தவக்காலப் பரிந்துரைகள்   

அந்தோனி பென்னட்

வழக்கமான திருப்பலி நற்செய்தி வாசிப்புச் சிலுவைப்பாதைச் செபத் தப முயற்சிகளுடன் கீழ்காணும் பரிந்துரைகளை ஏற்றுத் தவக்காலத்தை அர்த்தமுள்ளதாக்குவோம்
 


26-02-2020 புதன்
நம்மையே சுய ஆய்வு செய்வோம்.
கோவிலில் நற்கருணைப் பிரசன்னத்தில் ஒரு மணி நேரம் செலவிடுவோம்.
27-02-2020 வியாழன்
சமாதானத்தை விரும்பித் தேடுவோம்
நம்மை வெறுப்பவர்களுக்காகச் செபிப்போம். உறவுகளைப் புதுப்பிக்க முயலுவோம்
28-02-2020 வெள்ளி
வறியவர்களை நேசிப்போம்
வறியவர்களுக்காகச் செபிப்போம். உபவாசித்து உணவினைப் பகிர்வோம்
29-02-2020 சனி
முதியவர்களை நேசிப்போம். முதியவர்களுக்காகச் செபிப்போம்.
வீட்டிலோ,பங்கிலோ ஒரு முதியவரைச் சந்தித்து உரையாடுவோம். ஊக்கப் படுத்துவோம்.
01-03-2020 ஞாயிறு
அன்பியக் கூட்டங்களை நடத்துவோம்.
தவக்காலச் சிந்தனைகளை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துச் செபிப்போம்
02-03-2020 திங்கள்
முதியோர் இல்லம் ஒன்றினைச் சந்திப்போம்.
முதியோர் சிலருக்கு ஆறுதல் கூறிச் செபிப்போம்
03-03-2020 செவ்வாய்
மன்னிக்கும் ஆற்றல் வேண்டிச் செபிப்போம்
மன்னிக்க வேண்டியவர்களை முழு மனதுடன் மன்னிப்போம்  


04-03-2020 புதன்
நோயுற்றோருக்காகச் செபிப்போம்.
நோயுற்ற ஒருவரைச் சந்தித்துச் செபித்து ஆறுதல் கூறுவோம்
05-03-2020 வியாழன்
குடும்பமாய் ஒரு மணி நேரம் இயேசுவின் பாடுகளை
நற்செய்தி ஒளியில் தியானிப்போம். கூடிச் செபிப்போம்.
06-03-2020 வெள்ளி
மாதத்தின் முதல் வெள்ளி
இயேசுவவின் இதய அன்பைத் தியானிப்போம்.
இறைவனோடு ஒப்புரவாகுவோம்
07-03-2020 சனி
அன்னையின் ஏழு வியாகுலங்களைத் தியானிப்போம்
குடும்பமாய்ச் செபமாலைச் சொல்வோம்.
08-03-2020 ஞாயிறு
இல்லங்களில் குடும்பமாக உபவாசித்துச் செபிப்போம்.
நம் குடும்பங்களில் கிறிஸ்தவ மனப்பான்மையயை ஈடுபாட்டை ஆய்வு செய்வோம்.
09-03-2020 திங்கள்
தொழு நோயாளிகளுக்காகச் செபிப்போம்.
தொழு நோயாளிகளைப் பராமரிக்கும் இல்லங்கள் சந்திப்போம்
10-03-2020 செவ்வாய்
தொலைகாட்சி அலைபேசி,கணினி இவைகளில் பொழுதுப் போக்குவதைத் தவிர்ப்போம்.
இவைகள் சமூகத்தில் உண்டுப் பண்ணும் அவலங்கள் நீங்கிடச் செபிப்போம்.


11-03-2020 புதன்
ஆவியின் கனிகளைப் பெற்றிடச் செபிப்போம்
கனிக் கொடுப்பவர்களாக மாறிட முயலுவோம்
12-03-2020 வியாழன்
கைவிடப்பட்டவர்கள் அனாதைகள் இவர்களுக்காக வேண்டுபோம்
இவர்களுக்கு நம்மால் இயன்ற உதவி செய்வோம்
13-03-2020 வெள்ளி
கிறிஸ்துவின் பாடுகளைத் தியானிப்போம்
சிலுவைப் பாதையில் பங்குப் பெறுவோம்
14-03-2020 சனி
நம் வாழ்வில் துன்பங்கள் ஏன்? நற்செய்திப் ஒளியில் தியானிப்போம்.
துன்பங்கள் இல்லா வாழ்விற்குச் செயல்பாட்டை வடிவமைப்போம்.
15-03-2020 ஞாயிறு
அன்பியக் கூட்டங்களை நடத்துவோம். அன்பியங்கள் கூடி உபவாசித்துச் செபிக்கபோம்
நம் அன்பியங்களில் நம் ஈடுபாட்டை ஆய்வுசெய்வோம்.
16-03-2020 திங்கள்
கண்பார்வை அற்றவர்களுக்காகச் செபிப்போம்.
கண்பார்வை அற்றவர்களைப் பராமரிக்கும் இல்லங்களைச் சந்திப்போம்.
17-03-2020 செவ்வாய்
இயற்கைச் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட வேண்டுவோம்
வீட்டின் முன் ஒரு சில மரங்களை நட்டு வளர்க்க முயவோம்.


18-03-2020 புதன்
பங்கின் வளர்ச்சிக்காகச் செபிப்போம்
பங்கில் நமது ஈடுபாட்டை ஆய்வு செய்வோம்
19-03-2020 வியாழன்
நற்செய்தி வாசிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்போம்.
தனியாக நற்செய்தி வாசித்துத் தியானிக்கும் பழக்கத்தைக் கைக் கொள்வோம்
20-03-2020 வெள்ளி
இறை இரக்கத்தை வேண்டி ஜெபிப்போம்.
குடும்பமாக இறை இரக்கத்தின் செபமாலைச் சொல்வோம்
21-03-2020 சனி
பிறரைப் பற்றித் தவறாகப் பேசிய தருணங்களுக்காக மனம் வருந்துவோம்.
இன்று முழுவதும் யாரைப் பற்றியும் குறைப் பேசாமல் இருப்போம்.
22-03-2020 ஞாயிறு
ஏதாவது ஒரு தவக்காலத் தியானத்தில் பங்குப் பெற்றுப் பயன் பெறுவோம்
23-03-2020 திங்கள்
மன நலம் குன்றியவர்களுக்காகச் செபிப்போம்.
அவர்களைப் பயிற்றுவிக்கும் பள்ளி ஒன்றினைச் சந்திப்போம்
24-03-2020 செவ்வாய்
திருத்தலம் ஒன்றிற்குச் சென்று திருப்பலியில் பங்குப் பெற்று
நம் உறவினர், நண்பர்களுக்காகச் செபிப்போம்


25-03-2020 புதன்
திரு அவைக்காகச் செபிப்போம்
ஆதிசபையின் அன்புப் பகிர்வு வல்லமை இன்றைய திரு அவையில் மலர வேண்டுவோம்.
திரு அவையில் நம் செயல்பாடுகள் குறித்துச் சிந்தித்துச் செயல்படுவோம்
26-03-2020 வியாழன்
சிறையில் வாடும் கைதிகள் இளம் கைதிகள் இவர்களுக்காக வேண்டுவோம்.
கூடுமானால் சிறைச்சாலைச் சென்று கைதிகளைச் சந்திக்கலாம்
27-03-2020 வெள்ளி
தேசத்திற்காக ஈடுபாட்டுடன் வேண்டுவோம்
நம் கடமைகள் என்ன என்பதைச் சீர்தூக்கிப் பார்த்துச் செயல் வடிவம் கொடுப்போம்
28-03-2020 சனி
நமக்காக நம் குடும்பத்திற்காக நமது பங்கிற்காகத் திரு அவைக்காகத் தேசத்திற்காக
பரிந்துரைத்துத் தனியாகவோ, குழுவாகவோ ஜெபமாலை ஜெபிக்கபோம்
29-03-2020 ஞாயிறு
அன்பியக் கூட்டங்களை நடத்துவோம்.
நற்செய்தியாளரைக் கொண்டு நற்செய்திப் பகிர்வினை நடத்தவோம்
30-03-2020 திங்கள்
இறை நம்பிக்கையில் தளர்வுற்ற நேரங்களை எண்ணி வருந்துவோம்.
நம்பிக்கையில் ஆழப்பட இறையருளை வேண்டுவோம்.
31-03-2020 செவ்வாய்
இறை அன்பிற்கு எதிரான குற்றங்களை எண்ணி மனம் வருந்துவோம்.
இறைவனிடம் மன்னிப்பை இறைஞ்சுவோம்


01-04-2020 புதன்
பிறர் அன்பிற்கு எதிரான குற்றங்களை எண்ணி மனம் வருந்துவோம்.
இறைவனிடம் மன்னிப்பை இறைஞ்சுவோம்
02-04-2020 வியாழன்
நன்மை செய்யத் தவறிய நேரங்களுக்காக மனம் வருந்துவோம்.
யாராவது ஒருவருக்கு ஏதாவது ஒரு நன்மைச் செய்திட முயற்சிப்போம்
03-04-2020 வெள்ளி
திருப்பாடல் 51 தியானித்து இறை இரக்கத்தை இறைஞ்சுவோம்
நல்ல முறையில் ஒப்புரவு அருட்சாதனக் கடமையை நிறை வேற்றுவோம்
04-04-2020 சனி
ஆலயத்தில் தனியாகச் சிலுவைப்பாதைச் செய்து ஆண்டவரின் பாடுகளைத் தியானிப்போம்.
நம் பாவங்களுக்குப் பரிகாரம் செய்வோம்
05-04-2020 ஞாயிறு
நற்செய்தியில் ஆண்டவரின் பாடுகள் அடங்கிய பகுதியினைத் தனியாக வாசித்து
ஆண்டவரின் ஆழமான அன்பையும் இரக்கத்தையும் உணர்வோம்.
06-04-2020 திங்கள்
உலகம் இறைவனின் சமாதானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உருக்கமாக ஜெபிப்போம்
07-04-2020 செவ்வாய்
பாவிகள் இறைவனின் இரக்கத்தை உணர வேண்டும் என்று நம்பிக்கையோடு மன்றாடுவோம்


08-04-2020 புதன்
இயேசு கொண்டு வந்த மீட்பை நம் தேசமும் இந்த உலகமும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நம்பிக்கையோடு ஜெபிப்போம்
09-04-2020 வியாழன்
குருக்கள் கன்னியர்கள் நற்செய்தியாளர்களுக்காக உருக்கமாக ஜெபிப்போம்.
அவர்கள் தங்கள் அழைப்பின் மேன்மையை உணர்ந்துச் செயல்பட அருள்தர வேண்டுமென்று ஜெபிப்போம்
10-04-2020 வெள்ளி
நற்கருனைப் பிரசன்னத்தில் எவ்வளவு நேரம் செலவிட முடியுமோ அவ்வளவு நேரம் செலவிட்டு இறை ஆற்றலைப் பெற்றுக் கொள்வோம்
11-04-2020 சனி
உயிர்த்த இயேசுவை சந்திக்கக் காத்திருப்போம்
12-04-2020 ஞாயிறு
அல்லேலூயா வெற்றிக் கீதம் பாடுவோம்sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்


ஜூன்-15, 2011
முதல் பார்வையாளரின்
எண்ணிக்கை
A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2020| Email ID: anbinmadal at gmail.com