merry christmas!
சிறப்புசெய்தி santa இடமிருக்கிறது கவிதை முகப்பு பக்கம்

கிறிஸ்து பிறப்பு பெருவிழா கவிதை

மழலை மன்னவனே மரகத மணியே மாளிகை இல்லை என் மனமே உம் எல்லை குயில் கொடுத்த குரலினைக் கொண்டு குழந்தை உனை கொஞ்சி பாடுவேன் மார்பும் மடியும் உனக்கே தஞ்சம் மாணிக்கக் கல்லே மண்ணில் பிறந்தவா!

வீண்ணும் மண்ணும் ஒன்றாய் இணைய விண்மீனாய் மண்ணில் பிறக்கவா இம்மண்ணில் தெரியட்டும் நும் வதனம்! குகையினில் பிறக்கும் இறைமகனே - என் குடியினிலில் பிறக்க வருவாயா?

நெஞ்சில் உனக்கு வீடு செய்து மஞ்சத்தில் தொட்டில் கட்டி ஆரிராரோ ஆரிராரோ என அல்லும் பகலும் பாடுவேன்! விளக்கு வைக்கும் நேரத்தில் விடியல் கதை பல சொல்வேன்! கண்ணா நீயும் கண்ணுறங்க கலங்காமல் அதை பாடிடுவேன்!

பூமிக்கு வந்த புது மலரே பூஜைக்கு விருந்தானாய் மானுடம் மலர வாசம் தந்தாய் மாந்தர் மடியில் மழலை யானாய்! தாழம் பூவின் மலர்ந்த வாசம் தரணியெங்கும் தாளம் போட வாடைக் காற்றின் வசந்த ராகம் வையகமெங்கும் வாழ்த்திப் பாடுமே!

நன்றி சீயோன் குரல்-டிசம்பர் 2006

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com