புனித இஞ்ஞாசியாரின் அனுதின ஆய்வு
ஜூலை 31 ஆம் தேதி புனித இஞ்ஞாசியாரின் திருநாளை சிறப்பிக்கின்றோம். அவர் உருவாக்கிய ஆன்மிகப் பயிற்சி பற்றி நாம் அறிவோம். இது 30 நாட்கள் செய்ய வேண்டிய தியானம். இது தவிர அன்றாடம் (தினமும்) ஆன்மப் பயிற்சி செய்ய அவர் தெரிவிக்கும் முறை பின்வரும் பத்திகளில் தெரிவிக்கப்படுகிறது.
இத்தியானத்தை மாலையிலோ, இரவிலோ தனியாகச் செய்யலாம். முதலில் இப்பயிற்சியைச் (ஆய்வை) செய்ய தூய ஆவியாரை வழிகாட்ட வேண்ட வேண்டும்.
முதல் நிலை: இறைவனின் பிரசன்னத்தை உணர வேண்டும். பின் அன்று நடந்த எல்லா நிகடிநவுகளையும் திரும்பிப் பார்க்க வேண்டும். இதற்கும் தூய ஆவியாரிடம் நினைவூட்ட வேண்ட லாம். நடந்த நிகடிநவுகளில், உள்ளத்தில் ஏதாவது சிக்கலாகவோ, குழப்பமாகவோ உணர்ந்தால் அது குறித்து தெளிவான நிலை தெரிய இறைவனிடம் வேண்ட வேண்டும்.
இரண்டாம் நிலை: நன்றி உணர்வுடன் எல்லா நிகடிநவுகளையும் மனதால் நோக்க வேண்டும். இன்று பெற்ற வெகுமதிகளுக்காக நன்றியுடன் அவைகளை நோக்க வேண்டும். இன்று சந்தித்த மக்களை நினைவிற் கொண்டு, சின்ன காரியமாக இருந்தால்கூட நினைவிற் கொள்ள வேண்டும். இந்நாளில் அடைந்த மகிழ்ச்சியும், இன்பமும் யாவை? என நினைத்துப் பார்க்க வேண்டும்.
மூன்றாம் நிலை: இன்று அனுபவித்த பேருணர்ச்சி (Emotion) என்ன? இன்றைய நாள் முழுவதையும் மனதிற்குள் கொண்டு வந்து, எண்ணங்களில் இறைவனின் ஆவி அவைகளில் செயல்பட்டதை அறிய வேண்டும். ஏதாவது தவறு இருந்தால் குறித்துக்கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியின் மீது இறைவன் எவ்வாறு வழிநடத்துகிறார் என நினைக்க வேண்டும். ஒரு நண்பரை மனம் வருந்தியிருந்ததாக உணர்ந்தால் அவரிடம் செல்ல வேண்டும் எனக் கடவுள் தெரி விக்கலாம். ஒரு குறிப்பிட்ட கட்டாயமான செயலில் ஒரு சலிப்பு, மனசஞ்சலம், வெறுப்பு இருப்பதாகத் தெரிந்தால் அதனை மறு மதிப்பீடு செய்து சரிசெய்ய வேண்டும்.
நான்காம் நிலை: இன்றைய நாளில் நடந்த ஏதாவது ஒரு எண்ணத்தையோ, சம்பவத்தையோ, காரியத்தையோ வைத்துக்கொண்டு தெளிவாக எடுத்துக்காட்ட தூய ஆவியாரிடம் கேள். இறைவன் உள்ளத்தில் சொல்வதை உற்றுப்பார். நன்றியுணர்வுடனும், போற்றுதலுடனும், பரிந் துரைப்பதிலும், மன்னிப்பு கோருவதிலும் தானா கவே உள்ளம் செயல்பட வேண்டும்.
ஐந்தாம் நிலை: வரும் நாளை கருத்திற் கொள். அடுத்த நாளில் செயல்படவுள்ள காரியங் களையும், வரக்கூடிய சவால்களையும் நினை. நம்பிக்கை, வழிகாட்டுதல் மற்றும் புரிந்துகொள்ள வேண்டிய நிலைக்காக செபி. மனதில் ஏற்படும் எந்தவிதமான சோர்வு, களைப்பு, எதிர்பார்ப்புடன் வரும் பயம் மற்றும் ஆச்சரியங்களில் கடவுளை அழைத்து (வேண்டி) அவர் என்னோடு இருக்கவும், எனது ஒளியைத் தரவும் (வழிகாட்டு தலை) கேள். குறிப்பு: இது ஓர் ஆன்மிக உள்ளாய்வுப் பயிற்சி. விதிகள் எதுவும் இல்லை. இதைச் செய்வது அவரவரது முயற்சியைப் பொறுத்ததே.