அசிசி நகர் புனித பிரான்சிஸ்

சந்தியாகு

francis assisi பிரான்சிஸ் மிகு அழகான ஆணாழகர்‌, 25 வயதுவரை உலக இன்‌பங்களால்‌ சூழப்பட்டு, படாடோபமானர வாழ்க்கை வாழ்த்து வந்‌தார்‌. இவரது தந்த மிகப்‌ பரிய பணக்காரர்‌, துணி வியாபாரம்‌ செய்தவர்‌.

'பெருஜியா என்ற நகரோடு போர்‌ தொடுத்தபோது பிரான்சிஸ்‌ பிடி பட்டு சிறையில்‌ அடைக்‌கப்பட்டார்‌. ஓராண்டிற்குப்‌ பிறகு சிறையிலிருந்த விடுதலை பெற்றபின்‌ பல மாதங்களாக காய்ச்‌சல்‌ அவரைப்‌ பீடித்தது, படுக்கையிலிருந்து அவதிப்பட்ட இவர்‌ இவ்வுலகம்‌ மாயை என்று உணர்ந்தார்‌. மனம்‌ மாறினார்‌. ஏழைகளுக்கும்‌, தொழுநோயாளிகளுக்கும்‌ சேவை செய்யத்‌ தொடங்கினார்‌, தனித்திருந்து தியானம்‌ செய்தார்‌. பல தவ முயற்சிகளை மேற்‌கொண்டார்‌.

ஒருநாள்‌ பாழடைந்திருந்த கோயிலில்‌ இருந்த திருச்சிலுவை அவரோடு பேசியது. "பாழடைந்திருக்கும்‌ என்‌ வீட்டைப்‌ பழுது செய்‌” என்ற குரல்‌ திருச்சிலுவையிலிருந்து வந்தது. கற்களையும்‌, மண்ணையும்‌ கொண்டு. தூய தமியான்‌ என்னும்‌ பாழடைந்திருந்த கோயிலைப்‌ பழுதுபார்த்து கட்டி எழுப்பினார்‌.

தன்‌ மகன்‌ செல்வந்தனாவான்‌ என்று கனவு கண்டு கொண்டிருந்த அவரது தந்தை இதனால்‌ மிகவும்‌ ஏமாற்றம்‌ அடைந்தார்‌. ஏழ்மை வாழ்வு பூண்டிருந்த தன்‌ மகனை வீட்டிலிருந்து விரட்டி அவரைப்‌ புறக்கணித்தார்‌. வீட்டைத்‌ துறந்து காட்டுக்குச்‌ சென்று தவ வாழ்வு மேற்கொண்‌டார்‌. பிரான்சிஸ்‌ துறவற வாழ்வு மேற்கொண்டு இயேசுவைப்‌ போதிக்கத்‌ தொடங்கினார்‌. பிற இளைஞர்கள்‌ இவரைப்‌ பின்‌ தொடர்ந்து இவரோடு சேர்ந்து ஏழைகளுக்குப்‌ பணி செய்ய ஆரம்பித்தார்‌.

பன்னிரெண்டு பேர்‌ இவரோடு சேர்ந்து பணி புரிந்தனர்‌. இவர்கள்‌ அனைவரும்‌ உரோமாபுரிக்குச்‌ சென்று பாப்பிறை மூன்‌றாம்‌ இன்னசென்ட்‌ அவர்‌களின்‌ உத்தரவு பெற்று ஏழைகளுர்குப்‌ போதிக்கத்‌ தொடங்கி தவவாழ்வு‌ மேற்கொண்டனர்‌.

தியாக்கோன்‌ பட்டம்‌ பெற்றார்‌ பிரான்சிஸ்‌. குருவாகத்‌ திருநிலைப்பட தான்‌ தகுதியற்றவன்‌ என்று கூறி குருப்பட்டம்‌ பெற மறுத்துவிட்டார்‌. சபையின் தலைமைப் பொறுப்பைத் துறந்தபின்னர் பிரான்சிசு இத்தாலி முழுவதும் சென்று போதிக்கலானார். சபை ஒழுங்குகளையும் திருச்சபை அங்கீகாரத்துக்கு சமர்ப்பித்தார்.

1223ஆம் ஆண்டு கிறித்து பிறப்பு விழாவைப் புதிய முறையில் கொண்டாடத் தீர்மானித்தார் பிரான்சிசு. பாலஸ்தீனத்துக்குச் சென்ற பிரான்சிசு அங்கே இயேசு பிறந்த குகையைப் பெத்லகேமில் கண்டிருந்தார். இயேசு பிறந்த குகை, அங்கே மாட்டுத் தொழுவம், மாடு, கழுதை, வைக்கோல் போன்றவற்றைக் கொண்டு தத்ரூபமாக ஒரு காட்சியை உருவாக்கி, இயேசுவின் பிறப்பைச் சிறப்பிக்க அவர் எண்ணினார். எனவே, உரோமையிலிருந்து அசிசிக்குப் போகும் வழியில் உள்ள கிரேச்சியோ (Greccio) என்னும் மலைப்பகுதி ஊரில் ஒரு குகையைத் தேர்ந்தெடுத்து அதை வைக்கோலால் நிரப்பினார் பிரான்சிசு. அப்பகுதியில் பிரான்சிஸ்கு சபை சகோதரர்கள் தங்கிப் பணிபுரிய இடம் கொடுத்தவர் யோவான் வெல்லீட்டா என்னும் புரவலர். பிரான்சிசின் வேண்டுகோளுக்கு இணங்க வெல்லீட்டா அக்குகையில் ஒரு தொழுவத்தை உருவாக்கினார். ஒரு மாடும் கழுதையும் கொண்டுவரப்பட்டன.

செய்தியறிந்த ஊர் மக்கள் தீவட்டிகளை ஏந்தி, குகையில் வந்துகூடினர். நள்ளிரவில் அக்குகையில் கிறித்து பிறப்பு விழாத் திருப்பலி கொண்டாடப்பட்டது. பிரான்சிசு இயேசு பிறப்பு பற்றிய நற்செய்தியை வாசித்து மறையுரை ஆற்றினார். மாட்டுத் தொழுவத்தில் தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருந்த குழந்தை இயேசுவின் சொரூபத்தை எடுத்து அன்போடு முத்தி செய்தார். அப்போது அச்சொரூபம் உயிருள்ள ஒரு குழந்தைபோலத் தோன்றியதாம். மகிழ்ச்சியால் நிறைந்த பிரான்சிசு மெய்ம்மறந்து நின்றார் என்று அவர்தம் வரலாற்றாசிரியர் சகோதரர் செலானோ கூறுகிறார்.

கிறித்து பிறப்பு விழாவைக் கொண்டாட இன்று உலகெங்கும் குடில் கட்டப்படும் வழக்கம் உள்ளது. இவ்வழக்கத்தைப் பரப்பியதில் பிரான்சிசு பெரும்பங்காற்றினார்.

சிறிய குடிசைகளைக்‌ கட்டி ஏழ்மையான வாழ்வு வாழ்ந்து வேதம்‌ போதித்தார்‌. ஐரோப்பா நாடு முழுவதும்‌ சுற்றித்‌ திரிந்து பிரான்சிசும்‌, அவாது உடனுழைப்பாளிகளும்‌ இயேசுவின்‌ நற்செய்தியைப்‌ போதித்தனர்‌, பல்லாயிரக்கணக்‌கான பேர்‌ மனம்‌ மாறி இயேசுவைப்‌ பின்பற்றினர்‌. வெகு விரைவில்‌ 5000 பேர்‌ பிரான்சிசை பின்பற்றி துறவற வாழ்வு மேற்கொண்டனர்‌.

1224 ஆம்‌ ஆண்டில்‌ இயேசுவின்‌ ஐந்து காயங்களைத்‌ தம்‌ உடலில்‌ அற்புதமான விதத்‌தில்‌ பெற்றார்‌. அக்டோபர்‌ மாதம்‌ 4 ஆம்‌ தேதி 1226 ஆம்‌ ஆண்டில்‌ தனது 44 வது வயதில்‌ இறைபதம்‌ அடைந்தார்‌. இறந்த இரண்டே ஆண்டுகளில்‌ புனிதர்‌ பட்டம்‌ பெற்றார்‌. இவரது அமுத மொழிகள்‌ மோட்சத்திற்கு வழி ஏழ்மை, தாழ்ச்சிக்கு அடிமை, ஏழ்மை தூய்மைக்கு வேர்‌.

புனிதரின்‌ திருநாள்‌: அக்டோபர்‌ 4

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  புனிதர்கள்