header

வார்த்தை மனு உருவானார்.

திருமதி. அருள்சீலி அந்தோணி

merry xmasஇறைவன் வார்த்தை வழியாக மனிதன் எப்படி வாழ வேண்டுமென்று பழைய ஏற்பாட்டில் பலமுறை கூற முற்பட்டார். முயன்றது முடியாத போது, எப்படி மனிதன் வாழ வேண்டும் என்ற எதிர் நோக்கோடு, அவ்வாறே தன் திட்டத்தையே மாற்றிக் கொண்டார்.

இதுவே வார்த்தை மனுவுருவானார்! நம்மிடையே குடி கொண்டார்! இதுவே கிறிஸ்துமஸ் பெருவிழா!

சின்னக் குழந்தை இயேசுக்கு என்ன பரிசு வழங்க இருக்கின்றீர் என்பதை தெளிவூட்ட சில யோசனை.

merry xmas

குட்டிஸ்களே!

சிறுவர்களாகிய நீங்கள் புல்லாங்குழல் போல் வெறுமையாகவும், அதை வேளையில் இனிய மெல்லிசை மீட்டும் குழலாகிடுங்கள்! குருக்கள் ஆண்டில் இருக்கும் நாம், நமது குருக்களுக்காக மழலை இயேசுவிடம் வேண்டிடுவோம்! பூவுலகில் நல் மனதவருக்காக அனுதினம் செபித்திடுங்கள்.!

இறைவார்த்தையின் வழி வாழ்வு என்பதை அனுதினம் படித்திடுங்கள் ! அதன் பலனாக உங்களது உள்ளத்தை ஊடுருவிய எதிர்மறை எண்ணங்களை அகற்றிடுங்கள்.

புல்லாங்குழலில் உட்புகும் காற்று இசையை தருவது போல் நீங்கள் சுவைத்திடும் இறைவார்த்தை உங்கள் வாழ்வில் வசந்தத்தை வழங்கட்டும்.

கிறிஸ்து பிறப்பு பெருவிழா, உங்கள் வாழ்வில் மழலை மன்னவன் வந்துதிருக்க உமது இதயங்களை விசாலமாக திறந்து வையுங்கள்!

நீர் சிறுமலர்கள். சமுதாயத்தில் வாடிடும் மழலையர் விடுதியை நாடி சென்றிடுங்கள். உங்களுடைய சிறிய பரிசினை அவர்களோடு பகிர்ந்திடுங்கள்.! அவர்களும் எமது தம்பி தங்கையரே! என்பதை உணர்ந்திட அழைக்கின்றது.! பகிர்ந்திட அழைக்கின்றது! வாருங்கள்! குட்டிஸ்களே!

அனாதை விடுதிகளை கண்டடையுங்கள்! அங்கே மழலை மன்னவன் இயேசு பாலன் அவர்கள் மத்தியில் தன் பிஞ்சு கரங்களை அசைத்து வரவேற்கின்றார்.

merry xmas

சென்றிடுங்கள்! கொடுத்து மகிழ்ந்திடுங்கள்!
இதுவே மகிழ்ச்சியான பெருவிழாவாகும்!!

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com