யூதாஸ் நற்செய்தியின் பக்கங்களின் துரோகி என பச்சை குத்தப்பட்டவன் இயேசு தந்ததோர் காசாளர் பொறுப்பு அவனோ நிலத்தடி நெருப்பு பூகம்பமாய் புறப்பட்டு அழிந்து போனவன் அவனிடம் கண்டது பகைபுத்த புன்னகை அப்பதுண்டை வாங்கியபின் வஞ்சகபேய் அவன் உள்ளத்தில் நுழைந்தது இரவு பந்தியிலிருந்து வெளியேறி கையில் விளக்கேந்தி சூழ்ச்சியோடு கெத்சமேனி தோட்டத்தில் முகாமிட்டது - யூத காவலருடன் வெளிச்ச ராத்திரியில் முத்த சத்தம் முத்தமிட்டா காட்டி கொடுக்கிறாய் இதயம் வெடித்து வெளியில் வந்த இயேசுவின் சூரியச் சொற்கள் சீடரே மீட்பரின் சிறகை வெட்டுகிறான் மேகமே வானத்தை சிறைப் பிடிக்கிறது யூதாஸே உன்மேல் வைத்த அன்பை அம்பாகமாற்றி கன்னத்தில் கையெழுத்திட்டாய் மூன்றாண்டு காலம் கூடவே வாழ்ந்து முத்தத்தோடு உறவை முறித்து விட்டாய் நீ ஒரு பொய் நிஜத்தை தீண்டலாம் ஆனால் அழித்துவிடமுடியாது அவர் ஒரு ஒளி உன்னால் அணைக்க முடியாது இயேசுவே உன்னால் விண்ணரசு திறந்தது உன் சீடரால் நரகவாசல் திறந்தது சாத்தானே எச்சரிக்கை முத்தம் தர அவன் உன்னிடம் வருகிறான்.....
A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com