இளையோர் ஆண்டு - சிறு பரிந்துரைகள்

திருமதி அருள்சீலி அந்தோணி - சென்னை

நண்பா...
நமது திருச்சபை இளையோர் ஆண்டாக அறிவித்திருப்பதை நினைத்துப் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்! நீரே இந்தப் பரந்த உலகின் விடியவாகத் திகழப் போகின்ற பொன், வைரம் போன்ற நவரத்தினங்கள் என்பதை மறவாதீர்கள். எனவே உம்மை உற்சாகப்படுத்த எனது சிறு பரிந்துரைகள்.....
youth year2010-11
நண்பா ..
இந்த நொடிப் பொழுதே முக்கியம்! நண்பா நம் மனம் என்றும் அமைதியானது! ஆனால் இந்த நொடிப் பொழுதை எவ்வாறு வாழ்ந்து வருகின்றாய்? என்பதைப் பொறுத்துத் தான் அமைகின்றது மனித வாழ்க்கை.இந்த நொடி பொழுதே முக்கியம்! நண்பா நம் மனம் என்றும் அமைதியானது! ஆனால் இந்த நொடி பொழுதை எவ்வாறு வாழ்ந்து வருகின்றாய்? என்பதை பொறுத்து தான் அமைகின்றது மனித வாழ்க்கை.
தோழா!
நேற்று நடந்தது- நாளை நடக்கப் போவது நினைத்துக் குழம்பி நிற்காதே! காரணம் நிகழ்காலத்தை உணர முடியாமல் தவிக்கின்றோய்! வாழும் இந்த நொடிபொழுதே மிகமிக முக்கியம் என்பதை மறவாதே! மாறாக- நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்பதைக் கவனி! கடந்த போனதை நினைத்து எதிர்காலத்தை நினைத்துக் குழம்பி ஒரு மனநோயாளியாக மாறும் நிலை அதிகம்.

எனவே தோழா,
கடந்த காலப் பிரச்சனைகள் எதிர்காலக் கவலைகள் நிகழ்காலத்தில் அதிகாரம் செலுத்தாவண்ணம் கவனத்தோடு செயல் படு. காரணம் கடந்தவை, எதிர் கொள்பவை நமது நம்பிக்கையைக் குலைக்கும் ஆயதம்! சோர்வு, ஏமாற்றம், கவலைப் போன்றவை தோன்றி உம்மை அச்சுறுத்தும்!

நண்பா இன்றைய பொழுதை விட நாளைய பொழுது நன்றாக அமைந்திட நீயே தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள். காலம் முழுவதும் திட்டங்களைத் தீட்டிக் கொண்டே போனால் நமது பிள்ளைகளும் வளர்ந்து விடுவார்கள். நெருங்கியவர்களும் விலகிவிடுவார்கள்.

வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதை நிகழ்காலத்திலேயே கணித்தல் அவசியம். உன் கையிலுள்ள நொடிபொழுதே உனது கட்டுபாட்டுக்குள் உள்ளது என்பதை அறிந்து கொள்!
எதிர்காலம், பணம், அச்சம், நோய் இவை எல்லாம் உன்னைப் படைத்த இறைவன் கையில் ஒப்படைத்து விடு! உன் கையிருக்கும் கணபொழுதை எப்படி அறுவடைச் செய்வாய் என்பதை நினைவில் கொள். நாளைபொழுதை இறைவன்பால் வைத்துவிடு.
நண்பா!
உன் கரங்களில் தவழும் நொடிபொழுது
இனியபொழுதாக அமைந்திட எம் வாழ்த்துக்கள் !
நலமுடன் நாளும் வளர்ந்திட வாழ்ந்திட நொடிபொழுதின் ஆசீர் !!

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  இளைஞர் ஆண்டு


sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்





A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com