anbinmadal

இயேசுவின் நம்பிக்கை


அ.அல்போன்ஸ் - பெங்களுர்.

விவிலியம் ஒரு ஒப்பற்ற நூலாகும். மகாகாவியம் ஞானசமுத்திரம். அதன் ஒவ்வொரு துளியுமே விசுவாசத்தை - வாழ்வின் நெறிமுறைகளை பேசும். நம் அறிவை பண்படுத்தும்.

வாழ்க்கையை நாம் எப்படி சந்திக்கப்போகிறோம் என்பது நம் கையில் இருக்கிறது எந்தவிதையும் நாம் மனப்பூர்வமாக புரிந்து கொள்வதற்கு பார்ப்பதுவும் கேட்பதுவும் மிகவும் முக்கியமானது.

வாழ்க்கை என்பது ஒர் அனுபவம். ஓவ்வொருவருக்கும் கல்வாரி காத்திருக்கிறது அதை நாம் எப்படி எதிர்கொள்ள போகிறோம்.

கல்வாரியில் மூன்று சிலுவைகளைப் பார்க்கிறோம் அதில் இயேசுவின் மரணம் தானே நிகழ்ந்ததல்ல அவர் மேல் சுமத்தப்படவில்லை.

‘என் உயிரை மீண்டும் பெற்றுக்கொள்ளும்படி நான் அதை கையளிக்கிறேன் …. எனதுயிரை என்னிடமிருந்து பறிப்பவன் எவனுமில்லை நானாகவே என் உயிரை கையளிக்கிறேன்.(அரு 10:17- 18) ஆம் இயேசு தானேமுன்வந்து தன்னை கையளிக்கின்றார் என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்போம்.

ஜெத்சமனி தோட்டத்தில் …

வீரர்கள் தன்னை தேடி பிடிக்க வருகிறார்கள் என்று தெரிந்து தானே முன் சென்று யாரைத் தேடிவந்தீர்கள் என்று கேட்டபொழுது ‘நான் தான்’ என்றார் அதை கேட்டதும் தரையில் வீரர்கள விழுந்தார்கள் மீண்டும் யாரைத் தேடிவந்தீர்கள் என்று கேட்க நாசரேத்தூர் இயேசுவை என்றதும் ‘நான் தான்’ என்று சொன்னனே என்று கூறியபொழுது எரிகின்ற புதரின் அருகே மோயீசனுக்கு ‘நான் தான்’ என்று வெளிப்படுத்திய குரலை ஒத்திருக்கின்றது - இயேசு தானே முன்வந்த காட்சியில் இது ஒன்றாகும்.

சிலுவையில் என் கடவுளே என் கடவுளே ஏன் என்னை கைவிட்டீர் என்று உரக்க கூவினார் உரத்த குரலில் என்பது எதைக்குறிகின்றது. அவருடைய பலம் நெஞ்சில் உரம் அவரிடமிருந்து எழும் குரலில் வெளிப்படுகிறது மரணம் அவரை வெல்லமுடியவில்லை

‘தாகமாயிருக்கிறது ’ என்கின்ற பொமுது தான் இன்னும் முழுகட்டுபாட்டில் இருக்கிறார் என்பதை குறிக்கின்றது. அருளப்பர் தெளிவாக கூறுவார் எல்லாம் நிறைவேறியது என்று அறிந்த இயேசு சிலுவையில் தொங்கி மரணம் நெருங்கும் வேளையில் கூட அவரது மனது இறைவாக்கினர் தன் நிமித்தம் உரைத்த வார்த்தைகள் முழுமையாக நினைவில் கொண்டு நிறைவாக்கினார்.

அதன் பிறகு இயேசு கூறிய எல்லாம் நிறைவேறிற்று (அரு19:30) என்பதை கவனிப்போம். இதுவரையில் தலைநிமிர்ந்து பகைவர்களுக்கு தந்தையிடம் மன்றாடி - தாயை சீடரிடம் ஒப்புவித்து - “எல்லாம் முடிந்தது ” என்று தனது ஆவியை கையளிக்கின்றார். என்பதை விவிலியம் தெளிவாக உரைக்கின்றது

தலைசாய்த்து ஆவியை கையளித்தார் இதுவரையில் அவர் சிலுவையில் தலைநிமிர்ந்து இருந்தது இப்பொழுது தலைசாய்த்து என்ற பொழுது மயக்கத்தினலோ முடியாமலோ தலை சாய்க்கவில்லை - முழு உணர்வுடன், அமைதியாக, மரியாதையாக தந்தையிடம் தாழ்பணிந்து சிலுவையில் தன்னை கைவிட்டநிலையிலும் தலைசாய்த்து எல்லாம் முடிந்தது என்கிறார்.

லூக்காஸ் எழுதியுள்ளது போல் ‘தந்தையே உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் என்று உரக்க கூவினார்.(லூக் 23:46)
இதே தருணத்தில் முடியப்பர் கல்லால் எறியப்பட்டு உயிர்விடும் நிலையில் இயேசுவே எனது ஆவியை ஏற்றுகொள்ளும் என்கின்றார்.(அப் 7:59)

ஆனால் இயேசு கூறுவதை பாருங்கள் “ பிதாவே! உமது கையில் என் ஆவியை கையளிக்கின்றேன் ” (லூக் 23:46) ஆம் இயேசு ஆவியை யாரும் எடுக்கமுடியாது அவரே தன்னை பலியாக்குகிறார்.

கல்வாரியில் மாலை நேரத்தில் பாஸ்கு காலத்திற்கு முன்பு இறந்த உடல்களை எடுக்க வந்தனர் சாதரணமாக சிலுவையில் அறைந்த மனிதர்கள் உயிர் விட இரண்டு மூன்று நாட்கள் ஆகும் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் ரோம வீரர்கள் கள்ளர்களின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்ததால் கால்களை முறித்து அவர்கள் உயிரை எடுத்தார்கள்.
இயேசு அருகில் வந்த பொழுதோ அவர்ஏற்கனவே இறந்திருந்தார்.
இந்த வரிகள் சொல்லும் செய்தி என்ன?

இயேசுவின் உயிரை பிறர் எடுக்கமுடியாது தானே முன்வந்து தன் உயிரை தருகின்றார். உணர்ச்சி வசப்பட்ட பரவசம் நெஞ்சமெல்லாம் நிறைகிறது.மீண்டும் கூற வேண்டுமானால் கைது செய்யவந்தவர்களிடம் தானே முன்வந்து நின்றது. உரத்த குரலில் கூவிடும் பொழுது அவர் பலம் வாய்ந்தவராக காணப்படுவது உயிர் விடும் பொழுது ‘தலைசாய்த்து ’ கையளிப்பது முழுமையாக தன் ஆவியை தருவது கால்களை முறிக்குமுன்னமேயே இறந்திருப்பது ஆகியவை இயேசுவின் மரணம் - மற்ற இரு கள்ளர்களின் மரணத்திலிருந்து தனித்து நிற்கின்றது.

இயேசுவின் இந்த செயலுக்கு கல்வாரியை நோக்கி சென்று தானே தன்னை கையளித்ததற்கு என்ன அடிப்படை காரணம் நம்பிக்கை முழுமையான நம்பிக்கை.

தந்தையிடம் தான் கொண்ட நம்பிக்கை அது பொய்த்து போய்விடவில்லை. மூன்றாம் நாள் கானாவூரில் நீர் இரசமானது. மூன்றாம் நாள் இயேசு கிறிஸ்துவானார். தந்தையோடு ஒப்புரவானார்.




sunday homily







A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com