உன்னத தேவனின் அன்பு மகன்
உன்னத தேவனின் அன்பு மகன்
இன்று உலகிற்க்கு வந்தாரே
நம்மோடு ஒன்றாய் கலந்திடவே
இன்று குடிலில் குடிகொண்டாரே
உலகில் நல்மனம் படைத்தவருக்கு
பரமன் அமைதியை வாக்களித்தார்
நல்மனம் படைத்த மாந்தரையும்
பாலன் இயேசு அழைக்கின்றார்
இடையர் கேட்ட நல்வாழ்த்தினையே
நாமும் இன்று குடிலில் கேட்கின்றோம்
குழந்தை இயேசுவும் நம்மை
இன்று குழந்தையாக மாற அழைக்கின்றார்