கிறிஸ்து பிறப்பு பெருவிழா சிறப்புச் செய்தி

 3kings

கிறிஸ்து இந்த மண்ணில் மனிதனாக வந்து பிறந்தது கிறிஸ்தவம் என்ற மதத்தை உருவாக்க அல்ல. மாறகத் தன்னைப் போல் சிந்திக்கும், தன்னைப் போல் பிறரை அன்புச் செய்யும், தன்னைப் போல் பிறருக்காக உயிரைக் கூடக் கொடுக்க முன்வரும் தன்னைப் போல் பிறரை ஏற்றுக் கொள்ளும் நல்ல மனம் கொண்ட "கிறிஸ்து அவன்" மற்றும் "கிறிஸ்து அவள்" உருவாக்குவதற்காக. எனவே அழகிய கிறிஸ்தவப் பெயர்களைத் தாங்கி நானும் கிறிஸ்தவ மதத்தின் ஒர் அங்கத்தினன் என்று பெருமைப் பாரட்டிக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

கிறிஸ்துவும் நம்மால் பெருமை கொள்ளப் போவதில்லை. மாறாகக் கிறிஸ்துவின் மனம் கொண்டவர்களாய் கிறிஸ்துவின் மதிப்பீடுகளை வாழ்ந்துக் காட்டுவதில் பெருமிதம் கொள்வோம். ஏனென்றால் கிறிஸ்து இந்த மண்ணில் பிறந்தது மதத்தை உருவாக்க அல்ல மாறாக நல்ல மனங்களை உருவாக்கவே.

இறை நம்பிக்கை என்பதை இன்று நாம் எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்கச் செய்யும் பகிர்தலின் தத்துவமாக்க வேண்டும். அத்தகைய இயல்புநிலையை ஏற்படுத்தும் தயாரிப்புகளில் நம்மை ஈடுபடுத்த வேண்டும்.

இருப்பவர்கள் இல்லாதவர்களைத் தேடிப் போவோம். வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வாழ்வைத்தேடுவோரை மீட்டெடுப்போம். இருளைப் பகைத்துக் கொண்டும், பழித்த கொண்டும் வாழமால் இங்கு ஒளியை ஏற்றி வெளிச்சம் பரப்ப உறுதியெடுப்போம்.

கிறிஸ்து பிறப்பு விழா என்பது மானுட விடுதலையின் விழா. இறைப் பகிர்வின் பாசத்தின் விழா,இறைவன் தன் மகன் வழியாகத் தன்னையே நமக்குக் கொடுக்கின்றார். நாமும் கொடுப்பதில் பெறவேண்டும். கொடுத்து, பகிர்ந்து வாழத் துவங்கினால்தான் மனிதம் மலரும். அன்பு நிலவும், சமத்துவம்,சமாதானம் ஓங்கும்.

எல்லா ஆண்டையும் போல இந்த ஆண்டையும் அணுகாமல் வருங்காலம் எல்லாருக்கும் வசந்தக் காலமாக மாற முயற்சிகளை மேற்கொள்வோம். இத்தகைய நமது முயற்சிகளாலும் அணுகுமுறைகளாலும் நாம்தான் இறைவனின் சாயல் என்பதை நிரூபித்துக் காட்டுவோம்.

பார்வையாளராகிய உங்கள் அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டு அன்பு வாழ்த்துகளை உரித்தாக்குகிறோம்.

நன்றி : ஞானதூதன், சலேசியன் செய்திமடல் -டிசம்பர் 2005

கவிதைstarசிறப்புச் செய்திstarகாணிக்கைstarஅமைதிstarமுகப்பு பக்கம்


A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com