merry christmas!
சிறப்புசெய்தி santa இடமிருக்கிறது கவிதை முகப்பு பக்கம்

சத்திரத்தில் இடமில்லை-என் அறையில் இடமிருக்கிறது

இயேசு கிறிஸ்துவில் பிரியமமான சகோதர சகோதரிகளே, டிசம்பர் மாதம் என்றாலே கிறிஸ்து பிறப்புவிழாவும், அதற்குரிய தயாரிப்புகளுமே நம் கண்முன் வரும். புதிய ஆடைகள், வாழ்த்துஅட்டைகள், வகை வகையான பலகாரங்கள் ... என நாம் குதூகலிக்கும் மாதம் இது. அத்துடன் இந்த ஆண்டு முடிவடையும் மாதம். இந்த ஆண்டில் இறைவன் செய்த அனைத்து நன்மையான காரியங்களுக்கும் நன்றி செலுத்தி, இனி வர இருக்கும் ஆண்டிலும் இறையருளின் துணையை நாடுவோம்.

ஒரு முறை ஒரு பள்ளியில் நடந்த கிறிஸ்மஸ் விழா நாடகத்தில் சத்திரக் காப்பாளராக நடிக்கும் சிறுவனிடம் அன்னை மரியும், சூசையப்பரும் வந்து சத்திரத்தில் இடம் கேட்கும் போது "இடமில்லை" என இருமுறை கூறும் படி வசனம் கொடுக்கப்பட்டது. நாடகம் ஆரம்பமானது. அன்னை மரி, சூசையப்பர் வேடமணிந்திருந்தவர்கள் சத்திரக் காப்பாளரிடம் வந்து இடம் கேட்டனர். அப்போது காப்பாளனாக நடித்த சிறுவன் முதலில் சத்திரத்தில் இடமில்லை என இருமுறை கூறிவிட்டு பின்னர் உணர்ச்சிப் பெருக்குடன் என் வீட்டில் என் அறையில் இடமிருக்கிறது வாருங்கள் என்றுரைத்தானாம். நாடகம் பார்த்தவர்கள் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாயினர். இதேபோன்ற ஆத்மார்த்த அன்பு நம் இதயத்தின் ஆழங்களிலும் பதிய வேண்டும்.

கிறிஸ்துமஸ் - இறைவன் தன் அன்பைப் பகிர்ந்தளித்த நாள். இறைமகன் இயேசுகிறிஸ்துவை நமக்காக நம் மீட்புக்காக பகிர்ந்தளித்த நன்னாள்.இந்நாளில் இந்த சிறுவன் தன் அறையை சூசை,மாயாளுக்கு பகிர்ந்தளிக்க முன் வந்தது அவனின் பெருந்தன்மையே. இத்தகைய பெருந்தன்மை 'பகிர்தல்" நம்மில் நிறைய இறைமகன் குழந்தை இயேசுவிடம் சிறப்பாக மன்றாடுவோம். கிறிஸ்து இயேசு பிறந்த நாள் அன்பின் பகிர்வு நாள். நாமும் நம் அன்பையையும், மகிழ்ச்சியையும் பிறருடன் பகிர்ந்து இவ்விழாவினைக் கொண்டாடுவோம்.


xmas06 xmas06 xmas06 xmas06

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com