உன் இலட்சியப் பாதையை நோக்கி..

திருமதி அருள்சீலி அந்தோணி-சென்னை.

new way to led

 

நண்பா!
ஒன் மினிட் ப்ளீஸ்
கடந்த ஆண்டின் பயணம் வீணாகவில்லை.
நீ போகும் பாதையும் முடியவில்லை .
ஆனால் நீ களைத்துப் போயிருக்கலாம்.
உன் கண்கள் சோர்ந்துப் போயிருக்கலாம்.
உன் கைகள் விரைத்துப் போயிருக்கலாம்.
உன் இதயம் இறுகிப் போயிருக்கலாம். -
இருப்பினும் ஒரு நிமிடம்
உனக்காகப் பிறந்திருக்கும் இப்புத்தாண்டில்
இறைவனோடு வெற்றிநடைப் போட புறப்படு தோழா!
உருகாத மெமுகு ஒளிதருமோ?
அசையாத இராட்டை நூல் தருமோ?
உடையாத முட்டை உயிர் தருமோ?
உழைக்காத தேனீ தேன் தருமோ?
கரையாத மேகம் மழை தருமோ?
மடியாத விதைச் செடித் தருமோ?
அதிராத யாழ் இசைத் தருமோ?
ஈகை வழங்காமல் வள்ளல் தோன்றுவானோ?
எனவே
உழைக்காமல் நீ உயர்ந்திடுவாயோ?
மனிதனாகப் பிறந்தது இறைவனாக இருப்பினும்
உழைப்பே உயர்வு எனச் சுட்டிக் காட்டியவர் இயேசு!
தோழா!
உனக்காக மலர்ந்திடும் புத்தாண்டில்
இறையுணர்வில் ஆற்றல் பெற்ற
இகமதை வென்றிடுவாய்!
தடைக்கற்களைப் படிக்கற்களாக்கி
உன் வாழ்க்கைப் பாதையை வளமாக்கப் புறப்படு!
தோழா!
வாழ்க்கை என்பது நிரந்தரம் அல்ல
ஆனால்
வாழ்வில் இலட்சியமும் குறிக்கோளும் நிரந்தரமே! நிஜமே!
நீ ஒரு புதுப் பிறப்பாக மாற வேண்டுமானல் உன் வாழ்வைச் சீர் குலைக்கும்
நாகரீகச் சுமைகளை - தடைகளைப் பாடையிலேற்றி விடு!
உன் பரமனின் பிறப்பாய் வாழ அவரில் தஞ்சம் புகுந்துவிடு!

உன் கடந்த காலம் இயேசுவின் மார்பில் உறங்கட்டும்!
சரிகட்ட முடியாதவற்றை அவரில் புதைத்துவிடு!
புத்தாண்டில் புது யுகம் படைத்திட
வீரத்தோடும்- விறுவிறுப்போடும்
உன் இலட்சியப் பாதையை நோக்கிப் பணயி!
உன் பயணத்தில் மழலை மன்னவனும்
பயணிக்கின்றார் என்பதை உன்
அனுதினச் செபத்தால் நிறைவுச் செய்....

புறப்படு நண்பா!
நல்முத்துக்களை நின் கரங்கள் குவிக்கும் என்றும் உன் வளர்ச்சிப் பாதையில்..........

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  இளைஞர் ஆண்டு


sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்





A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com