ஒரு ரோஜா மொட்டு சிறுவர்களுக்காக

திருமதி அருள்சீலி அந்தோனி

அன்பார்ந்த நண்பர்களே!
ஒரு அழகிய ரோஜா மொட்டு உங்களுக்கு தான்! அது என்னவென்று கேட்கிறீர்களா? பதில் கீழே...
உங்கள் செபமாலையில் உள்ள ஒவ்வொரு மணியும் ஒரு ரோஜா மொட்டு!
அது உங்களுக்கு மிகச் சிறிய பொருளாக தென்படலாம். ஆனால் இந்த செபமாலை மணி ஒவ்வொன்றும் எவ்வகையில் உயர்ந்தது என்பதை நீங்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டுமானால் ஒவ்வொரு மணியையும் பரலோகமந்திரத்தையும் - அருள்நிறைந்த மந்திரத்தையும் உணர்ந்து தியானித்து சொல்வீர்களானால் உமது கரங்களில் அழகியரோஜா மொட்டு ஒரு ரோஜா மலர் மாலையாக விரியும் என்பதை உமது கண்களால் உணரமுடியம்.
rosary குட்ஸஸ்!
நீங்கள் தினசரி இருபது தேவஇரகசியங்களை தியானித்து சொல்வது சற்று கடினம் தான். ஆனால் நீங்கள் பக்தியுடனும், அன்புடனும் ஐந்து தேவஇரகசியங்களை தினந்தோறும் செபியுங்கள். இவ்வாறு நீங்கள் செபிக்கும் செபம் குழந்தை இயேசுவுக்கும் அன்னை மரியாவுக்கு சூட்டும் ரோஜா மலர்மாலையாகும் என்பதை உணர்ந்திடுங்கள்.
அன்பு மழலைகளே!
ஒரு சின்ன உண்மை கதையை உங்களோடு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். ஓர் ஊரில் இரு குட்டீஸ், தங்கள் வீட்டின் முன்பு அமர்ந்து பக்தியாக செபமாலைச் சொல்லி கொண்டிருந்தார்கள். திடீரென்று ஓர் அழகிய பெண் அவர்கள் முன் தோன்றினாள். அங்கு வந்த அந்த அழகிய பெண் இளைய பெண்ணின் கரத்தைப் பிடித்தக் கூட்டிக் கொண்டு சென்று விட்டாள்.
மூத்த சிறுமி திகிலடைந்தாள். தன் தங்கையை காணது தேடினாள். பயம் அவளை ஆட்கொண்டது. சென்று தன் பெற்றோரிடம் தெரிவித்தாள். மனம் உருக நாங்கள் செபமாலை சொல்லிக் கொண்டிருந்தோம். யாரோ ஒர் அழகிய பெண் வந்து என் தங்கையை தூக்கிக் கொண்டு சென்று விட்டார்கள் என்று அழுதபடி கூறினாள். பாவம் பெற்றோர் மூன்று நாட்களாக பிள்ளையை தேடியும் காணவில்லை.
rosary1மூன்றாம் நாள் மாலையில் காணாமல் போன பிள்ளை வீட்டின் தலைவாசலில் மிகுந்த மகிழ்வோடு நிற்பதை கண்டார்கள். உடனே நீ எங்கே போயிருந்தாய்? என்று வேதனையுடன் கேட்டார்கள். 'அம்மா நான் தினமும் செபமாலை சொல்வேனே அந்த அம்மா வந்து என்னை ஓர் அழகிய இடத்திற்கு கூடிச்சென்றார்கள். அதுமட்டுமல்ல எனக்கு அழகான குழந்தை பாப்பாவை என் கையில் கொடுத்தார்கள். அந்த குட்டி பாப்பாவை திரும்பதிரும்ப முத்தம் கொடுத்தேன். அந்த பாப்பா என்னை பார்த்து சிரித்து விளையாடியது. இதை கேட்ட பெற்றோர்கள் பரவசமடைந்தார்கள்.
இந்த சிறுமியின் பெற்றோர் சமீபத்தில் தான் கத்தோலிக்கராய் மாறியவர்கள். தங்களுக்கு மறைக்கல்வியை கற்று தந்த சேசுசபை குருவை உடனே வரவழைத்தனர். நடந்ததையெல்லாம் அக்குருவிடம் கூறினர். இது நடந்தது பராகுவே நாட்டில்..
அன்பார்ந்த சிறுவர் சிறுமியர்களே!
இச்சிறு குழந்தையைப் போல நீங்களும் நாள்தோறும் செபமாலைச் சொல்லுங்கள். நீங்களும் மழலை இயேசுவையும் மாதாவையும் காண்பீர்கள் என்பது இந்த கதை உங்களுக்கு உணர்த்தும் செய்தியாகும்.
அக்டோபர் மாதம் செபமாலை மாதம்!
செபம் செய்வோம். தினம் செபமாலைசெய்வோம்.
அன்பர்களே!
கற்றோர், கல்லாதோர், நீதிமான்கள், பாவிகளும், பெரியோர், சிறியோரும் எல்லா மாந்தரும் தினம்தோறும் செபமாலை சொல்வோம்.
மரியாளையும் இயேசுவையும் போற்றுவோம்!
"உங்களுக்காக உழைத்த மரியாவுக்கு மங்களம் சொல்லுங்கள்" (உரோ16:6) )


 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு மரியாளின் பக்கங்கள்