தெய்வபயமே ஞானத்தின் தொடக்கம்

திருமதி. சிறுமலர் கிளாரன்ஸ், சென்னை

பயத்தின் தோற்றம்:

தெய்வத்துக்குப் பயப்படாத மக்களாய் நாம் இருக்கும்போது உலகு சார்ந்த பயம் நம்மை சூழ்கிறது. இதை ஆதாம், ஏவாளின் வாழ்க்கையில் நாம் அறிவோம். பாவம் செய்த அவர்கள் அச்சத்தால் ஆட்கொள்ளப் படுகிறார்கள். அவர்களிடம் தேவையற்ற நாணம் ஏற்படுகிறது (ஆதி ஆகமம் 3:10). ஏனெனில் ஒரு வருகை நாணம் பாவத்திற்கு இட்டுச் செல்லும் (சீராக் 4:21).

சாராவின் நம்பிக்கைக்குறைவு:

எனவே நமது பாவங்கள்தான் நமது பாவஉணர்வுக்கு காரணமாக உள்ளது. சாராவுக்கு ஆண்டவர் ஒரு மகனைத் தருவேன் என்று வாக்களித்த போது அவரது நம்பிக்கைக் குறைவு அவரை நகைக்க வைத்து அதன்பின் அச்சம் வரை ஆட்கொள்கிறது. (தொ.நூ 18:15)

சினத்தைத் தூண்டும் பயம்:

காயின் செய்த பாவம், ஆண்டவர் அவனிடம் பேசிய போது சினத்துடன் பதில் பேசத் தூண்டியது. அதற்குக் காரணம் அவனது பயம். ஆபேலைக் கொலை செய்ததை ஆண்டவர் அறிந்துக் கொண்டார் என்று அறிந்து பயந்து, தனது பயத்தை மறைக்க சினத்தை வெளிப்படுத்தினான். சினம் பயத்தின் வெளிப்பாடுதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனிதரின் சினம் கடவுளுக்கு ஏற்புடைய செயல் நிறைவேறத் தடையாயுள்ளது. (யாக் 1:20)

ஆண்டவர் மீது அச்சமின்மை :

ஆண்டவரைப் பற்றிய அச்சமின்மை தீயோராயிருந்தும் தம்மைத் தேடி அழைத்த அரசரை, திருமண உடையணியாமல் அவமதிக்கக் காரணமாய் இருக்கிறது என்பதை திருமண விருந்து உவமையில் பார்க்கிறோம். (மத் 22:10)crucifiction நல்ல மற்றும் கெட்ட கள்ளன் உவமைகளைப் பார்ப்போம். ஆண்டவரைப் பற்றிய அச்சம் உலக மீட்பரை மரணத்தருவாயில் சந்திக்க வைக்கிறது. உணர வைக்கிறது. அவன் விண்ணகத்தை தாயகமாகக் கொள்கிறான். ஆனால் ஆண்டவரைப் பற்றிய அச்சமின்மை, அதன் விளைவான பாவஉணர்வற்ற தன்மை உலக மீட்பரை அவமதிக்கத் தூண்டுகிறது. அதுவே அவன் பாதாளத்தில் விழக் காரணமாகிறது.

குற்ற உணர்வு:

உலக நாட்டமுடையோருக்கு ஏற்படும் பய உணர்வு ஞானத்தை தராது. ஏனென்றால் அந்த பயஉணர்வு குற்றஉணர்வையே தூண்டும். கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவைத் துண்டித்து விடும். இதுதான் ஆசிப்பெற்றோர் வாழ்வில் பாவம் நுழைந்தபோது நிகழ்ந்தது. செய்தபாவம் குற்ற உணர்வைத் தூண்டியது. ஆண்டவரை நேருக்கு நேர் சந்திக்கும் நிலையைத் தடுத்தது.

தெய்வபயமே ஞானத்தின் தொடக்கம்:

அன்னை மரியாவின் தெய்வபயம் கன்னிமரியாவை உலகத்தினர் அனைவரின் தாயாக உயர்த்தியது. Virgin Maryதன் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்வுக்கும் கடவுளிடமும், மனிதரிடமும் போராடாமல் மனதில் இருத்தித் தியானித்தார். தெய்வபயம் நிறைந்த அவரிடம் உலகு சார்ந்த பயங்கள் ஏதும் இல்லை. தெய்வ பயம் இறைவனின் விருப்பத்தை உணர்ந்து, புரிந்து, இறைவழி நடக்க இவருக்கு உதவியது. உள்ளத்தை ஊடுருவிப் பார்ப்பவர் நம் கடவுள். மறைவாய் உள்ளதை கூரைமேல் அறிவிப்பவர் நம் கடவுள். எனவே உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவைப் பார்க்கிறவர்க்கே நமது துதிகள் இருக்க வேண்டும். எனவே, போலியான வெளிவேட முகமூடியைக் களைந்து விட்டு இறைவனை ஆவியிலும் உண்மையிலும் தொழுவோம். தேவையற்ற உலக அச்சங்களை விலக்குவோம். இறை அச்சத்தால் நிரம்பப்பெற்று இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவோம்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  இளைஞர் ஆண்டு


sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்





A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com