இயேசுவின் இனிய நண்பர் இஞ்ஞாசியார்..

பக்கம் 1 + 2 + 3 + 4 + 5


49. ஜுன் மாதம் 24ம் தேதி 1537ம் ஆண்டில் நாகசாந்தி என்ற ஆயரால் வெனீஸ் நகரத்தில் இஞ்ஞாசியாரும் அவரது தோழர்களும் குருக்களாகத் திருநிலைப் படுத்தப்பட்டனர். அத்தருணத்தில் மகிழ்ச்சியால் நிரப்பட்டார். இஞ்ஞாசியாரின் எதிர்காலத்தைப் பற்றிய உள்ளொலியையும் அவர் பெற்றார்.

50. மரணத் தருவாயில் இருந்த தனது தோழரைச் சந்திக்கப் பதினெட்டு மைல்கள் கால்நடையாகவே சென்றார் இஞ்ஞாசியார். சைமன் ரொட்ரீகுவஸ் என்ற அத்தோழரை அரவணைத்தவுடன் அவர் முழுச்சுகம் பெற்று எழுந்தார்.

51. இஞ்ஞாசியாரின் தோழர்களுள் ஒருவருக்கு யாரோ ஒரு படைவீரன் குதிரையில் வாளேந்தி வந்து அச்சுறுத்தும் காட்சியை அடிக்கடிப் பார்த்துப் பயந்து கொண்டிருந்தார். " விசுவாசமற்றிராதே ஏன் சந்தேகப்படுகிறாய்? " என்று நமதாண்டவரின் வார்த்தைகளைச் சொல்லி இஞ்ஞாசியார் ஆறுதல் அளித்தார்.

52. இஞ்ஞாசியாரை மதிக்காமல் அவரை வெறுத்த ஒரு வனத்துத்துறவிக்கு நமதாண்டவர் இயேசு தோன்றி இஞ்ஞாசியார் பல ஆன்மாக்களின் மீட்புக்குக் காரணயாயிருப்பார் என்று அவருக்கு உணர்த்தினார்.

53. இயேசுசபை நிறுவுவதற்காக இஞ்ஞாசியார் உரோமை நகரை நோக்கிச் சென்றபொழுது உரோமையிலிருந்து 9 மைல்கள் தூரத்தில் இருந்த பாழடைந்த ஒரு சிற்றாலாயத்தில் செபிக்கச் சென்றார். அப்பொழுது வானகத்தந்தையும் சிலுவைச் சுமந்த இயேசுவும் அவருக்குக் காட்சியளித்து நாம் உமக்குச் சாதகமாய் இருப்போம் "என்றனர்.

54. குருப்பட்டம் பெற்றபிறகு தனது முதல் திருப்பலியைப் பெத்லகேமில் உள்ள இயேசு பிறந்த குடிலில் நிறைவேற்ற வேண்டி 18 மாதங்கள் காத்திருந்தார். அது சாத்தியமாகாமல் போனதால் உரோமையில் உள்ள புனித மேரி மேஜர் என்ற பேராலயத்தில் வைக்கப்பட்டிக்கும் இயேசு பிறந்த குடிலில் தனது முதல் திருப்பலியை நிறைவேற்றினார்.

55. மோன்தே கசீனோவில் உள்ள ஒரு பெனெதிக்கன் மடத்தில் திருப்பலியின் போது,புனிதர்களிடம் செபித்த பொழுதுத் தனது தோழர் ஹோசாய் இறந்து விண்ணகம் சென்றதை இஞ்ஞாசியார் காட்சியாகக் கண்டார்.

56. திருத்தந்தை மூன்றாம் பவுல் இஞ்ஞாசியார் எழுதிய இயேசு சபைச் சட்டதிட்டங்களைப் படித்துவிட்டு "உண்மையாகவே இறைவனின் கரம் இங்குள்ளது." என்று கூறினார். செப்டம்பர் 27ம் தேதி 1540ம் ஆண்டில் இயேசுசபைக்கு ஓப்புதல் அளித்தார்.

57. தூய ஆவியானவரின் உந்துதலால் இந்தியாவின் அப்போஸ்தலர் என்று இன்று நாம் அழைக்கும் புனித பிரான்சிஸ் சவேரியாரை இஞ்ஞாசியார் இந்தியாவிற்கு அனுப்பினார். இஞ்ஞாசியார் தனது இதயத்தை அனுப்பினார் என்று கூறலாம்.

58. புனித இஞ்ஞாசியார் 1541ம் ஆண்டில் இயேசு சபையின் அகில உலகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உரோமை நகரில் உள்ள புனித பவுல் பேராலயத்தில் இஞ்ஞாசியாரும் அவரது தோழர்களும், திருத்தந்தைக்குக் கீழ்ப்படிவதாக, சிறப்பான நான்காம் உறுதிப்பாட்டை ஏற்றனர்.

59. ஜப்பானிலிருந்து புனித சவேரியார் புனித இஞ்ஞாசியாருக்குக் கீழ்வருமாறு ஒரு கடிதம் எழுதினார். "எனது விசுவாசத்தை உறுதிப்படுத்திய தந்தைக்கு நன்றியுணர்வோடும் மரியாதையோடும் இக்கடித்ததை முழுந்தாள்படியிட்டு எழுதுகிறேன். நான் இறைச்சித்தத்தை அறியவும் அதன்படி நடக்க எனக்குத் தைரியம் கிடைக்கவும் இறைவனிடம் மன்றாடுங்கள். வாழ்க நீவீர்! பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் உமது அன்புக் கடைமகன்" பிரான்சிஸ் சேவியர்,சே.ச

60. உரோமை நகரில் இஞ்ஞாசியார் அருட்சாதனங்களைப் பற்றிப் போதிப்பதில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். பக்தி முயற்சிகளை அறிமுகப்படுத்தினார். கோவில்களிலும் வளாகங்களிலும் குழந்தைகளுக்கு மறைக்கல்விப் புகட்டும் வழிமுறைகளை ஏற்பாடு செய்தார்

61. உரோமை நகரில் அவரது போதனைகளை எதிர்த்துத் தவறாகப் பேசினர் பலர். பல குற்றச்சாட்டுகள் தவறாக அவர் மீது சுமத்தப்பட்டன. ஆனால் அவர் நிரபராதி என்று நிருபிக்கப் பல நகரங்களிலிருந்து நீதிபதிகள் வந்து குவிந்தனர்.

62. புனித பேதுரு ஆலயத்திற்குச் செல்லும் வழியில் ஒரு பாலத்தை அவர் கடக்க நேர்ந்தது. தனது தோழர் ஜான் கோதியூருக்காகத் திருப்பலி நிறைவேற்றச் சென்று கொண்டிருந்தார். தனது தோழர் இறந்துவிட்டார் என்று உள் மனத்தில் தீடிரென உணர்ந்தார்.

63. அனாதைகளுக்கு வீதியோரம் வாழ்ந்தப் பிச்சைக்காரர்களுக்கும் விபசாரிகளைச் சீர்திருத்துவதற்கும் பல இல்லங்களை உரோமை நகரில் நிறுவினார். இன்று உலகப் புகழ் பெற்றுள்ள கிரகோரியன் பல்கலைக்கழகத்தையும் நிறுவினார்.

64. உரோமை நகரில் ஜெர்மன் நாட்டு இளஞர்கள் கல்விகற்க ஜெர்மன் கல்லூரியை நிறுவ வேண்டுமென்று திருதந்தை மூன்றாம் ஜீலியஸிடம் பரிந்துப் பேசினார். வெற்றி பெற்றார். இக்கல்லூரித் திருச்சபையின் பல நபர்களுக்கும் பேருதவியாக இருந்தது.

பக்கம் 1 + 2 + 3 + 4 + 5


இணைந்து செயல்படுவோம்.. இறையரசை அறிவிக்க...
A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2020 | Email ID: anbinmadal at gmail.com