Image

கருணை உள்ளம் கடவுளாக

கருணை உள்ளம் இன்று கடவுளாக பிறந்த நாள்

மாட்டு தொழுவத்தில் மகத்தான உன் பிறப்பு

இரட்சிக்க மனிதர்களை இங்கே இயேசுநாதர் அவதரித்தார்

வருதப்பகிறவர்களே வாருங்கள் என்னிடத்தில் என்றார்

பாரம் சுமப்போருக்கும் நான் இளைப்பாறுதல் தருவேன் என்றார்.

போற்றி கொண்டாடிடும் இன்று உலகமே இதன் சிறப்பு

கருணை உள்ளம் கொண்ட கடவுளே நீரே என்று

மனித மனமெனும் மயங்க நிலங்களில் கருணைப் புவனம் குழுமிப் பூத்திட

புனித நாயகன் பிறந்த நாளிதில் இனிய வாழ்த்துக்கள் இதயவாசலில்

அலைகள் தொடுத்திடும் கடலின் ஞானமாய் நுரைகள் பூத்திடும் பாலின் வெண்மையாய்

இரவைத் தேற்றிடும் நிலவின் இனிமையாய் உறவும் உலகமும் வாழ வாழ்த்துக்கள்

அருட்தந்தை அந்தோணிதாஸ் க.ச. மத்தியாஸ் ஆலயம், அசோக் நகர், சென்னை-83