நம்பிக்கையாளர்களின் வீண்மீன்.
நதிக்கரையில் அழகிய உரோமை நகர். அரண்மனையில் அகுஸ்து சீசர் அமர்ந்திருந்தான். அவன் எதிரே ஒரு பளிங்கு மேஜை. அதன் மீது ஒரு தேசியபடம். உரோமை ஆளுகைக்கு உட்பட்ட உலகம். மன்னன் வாசித்தான். சிந்தித்தான். உரோமை சிற்றரசர்கள், ஆளுனர்கள், சேனாதிபதிகள் அனைவருக்கும் ஓரு உத்தரவு அறிவிக்கப்பட்டது. ஒவ்வொருவரும் தம் சொந்த ஊருக்குச் சென்று குடிகணக்கு கொடுக்க வேண்டும். அந்த ஆணை நாசரேத் ஊரிலும் வந்தது.
சூசை ஏழை தொழிலாளி. மரியாவோ நிறைமாத கர்ப்பணி. சொந்த ஊராகிய பெத்லகேம் கணக்கு பதிவுச் செய்ய வேண்டியிருந்தது. 70 மைல் தூரம். மரியா, சூசையோடு புறப்பட்டார். நம்பிக்கை அவரில் குடிக் கொண்டிருந்தது.
"யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார். " மத்தேயு 2-6
பெத்லகேம் நெருங்கும் முன்பே மரியா பேறுகால வேதனை. எங்கு தேடியும் இடம் கிடைக்கவில்லை. ஏனெனில் இறைமகனின பிறப்பு எளியோருக்கு என்பதை தன் பிறப்பின் வாயிலாக நிறைவுச் செய்தார் இறைவன் மாட்டுத் தொழுவத்தில். பெத்லகேம் விண்ணையும் மண்ணையும் ஒன்றிணைக்கும் பாலமானது. மரியின் கனி பல்லுயிருக்கும் மீட்பின் வித்தாகியது.
இன்று நாம் கொண்டாடும் கிறிஸ்து பிறப்பு:
- வார்த்தையானவர் மனித வரலாற்றில் தம்மையே கரைத்து மனுவுருவானார். யோவான் 1-4
- நம்மில் நம்மோடு ஒன்றானார். மத்தேயு 1-23
- இறைமையை வெறுமையாக்கி தம்மையே தாழ்த்தியவராக தன்தையே தாரைவார்த்துக் கொடுத்தார். பிலிப் 2:6-11
- இறைவனுக்கு மகிமையும் -மனிதருக்கு மாண்பையும் வழங்கிட மெசியா மழலையானார். லூக்கா 1:11-14
- இறைவனால் முன்னறிவிப்பு காட்டப்பட்டு இறை திட்டத்தை சிரமேற்க் கொண்டு இனிதே நிகழ்ந்திட அவதரித்தவரே இயேசு. திப 2:22-24
- அனல் கக்கும் தீயானாலும், அருள் தரும் ஆவியினாலும், திருமுழுக்கு தந்து சீராட்டிட, திக்கெட்டும் பதித்திட வருகிறார். லூக்கா 31:16-17
- அனைவரும் நிறைவாழ்வை அடையும் பொருட்டு இறைவனால் மனித உருவம் எடுக்கப்படவர் தான் இயேசு கிறிஸ்து! யோவான் 3:16
- புதிய வானம் புதிய வையகம் (திருவெளி 21:1-2) புதிய மனித வர்க்கம் - புதிய மண்ணகம் வரலாறு -எழுச்சி காண புரட்சியாளராக வருகின்றார்.
ஆக மொத்தம் எதிர்பார்க்கபடுபவர் அவரே! எச்சரிக்கை தருபவரும் அவரே! மேல்தட்டு மக்களின் வீழ்ச்சிக்காக இறைமகன் இந்த நம்பிக்கை ஆண்டில் ஏழை எளியவர்களின் துயர் துடைக்க நம்மிடையே வருகின்றார்.
வாருங்கள் அன்புள்ளம் கொண்டு உவகையோடு வரவேற்போம்!.
நமது இதய ஆழ்மனதில் மழலைமன்னவனின் கருப்பொருளான - சாதி- சமயம், இனம்,மொழி, கடந்து வறியோர் நெஞ்சங்களில் நமது உறவை மெருகூட்டி இன்முகம் காட்டிட ஒன்றினைவோம்.
கிறிஸ்து பிறப்பு! இறை - மனித - உறவை வளர்த்தெடுக்க! அன்பு, நீதி, நேர்மை, உண்மை பகிர்வு, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மதிப்பீடுகள் ஏட்டளவில் மட்டும் பதிந்து விடாமல் சொல்லிலும்,செயலிலும் அரங்கேறிட இந்த நம்பிக்கை ஆண்டு, நம்பிக்கை ஒளி தந்து வழி நடத்திட மூவொரு இறைவனில் சரணடைவோம்.
மழலை மன்னவனின் பிறப்பு விழா! திக்கெட்டும் இருள் அகன்று ஒளி ஒவ்வொரு வறியோர் உள்ளங்களில் ஒளிர்ந்திட வாழ்த்திடுவோம்!