புனித தாமஸ் மூர்
பொதுநிலையினர் புனிதர் (1478-1535)
பேராசிரியர் அ.குழந்தைராஜ், அருட்பணி உதவியாளர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் 21ஆம் தேதிக்கு பின் வரும் ஞாயிறு ‘பொதுநிலையினர் நாள்’ என நாம் கொண்டாடி வருகிறோம். ஏனெனில் பொதுநிலையினரான தாமஸ்மூர், நீதியை நிலைநாட்டவும் விவிலியத்தையும் திருச்சபையின் போதனைகளைக் காப்பற்றவும், தலை வெட்டப்பட்டு மறைசாட்சியானர்.
1478ஆம் ஆண்டு லண்டனில் பிறந்த தாமஸ் மூர் 1516ஆம் ஆண்டு ‘உட்டோப்பியா’ எனும் நூலை எழுதினார். ஒரு கற்பனை நாடு, எல்லா நன்மைத்தனங்களும் நிறைந்த, தீமைகள் இல்லாத ஆவியின் கனிகள் நிரம்பப் பெற்ற நாடு. இப்படிப்பட்ட நூல் இதற்கு முன்னரும் பின்னரும் வந்ததில்லை. லண்டன் அந்தோணி பள்ளில் பயின்றார். இங்கிலாந்து நாட்டின் நிதி அமைச்சரும், காண்டர்பெர்ரி பேராயருக்கும் ஓர் உதவியாளராகப் பணியாற்றினார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தபின் லண்டனில் சட்டம் பயின்றார். விவிலியம் வாசிப்பதில் வல்லவரானார். வழக்கறிஞராக இருப்பதா அல்லது ஒரு சந்நியாசி ஆவதா என முடிவெடுக்கத் திணறினார். இறுதியாக துறவியானர். தன்னுடைய தனி ஆன்ம மீட்பை விட பொதுமக்களின் ஆன்ம மீட்பே சிறந்தது என முடிவெடுத்து 1504 இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். திருமணம் செய்து கொண்டார்.
ரிச்சர்டு மன்னனின் வாழ்க்கையை ஒரு புத்தகமாக எழுதினார். இந்த புத்தகம் ஷேக்ஸ்பியரை வெகுவாக கவர்ந்தது. 1576ல் பொதுவுடைமைக் கொள்கை மையமாக வைத்து ‘ எல்லாருக்கும் எல்லாமுமாக’ என்ற கருத்தின் அடிப்படையில் ‘உட்டோப்பியா’ எனும் புத்தகம் எழுதினார். தன்னலம் மற்றும் பேராசை மிகுந்த ஐரோப்பாவின் கொடுமைகளைக் கண்டு மனமுருகினார்.
இதுவரை கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும், நாட்டையும் திருச்சபையையும் பேணிப்பாதுகாத்து வந்த தாமஸ் மூர் அவர்களுக்கு சோதனை காலம் வந்தது. ஹென்றி மன்னருக்கு ஆண் வாரிசு இல்லததால் மனைவி கத்தரீன் அவர்களை மணமுறிவுக்கு ஏற்பாடு செய்தார். தன்னுடைய விருப்பம் நிறைவேற மார்ட்டின் போதனைகள் தனக்கு சாதகமாக அமைத்துக் கொண்டார். அரசனின் மணமுறிவு ஒப்பந்தத்தில் நிதி அமைச்சர் எனும் முறையில் கையெழுத்திட மறுத்தார். 1532ல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினமா செய்தார். 1533ல் அன்னே போலின் முடிசூட்டு விழாவைப் புறக்கணித்தார், ஹென்றி மன்னருக்கு கோபம் தலைக்கேறியது. திருத்தந்தையோடு உள்ள அரசஉறவை முறித்துக் கொண்ட ஹென்றி, தாமஸ் மூர் மீது பழிவாங்கும் எண்ணத்துடன் அவரைக் கொலை செய்ய எண்ணினான். இங்கிலாந்து திருச்சபைத் தலைவர் என்ற முறையின் மன்னன் ஹென்றி, தாமஸ் மூர் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தி 17.4.1534 ஹென்றி விசாரணைக்கு உத்திரவு இட்டான்.
6.7.1535 நம் புனிதர் தலை வெட்டப்பட்டு தம் ஆவியை இயேசுவிடம் ஒப்படைத்தார்.
அவரது கடைசி வார்த்தை ‘மன்னருக்கு நல்ல பணியாள். ஆனால் கடவுளின் திருமுன்னிலையில் முதலாள்'.
1888 ஆம் ஆண்டு அருளாளர் பட்டம் வழங்கப்பட்டது.
1935 ஆம் ஆண்டு புனிதராக உயர்த்தப்பட்டர்
‘சீர்திருத்த மறைச்சாட்சி’ என அழைக்கப்படுகிறார்.
இவரைப் போலவே நாமும் திருச்சபைக்கும், சமுதயத்திற்கும் நம் வாழ்வை அர்ப்பணிப்போம்.
“புனித தாமஸ் மூர் எங்களுக்காக வேண்டிப்கொள்ளும்.”