் தூண்டினான்.

16. தொமினிக்கன் சபைக்குச் சொந்தமான கோவில் ஒன்றில் தினமும் அன்னை மரியாளின் சிறிய கட்டளைச் செபத்தைச் செபிப்பது அவரது வழக்கமாய் இருந்தது. அப்பொழுது அவருக்குப் பல காட்சிகள் அருளப்பட்டன. சிறப்பாக மூவொரு இறைவனைப் பற்றிய காட்சிகளை அவர் பெறலானார்.

பக்கம் 1 + 2 + 3 + 4 + 5


இணைந்து செயல்படுவோம்.. இறையரசை அறிவிக்க...
A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2020 | Email ID: anbinmadal at gmail.com

symptoma