கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் * Merry Christmas * நத்தார் வாழ்த்துக்கள்


    பெத்தலகேமில் பிறந்த மீட்பரே -எம் மன
    பெட்டகத்தில் பிறந்திட வா...வா...
    சமாதானத்தை சத்தியமாக்கிட்ட வேந்தா - உலக
    சத்தியத்தினை மீட்டிட வா.. வா.. வா..
    விண்ணகத்தின் குட்டி இளவரசே -எம்
    இதயகுடிலில் பிறந்திட வா..வா..
    
jesus

நற்செய்தி


வானதூதர் அவர்களை விட்டு விண்ணகம் சென்ற பின்பு, இடையர்கள் ஒருவரையொருவர் நோக்கி, "வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்" என்று சொல்லிக் கொண்டு, விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர்.

லூக்கா 2:15-20


அன்புடன் வாழ்த்து மடல்


இறை இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்!
"அஞ்சாதீர்கள்" என்று இடையர்களுக்கு வலுவூட்டிய இறைவன், நம்மையும் இயேசு பாலன் வழியாகத் தேடிவருகின்றார். நம்மை தேடிவந்தவரை நாமும் நாடிச் செல்வோம். அவர் நம் இதயக்கதவைத் தட்டுவதை கவனமுடன் கேட்டு நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வரவேற்போம். அவர் நம்முடன் தங்கட்டும்..

prayinghandsஇந்த விழாக்காலத்தில் இறைமகன் இயேசு உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், உங்கள் நண்பர்களுக்கும் தமது நிறைவான ஆசீரைப் பொழிவாராக! வரும் புத்தாண்டில் அருளும், அமைதியும், வளமும், நற்சுகமும் அளித்து எந்நாளும் அனைவருக்கும் நிறைவான மகிழ்ச்சி தருவாராக!

எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு. ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்; வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன். உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களிகூர்வேன்; உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவேன். என் கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார். நம் தந்தையாகிய கடவுளுக்கு என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

அன்பின்மடல் 12 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் சிறப்பு மடலைப் பார்வையிடும் உங்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். சிறப்பு மலரை அலங்கரித்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் மற்றும் இணைய பக்கங்கள் வடிவமைக்க உற்சாகம் அளித்த "அழகி" திரு.விஸ்வநாதன் அவர்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள் பல உரித்தாகுக!!!

என்றும் அன்புடன்
நவராஜன்