புனித அம்புரோஸ்

சந்தியாகு

st.ampurose இப்புனிதர் பிரான்சு நாட்டில் பிறந்தார். இவருடைய தந்தை உயர்ந்த பதவியில் இருந்தார். அம்புரோஸ் சிறுவனாக இருக்கும் பொழுதே தந்தை இறந்துபோனார். தாயுடன் உரோமைக்குச் சென்றார்.

இவருக்கு நல்ல கல்விப் பயிற்சி அளிக்கப்பட்டது. கிரேக்க மொழியிலும் இவர் பயிற்சி பெற்று சிறந்த பேச்சாளரும், கவிஞருமானார். இவரது தனித் திறமையைப் பார்த்து பேரரசர் அம்புரோசை இத்தாலியின் ஆளுநராக நியமித்தார்.

374 ஆம் ஆண்டு மிலாள் நகர் ஆயர் இறந்த பிள் புதிய ஆயரைத் தேர்ந்தெடுப்பதற்காக குருக்களும், மக்களும் கூடியிருந்தனர். தேர்தலை அப் பொழுதுமேற்பார்வையிடும்படி அம்புரோஸ் போயிருந்தார். அப்பொழுது ஒரு குழந்தை 'அம்புரோஸ் நம் ஆயர்' என்று கத்தியது. கத்தோலிக்கர்களும். திருச்சபைத் தலைவர்களும் சேர்ந்து இவரை ஆயர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தார்கள். மனதின்றி இவர் இப்பதவியை ஏற்றார். அப்போது அம்புரோஸ் திருமுழுக்கு பெற்றிருக்கவில்லை. திருமுழுக்கு பெற்று ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்ட பொழுது இவருக்குவயது 34.

தனது சொந்த நிலங்களை கோவிலுக்கும், மற்ற சொத்துக்களை ஏழைகளுக்கும் கொடுத்து விட்டு வேதாகமத்தையும், திருச்சபையின் எழுத்தாளர்களது நூல்களையும் படித்து ஆராயத் தொடங்கினார். ஆலய கீதங்களிலும் அளவு கடந்த ஆர்வம் காட்டினார். ஆலயத்திற்கு வரும் திருக்கூட்டம் ஒன்றாக, உற்சாகமாகப் பண்ணிசைக்கும் பழக்கத்தை புனித அம்புரோஸ் தன் ஆலயத்தில் நிலைநிறுத்தினார். புனித அகுஸ்தினாரை தனது மறையுரையின் மூலம் மனம் மாறச் செய்தார்.

புனித அம்புரோஸ் சாந்தமுள்ளவர். ஏழைகள்மீதும், துன் புறுத்தப்பட்டவர்கள் மீதும் மிகுந்த இரக்கம் காண்பித்தவர். கிறிஸ்துவின் போதனைகள். கடவுளது சட்டங்கள் இவற்றில் இவர் விட்டுக் கொடுக்கமாட்டார்

.

ஒருசமயம் ஜஸ்தீனா என்னும் பேரரசி கோவில் ஒன்றைப் பதிதர்களுக்குக் கொடுப்பதை இவர் அச்சமின்றி தடுத்து நிறுத்தினார். தியோடோசியஸ் பேரரசள் மாசற்றவர்களை அநியாயமாகக் கொன்று குவித்தான். அவளைப் புனித அம்புரோஸ் கோவிலுக்குள் நுழைய விடவில்லை.

"திருச்சபை உலக அரசுக்கு தலை வணங்காது. மன்னன் இருப்பது திருச்சபையில், அவன் திருச்சபையின் மேல் ஏறி உட்கார முடியாது" என்று தெளிவுபடுத்தினார், "தாவீது அரசனும் தவறு செய்தாரே?" என்று பேரரசன் சாக்குப் போக்குச் சொன்னான். அப்பொழுது புளித அம்புரோஸ் "தவறு செய்த தாவீது பரிகாரமாகத் தவம் செய்தார் அல்லவா?" என்றார். பேரரசனும் பகிரங்க தவம் செய்து அக்கிரமத்திற்குப் பரிகாரம் செய்யலானான்.

இவ்வாறாக புனித அம்புரோஸ் தனது கடமையைச் செய்ய பின்வாங்கியவரல்ல. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இவர் ஒரு நல்ல எடுத்துக் காட்டானார்.

புனித அம்புரோஸ் 397 ஆம் ஆண்டு இறந்தார்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது