டோர்னஹள்ளி அந்தோணியார் திருத்தலம்
மைசூர்

நாம் ஒவ்வொரு ஆண்டும் 13ஆம் தேதி ஜீன்மாதம் புனித அந்தோணியார் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். புனித அந்தோணியார் இறைமகன் இயேசுபிரான் விட்டுச் சென்ற இறையரசுப் பணிகளைப் பகுபாடுகளைக் கடந்து, அனைவரும் இறைவனின் படைப்பில் ஒரு குலமே என்ற வரிகளைத் தனது வாழ்வில் மையமாகக் கொண்டு பணிபுரிந்து வருபவர். கர்நாடக மாநிலம், மைசூர் மறைமாவட்டம், டோர்னஹள்ளி என்ற திருத்தலத்தில் புனித அந்தோணியாரின் தோற்றம் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தத் திருத்தலம் மைசூர் அரிசிக்கரை ரெயில் நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மைசூரிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. டோர்னஹள்ளி கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் அடங்கிய சிற்றூர் ஆகும்.

நம் பாரதநாட்டில் மிகவும் பழமைவாய்ந்தப் புனித அந்தோணியார் திருத்தலமாகும். இங்குப் புதுமையான ஒரு சுரூபம் அமைக்கப்பட்டு மக்கள் வணங்கிவருகிறார்கள். இங்குப் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து புனிதரைத் தரிசித்துப் பல புதுமைகளைப் பெற்றுச் செல்கின்றார்கள்.

அற்புத சுரூபம் கண்டெடுக்கப்பட வரலாறு:

புனித அந்தோணியாரின் அற்புதச் சுரூபம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்டது. இந்துச் சமயத்தைச் சார்ந்த ஒரு விவசாயி தன் கேழ்வரகுக் கொல்லையை உழுதுக்கொண்டிருந்தான். அவரது கலப்பையில் ஒரு மரச்சுரூபம் தென்பட்டது. அதைக் கவனிக்காமல் மீண்டும் உழுதுவரும் போது சுரூபம் அடிப்பட்டு அதன் கைக் கால்களை உடைந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அது ஒரு மரப்பொம்மைத் தான் என்று நினைத்துத் தன் பிள்ளைகளுக்கு விளையாடக் கொடுத்தார்.

விவசாயி கண்டக் காட்சியும் ,கட்டளையும்.

வரலாறின்படி ஓர் இரவு விவசாயி உயங்கும்போது கனவுக் கண்டார். கனவில் வயலில் கண்டு எடுத்த சுரூபம் போன்று காவி உடையணிந்தத் துறவி "நண்பா நீ கண்டெடுத்தது சாதாரணப் பொம்மையல்ல. மாறாக உலகெங்கும் புகழ்ந்துக் கொண்டாடும் புனித அந்தோணியார் சுரூபம் தான் இது. சுரூபம் கண்டெடுத்த இடத்தில் ஒரு சிற்றலயம் அமைக்குமாறு" விவசாயின் கனவில் புனிதர் கூறினார். "எனக்கு ஆலயம் கட்டினால் உனது குடும்பத்தை ஆசீர்வதிப்பேன்" என்றும் கூறி மறைந்தார்.

ஆனால் விவசாயி புனிதரின் வார்த்தைக்குச் செவிசாய்க்கவில்லை. குழந்தைகள் விளையாட்டுப் பொம்மை என்று விளையாடி அசிங்கப்படுத்திவிட்டார்கள். ஆனால் சில வாரங்களுக்குள் அந்த விவசாயின் மாடுகளும் இரண்டு குழந்தைகளும் இறந்துப் போயினர்.

உடனே அவன் மனம் கலங்கியது. தன் கனவில் வந்த துறவி சொன்னது போலவே செய்ய முன்வந்தான். அப்போது கத்தோலிக்கக் குருவானவர் ஒருவர் பாண்டிச்சேரியிலிருந்து மைசூருக்கு வந்தார். உடனே இந்த விவசாயி குருவானவரைத் தேடிச் சென்று டோர்னஹள்ளி கதையைச் சொன்னான். அந்த மரச்சுரூபத்தைக் குருவானவரிடம் கொடுத்தான். குருவானவரும் இது பதுவை அந்தோணியார் சுரூபமென்று அறிந்துக்கொண்டார். உழவனிடம் அந்தோணியார் சொன்னபடியே உனது வயலில் சிற்றாலயம் கட்டும்படியும் நானும் உடனிருந்து உதவிச்செய்கிறேன் என்று அந்தக் குருவானவர் கூறினார்.

சிற்றாலயம் எழுந்தேற்றம்.

விவசாயி புனித அந்தோணியார் சொன்னபடியே சிறு கோவில் கட்டி முடித்தான். குறிப்பிட்டநாளில் கோவில் திருப்பொழிவுச் செய்யப்பட்டு மக்கள் ஆலயம் நோக்கி வரலாயினர். புதுமைகள் கோடிப் புரிந்து அதன் மூலம் அங்குள்ள பாமரமக்களுக்கு இயேசு கிறிஸ்துவின் வல்லமை இப்புனிதர் வழியாக எல்லா இடங்களுக்கும் காட்டுத்தீ போல் பரவியது. நாளடைவில் மக்கள் கூட்டம் புனிதரை நாடி வரவே அந்த ஊர் ஒரு சிற்றூராகிக் கத்தேலிக்கக் கிறிஸ்துவர்கள் வசிக்கும் ஊராகியது.

நாட்கள் செல்லச் செல்லப் பழைய ஆலயம் மிகச் சிறியதாக இருக்கின்றக் காரணத்தாலும், பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததாலும் பெரியதோர் கோவில் 1920ஆம் ஆண்டுக் காலஞ்சென்ற திவான் திருத் தர்மராஜ் செட்டி அவர்களால் அழகிய தேவாலயம் கட்டப் பணௌதவி அளிக்கப்பட்டது. அந்தச் சமயம் பங்கு குருவாக இருந்த அருட்தந்தை டிசில்வா அவர்களின் முயற்சியால் கட்டிமுடிக்கப்பட்டது. அதே வேளையில் வசதிகுறைவின் காரணமாகத் திருப்பயணிகள் டோர்னஹள்ளி வர இயலாமை இருந்தது. இப்போது இந்தத் திருத்தலத்திற்கு அருகில் இரயில் நிலையம் மைசூர் அரிசிக்கரையில் அமைக்கப்பட்டது. கிருஷ்ணராஜ்நகர் - மைசூர் இரயில்பாதையில் அரிசிக்கரை உள்ளது. மைசூரிலிருந்து டோர்னஹள்ளிக்குப் பேருந்து வசதிகள் உள்ளன.

மேலும் பேரட்திரு தந்தை மி.பி. லோபோ அவர்கள் காலத்தில் 1964ஆம் ஆண்டுப் புதுக் கோவில் கட்ட ஆயத்தம் செய்கையில் மைசூர் ஆயர் அவர்கள் ஜுன் 13ஆம் அடிக்கல் நாட்டினார். 13.6.1969ல் மேதகு மத்தியாஸ் பெர்னான்டஸ் ஆயர் அவர்களால் திருநிலைபடுத்தப்பட்டது.

இந்தச் சுரூபம் இன்றும் பல அற்புதங்களையும் புதுமைகளையும் நாடி வரும் பக்தர்களுக்கு இயேசுவின் நற்செய்திபணியை ஆற்றிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

திருமதி அருள்சீலி அந்தோணி- ஆலந்தூர் - சென்னை.



sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்





A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com