யோசேப்பு - இயேசுவின் வளர்ப்புத் தந்தை..


சகோ.சூசையப்பன் - பொதுவாழ்வு செபக்குழு -மத்தளம் பாறை, தென்காசி


இயேசுவின் பிறப்பில் முக்கிய கதாப்பாத்திரங்கள் மூவர். இயேசு, மரியா, யோசேப்பு. இதில் யோசேப்பு பற்றி குறிப்பிடும் நற்செய்தியாளர்கள் மத்தேயு, லூக்கா. இவர்களின் பின்னனியில் யோசேப்பின் பங்களிப்பை பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு மூலம் அறிவோம். யோசேப்பு முதல் இரண்டு அதிகாரங்களுடன் மறைந்துவிடுகிறார். அதற்குள் அவரின் அளப்பறிய முடியாத செயல்பாடுகள் ஏராளம். அவரை நேர்மையாளராக நற்செய்தியாளர்கள் நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்கள். அந்த நேர்மையாளரை கண்டு உணருவோம்.

தாவீதின் மகன் இயேசு
வானதூதர் இயேசுவின் பிறப்பை யோசேப்பிடம் கூறுவது போல் இறைவாக்கினர் நாத்தான் மூலம் தாதுக்கு ஆசியாவின் பிறப்பு மறைமுகமாக அறிவிக்கப்படுகிறது. (3சாமு. 7:13-14) இயேசுவை தாவீதின் குலத்தில் இணைக்கும் விதத்தில் யூத குலத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் தான் இயேசு என்று காட்டப்படுகிறது. யோசேப்புக்கும் இயேசுவுக்கும் இரத்தஉறவு இல்லை. ஆனால் கடவுளால் அமைத்துக் கொடுத்த சிறப்பு உறவு இருக்கிறது. இயேசு யோசேப்பிடம் கொண்டுள்ள சட்டரீதியான உறவின் அடிப்படையில் தான் அவர் தாவீதின் மகன் என்று அழைக்கப்படுகின்றார் என்பது மத்தேயு நற்செய்தி தரும் கருத்து.(மத்தேயு 1:18-21)

இஸ்ரயேலில் யூதாவின் குலம் மக்களை ஆளும் மன்னர் குலமாக ஏற்கப்பட்டது. மரியா யூதாவின் குலத்தைச் சேர்ந்தவர் என்று திருச்சபையின் பாரம்பரியம் சொல்கிறது. ஆனால் விவிலிய அடிப்படையில் இக்கூற்றுக்கு நேரடி சான்று இல்லை. மரியாவின் குலம் குறித்துப் புதிய ஏற்பாட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் குருகுலத்தைச் சேர்ந்த எலிசபெத்து மரியாவின் நெருங்கிய உறவினர் ,அதன் அடிப்படையில் மரியா குரு குலத்தைச் சேர்ந்தவரென்று சொல்லமுடியும். யோசேப்புக்கும் இயேசுவுக்கும் இடையே சட்டரீதியான தந்தை மகன் உறவு ஏற்பட்டதன் விளைவாக இயேசுவும் யூதாவின் குலத்தைச் சேர்ந்தவர் ஆனார்.

நேர்மையாளர் யோசேப்பு
யூதர்களின் வழக்கப்படி மண ஒப்பந்தமான பின் குறிப்பட்டகாலம் வரை தனித் தனியாக வாழ்வார்கள். அதன்பின் மணமகன் மணமகளை தன் இல்லத்திற்கு அழைத்து வந்து அவளுடன் குடும்பம் நடத்தத் தொடங்குவான்.

யோசேப்புக்கும் மரியாவுக்கும் திருமண ஒப்பந்தம் இருந்தது. (மத1:18)ஆனால் திருமணத்திற்கு முன்னே கருத்தரித்தால் மரியாவிடம் புனித வாழ்க்கை வாழ வழி வகுத்தார். தன்னை புனித வாழ்வுக்குத் தயாரித்தார்.. வானதூதர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டார்.(மத 1:20) தன்னை மாற்றிக் கொண்டார். புனித வாழ்வைத் தொடங்கினார்.

யோசேப்பு மரியாவுடன் இணைந்து கடவுள் திட்டத்திற்கு நிறைவேற்ற ஒத்துழைத்தார். யோசேப்பின் நேர்மையை மத்தேயு சுட்டிக்காட்டுகிறார். அவரது நேர்மைக்கு காரணம் அவர் கடவுளுக்கு அஞ்சியது தான். கடவுளுக்கு அஞ்சி நடக்க வேண்டும் என்ற கருத்து இணைய சட்ட நூலிலும் வரலாற்றிலும் வலியுறுத்தப்படுவதைக் காணலாம். (இச 4:10,6:2) இப்படியாக பயந்து வாழ்ந்த மனிதன் மோசே கடவுளை நெருப்பு மூலமாகக் கண்டும் சாகவில்லை என்று விவிலியம் கூறுகிறது. இறை அச்சமே ஞானத்தின் தொடக்கம் (சீராக 1:16-20;)மொத்தத்தில் தெய்வபயம் ஒருவரின் ஞானத்தையும் அறிவையும் வளர்க்கும்.

அபுக்கூக்கு இறைவாக்கினர் "நேர்மையுடையவரோ தம் நம்பிக்கைனால் வாழ்வார்." (அபுக் 2:4) என்று கூறுகிறார். இதனால் நேர்மையாளரான யோசேப்பு இறை அச்சத்திலும், இறைஞானத்திலும் சிறந்து விளங்கினார். குழப்பத்தின் மத்தியிலும் இறைபிரசன்னம் அவரை நிதானப்படுத்தியது. நிதானமாகச் செயல்பட்டார்.

வானதூதர் யோசிப்புக்கு மரியாவ பற்றிய செய்தியைக் கூற வரவில்லை. மாறாகக் குழப்பத்தை தெளிவுபடுத்தத் தான் வந்தார். மீண்டும் தாதுக்கும் இயேசுவிற்கும் தொடர்பு ஏற்படுத்தும் நோக்கத்துடன் அவர் மரியாவ மனைவியாக ஏற்றுக் கொண்டு, பிறக்கும் குழந்தைக்குப் பெயரிட வேண்டும் என்று பணிக்கப்படுகிறார். யூத பாரம்பரியத்தில் குழந்தைக்குப் பெயரிடும் உரிமை அதன் தந்தைக்கே உரியது. திருமுழுக்கு வானின் பெயர் அவரது தந்தை செக்கரியாவால் உறுதி செய்யப்படுகிறது.(லூக்கா 1:62:63) அதுபோல மரியாவுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்குப் பெயரிடும் உரிமையைக் கடவுள் யோசிப்புக்கு வழங்குவதின் மூலம் யோசேப்பு இயேசுவின் வளர்ப்புத் தந்தை மட்டுமல்ல சட்டப்படியான தந்தையும் ஆவார் என்பது தெளிவாகிறது.

மேலும் யோசிப்புக்குக் கனவுகளின் வழியாக இறைவன் அவரிடத்தில் ஒப்படைத்த செய்திகளை மனமுவந்து ஏற்று அதன்படி நடந்து தம் நேர்மையையும் ஞானத்தையும், நம்பிக்கையையும் நிரூபித்தார். அதன் மூலம் மனித மீட்பில் தம் முழு பங்களிப்பையும் அவர் வழங்கினார்.

யோசேப்பு கடவுளின் கட்டளைப்படி மரியாவை மனைவியாக ஏற்றுப் பிறந்த குழந்தைக்கு 'இயேசு' என்று பெயரிட்டார். இதன் மூலமாக யோசேப்பு இயேசுவின் தந்தை என்றும், இயேசு தாவீதின் மகன் என்ற நிலையையும் அடையச் செய்துள்ளார்.

இவ்வாறு யோசேப்பு இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகவும்,
இயேசு தாவீதின் மகனாக அழைக்கப்படுவதற்குக் காரணமாகவும்,
நம் மீட்பின் தொடக்கமாகவும்,
வெற்றியாகவும் அமைந்துள்ளார் என்றால் அது மிகையாகாது.
நாமும் யோசேப்பின் இறை அச்சத்திலும், இறைஞானத்திலும்,
நேர்மையிலும் வளர்வோம்.
மீட்பைச் சொந்தமாக்கிக் கொள்வோம்.
 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு புனிதர்கள்