மகிழ்ச்சியின் பெருவிழா!


சகோ.ஜோவிட்டா, தூய சிலுவை மடம், திருச்சி

பாலனின் பிறப்பு நமக்கு பாவத்தில்
இருந்து விடுதலை சாத்தானின் சூழ்ச்சியில்
இருந்து மீட்பு அளித்த ஆண்டவர்
இயேசுவின் அன்பை நெஞ்சாரச் சுவைத்து
அப்பா என்றே உரிமையுடன் மக்கள்
அன்போடு அழைத்து ஆண்டவர் இவரே
அவரின்றி வேறே தெய்வம் இல்லை
என்பதை நாமெல் லோரும் அறிக்கை
செய்து அகிலமே ஆர்ப்பரித்துக் கொண்டாடும்
அன்புத் திருவிழா, இயேசு தான்என்
மீட்பர் அவர்மண் ணில்மனு உருவாகிய
மகிழ்ச்சி யானஉன் னதநாளில் இப்பூமி
வியந்து வியந்து அவரை வாழ்த்தி
உலகோர் மனதில் ஆனந்தம் மிகுந்து
மீட்பர் இயேசு பிரானின் அன்புப்
பரிசாகத் தூய்மை மிகுஉள் ளத்தவராய்
அவரைப் போற்றிப் பாடிடும் மங்களம்
கலந்த மாபெரும் நாள்தான் கிறிஸ்து
விண்ணில் அரியணை யிலிருந்து மண்ணகம்
நோக்கி வந்திடும் பணிவு மிகுந்த
புனித நாளிலே பாலகன் இயேசு
பாரினில் பிறந்து இன்பம் நல்கிடும்
அன்பின் நாள்தான் கிறிஸ்மஸ் திருவிழா
அந்நாளில் அயலாரை அன்புடன் அழைத்து
பரிசினை அள்ளிக் கொடுத்து நாமெல்லாம்
இரட்சகர் இயேசு நாதரின் சொந்தப்
பிள்ளைகள் என்கின்ற உணர்வோடு உலகத்தினர்
போற்றித் துதிப்போம் பாலகன் இயேசுவை!

anbinmadal.org ++2002-2019++ Tamil Catholic website. Email ID: anbinmadal at gmail.com