குடும்ப செபமாலை இயக்கம்‌

V.பெஞ்சமின்‌
peyton

அக்டோபர்‌ மாதத்தைத்‌ தனிச்சிறப்பாக செபமாலை மாதம்‌ எனச்‌ சிறப்பிக்கிறோம்‌. இம்‌மாதத்தில்‌ கோவில்களிலும்‌, குடும்பங்களிலும்‌, பிற கூட்டங்களிலும்‌ சிறப்பாக செபமாலை செபிக்கிறோம்‌. இந்த நிலையில்‌, இரண்டு அம்சங்களை இங்கு தெரிவிக்க விரும்புகிறோம்‌.

கத்தோலிக்கத்‌ திருச்சபையில்‌ தற்போது 65 வயதுக்கு மேற்பட வாழ்பவர்களுக்கு அருள்தந்தை பேட்ரிக்‌ பேய்டன்‌ ( CSC ) என்ற பெயர்‌ நினைவிற்கு வரலாம்‌.

“சேர்ந்து செபிக்கும்‌ குடும்பம்‌ கூடி வாழும்‌” என்றும்‌, “சேர்ந்து செபிக்கும்‌ குடும்பம்‌ ஒன்றாக நிற்கும்‌ என்றும்‌ பறைசாற்றப்படும்‌ அறிவிப்‌புக்கு இவர்தான்‌ மூலகாரணம்‌. “ஒன்றாகச்‌ செபிக்கும்‌ குடும்பம்‌ ஓர்‌ அமைதியுள்ள உலகம்‌” என்றும்‌ இவரால்‌ சொல்லப்படுவதுண்டு.

இந்த அருள்தந்தை 1909 ஆம்‌ ஆண்டு அயர்லாந்து நாட்டில்‌ மிகச்‌ சாதாரணக்‌ குடும்‌பத்தில்‌ பிறந்தார்‌. தனது மூத்த சகோதரர்‌களுடனும்‌, சகோதரிகளுடனும்‌ செயமாலையை தனது பெற்றோர்கள்‌ வழிநடத்திச்‌ செபித்ததை தனது சுயசரிதையில்‌ நினைவுகூர்கிறார்‌. “புனித மரியே, இறைவனின்‌ தாயே, பாவிகளாகிய எங்‌களுக்காக இப்போதும்‌, எங்கள்‌ மரண வேளையிலும்‌ வேண்டிக்கொள்ளுங்கள்‌” என தனது தாய்‌ மாதாவை நோக்கிப்‌ பேசுவது போல செபித்‌தது தன்னை மிகவும்‌ கவர்ந்ததாகக்‌ கூறுகிறார்‌.

தனது சகோதரர்களுடன்‌ 1928 ஆம்‌ ஆண்டு (19வது வயதில்‌) அமெரிக்காவுக்குக்‌ குடிபுகுந்தார்‌. தனது சகோதரர்‌ நிலக்கரிச்‌ சுரங்கத்‌திலிருந்து குருமடத்திற்கு வந்ததையும்‌, தான்‌ பேராலயத்தில்‌ பணியாளனாக இருந்து பின்‌ குருமடத்திற்குச்‌ சென்றதையும்‌ அழகாக தனது Rயசரிதையில்‌ (Mary's Priest) தெரிவிக்கிறார்‌.

குருமடத்தில்‌ சேர்ந்த இரண்டாவது ஆண்டில்‌ இருதயத்தில்‌ சீர்கேடு ஏற்பட்டது. “நமது சிகிச்சைகள்‌ உபயோகமில்லை. செபம்‌ செய்‌” என மருத்துவர்கள்‌ கூறிவிட்டனர்‌. எல்‌லாம்‌ முடிந்துவிட்டது போன்ற நிலையில்‌ இருந்தபோது, இவரது முன்னாள்‌ ஆசிரியர்‌ இவரைப்‌ பார்க்க வந்தார்‌. “மாதா இருக்கிறார்‌கள்‌. அவர்கள்‌ நீ நினைக்கும்‌ அளவுக்கு உனக்கு நல்லது செய்வார்‌. அது உனது நம்பிக்கையைப்‌ பொறுத்தது” என்று கூறினார்‌. இவர்‌ செபித்தார்‌. மறு வாழ்க்கை, புதிய வாழ்க்கை பெற்றதாகக்‌ கூறுகிறார்‌. “அன்னையே, உம்மை ஒருபோதும்‌ மறக்கமாட்டேன்‌” என்றார்‌.

15-06-1941 இல்‌ குருவானார்‌. மாதாவுக்‌கும்‌, திருச்சபைக்கும்‌ பதில்‌ உபகாரம்‌ செய்ய வேண்டுமே! சிந்தித்த வேளையில்‌ “குடும்பச்‌ செபமாலை இயக்கம்‌” நினைவுக்கு வந்தது. “ஆண்டவராலன்றி என்னால்‌ எதுவும்‌ செய்ய முடியாது” என்று கூறி இயக்கத்திற்காக பல முயற்சிகள்‌ செய்தார்‌.

1945, மே 13 ஆம்‌ தேதி (பாத்திமா அன்னை நாளில்‌) வானொலியில்‌ (Mபtபal Broadcastig System) செgமாலை சொல்லி மறையுரையாற்ற வாய்ப்புக்‌ கிடைத்தது. பிரபல நடிகர்‌, நடிகைகள்‌ முன்னிலையில்‌, நகரில்‌ உள்ள குடும்பத்தவர்‌, நியூயார்க்‌ நகர கர்தினால்‌ ஸ்பெல்மென்‌ ஆகியோர்‌ அந்த நிகழ்ச்சியில்‌ பேசினர்‌. அடுத்த நாள்‌ நல்ல பாராட்டுகளும்‌, விமர்சனங்களும்‌ கிடைத்தன.

family rosary 1947 இல்‌ லண்டன்‌ மறைமாவட்டம்‌ செபமாலை இயக்கத்தைத்‌ தொடங்கியது. பலதரப்பட்ட மக்கள்‌ பங்கு பெற்றனர்‌. தொடர்ந்து பல நாடுகளில்‌, பல நகரங்களில்‌ உலகம்‌ முழுவதும்‌ செயமாலை இயக்கம்‌ பரவியது. பிலிப்‌பைன்ஸ்‌ நாட்டின்‌ மணிலா நகரில்‌ இலட்சக்‌கணக்கில்‌ மக்கள்‌ கூடி செபமாலை செபித்தது குறிப்பிடத்தக்கது. திரும்பத்‌ திரும்ப நிகழ்ச்சிகள்‌ நடைபெற்றன. மும்பை, சென்னை, நியூயார்க்‌ எனப்‌ பல நகரங்களில்‌ தொடர்ச்சியாக நடைபெற்றன. சூழ்நிலைக்கேற்ப சமூக வலைத்தளங்களை ஆண்டவரே தோள்‌ கொடுத்து வழிநடத்தினார்‌ என தந்தை கூறுகிறார்‌.

இவரது செயல்‌ பல திருத்தந்தையர்களால்‌ போற்றப்பட்டன. 1987 இல்‌ இரண்டாம்‌ சின்னப்பர்‌ “செபமாலை மீண்டும்‌ கத்தோலிக்கக்‌ குடும்பத்தின்‌ நிலையான செபம்‌” என்றார்‌. “நீர்‌ விசுவாசத்தின்‌ மனிதன்‌” என இவரை திருத்‌தந்த இரண்டாம்‌ சின்னப்பர்‌ பாராட்டினார்‌.

1992 ஆம்‌ ஆண்டு அருள்தந்தை பேட்ரிக்‌ பெய்டன்‌ இறைவனடி சேர்ந்தார்‌. உலகம்‌ முழுவதும்‌ (அக்காலத்தில்‌ கடுமையாக ஆட்சி புரிந்த கம்யூனிஸ்ட்‌ நாடுகள்‌ உள்பட) செபமாலை சொல்லிச்‌ செபிக்கத்‌ தொடங்கின.

அருள்தந்தைக்கு புனிதர்‌ பட்டம்‌ கொடுக்க முயற்சிகள்‌ மேற்கொள்ளப்படுகின்றன. அவர்‌ புனிதராக உயர்த்தப்பட செபிப்போம்‌.

செபமாலை செபிக்கும்போது மறையுண்மையைக்‌ கூறி செபிக்கிறோம்‌. தொடர்ந்து மன்றாடுகிறோம்‌. மகிமை தேவ இரகசியங்களில்‌ அன்னை மரியா விண்ணுலகிற்கும்‌, மண்ணுலகிற்கும்‌ அரசி என்பதைக்‌ கூறி செபிக்கிறோம்‌.

Queen என்றும்‌, அரசி என்றும்‌ ஆகஸ்டு 22 ஆம்‌ தேதி அறிவிக்கப்பட்டது. இதை திருத்‌தந்தை 12 ஆம்‌ பத்திநாதர்‌ பிரகடனம்‌ செய்தார்‌. இரண்டாம்‌ உலகப்‌ போர்‌ முடிந்து ஐரோப்பா கண்டம்‌ முழுவதும்‌ கஷ்டமான நிலையில்‌ இருந்தது. ஊனமுற்றோர்‌, விதவைகள்‌, வீடிழந்தோர்‌ மற்றும்‌ குடிதண்ணீர்‌ பஞ்சம்‌ என்று சிரமமான நிலை. உணவு கிடைப்பதிலும்‌ கஷ்டம்‌. இந்தக்‌ காலத்தில்தான்‌ இப்பிரகடனம்‌ வந்தது. அப்போது அருள்தந்தை பேட்ரிக்‌ பெய்டனும்‌ வாழ்ந்த காலம்‌.

அரசியான தேவ அன்னை நமக்காக தன்‌
மகனிடம்‌ பரிந்துரைப்பார்‌ என உறுதியான
மனதுடன்‌ செபிப்போம்‌.
 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு மரியாளின் பக்கங்கள்