சேத்துப்பட்டு லூர்து மாதா திருத்தலம்

(Our Lady Of Lourdes Shrine-Chetpet, Tiruvannamalai District)

CHETPET

திருத்தல வரலாறு

சேத்துப்பட்டு தூய லூர்தன்னை திருத்தலம் வட ஆற்காட்டின் அப்போஸ்தலர் தந்தை ஜான் பிரான்சிஸ் தாராஸ் அவர்களின் பொற்கரங்களால் செதுக்கப்பட்டு மே 1896 இறைவனுக்கும் லூர்தன்னைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. நூற்றாண்டை கடந்த இத்திருத்தலம் அன்னை மரியாளின் வழியாக இறைவனின் அருட்கொடைகளை மக்களுக்கு பெற்று தரும் புனித தலமாக விளங்கி வருகிறது. பல்லாயிரகணக்கான இறை மக்கள் இத்திருத்தலத்தில் லூர்து அன்னையின் வழியாக இறைவனின் அருளையும் ஆசீரையும் பெற்று செல்கின்றனர் .

chetpet Lourdes shrine

தந்தை தாராஸ்

Fr.daaarsa

அருட் தந்தை தாராஸ் அடிகளார் 1835 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்தார் . 1859 ஆம் ஆண்டு குருத்துவ அருட்பொழிவு பெற்றார். இவர் குருத்துவ பணிக்காக பாண்டிச்சேரிக்கு வந்து வட ஆற்காட்டில் பல்லாயிரம் மக்களுக்கு இறை நற்செய்தி அறிவித்து திருமுழுக்கு வழங்கினார். குறிப்பாக சேத்துபட்டில் கிட்டத்தட்ட 1700 மக்கள் இறைவன் பக்கம் திரும்பி கிறிஸ்தவர்களாக மனம் மாறி திருமுழுக்கு பெற்றனர், 1878 ஆம் ஆண்டு சேத்துப்பட்டு தனி பங்காக ஆனது. லூர்து அன்னையின் மீது மிகுந்த பக்தி கொண்டவராக இருந்த தந்தை தாராஸ் அடிகளார் சேத்துப்பட்டில் இருந்து 2 கி மீ தொலைவில் உள்ள குன்றின் மீது அன்னைக்கு ஒரு சிறிய ஆலயத்தை எழுப்பினார், அதற்கு முன் அது சாத்தான் மலை என்று அழைக்கப்பட்டது குறிப்பிட தக்கது. அந்த சிற்றாலயம் அன்னையின் புனித பயணிகளுக்கு இடம் பற்றாத காரணத்தால் சேத்துப்பட்டு ஊரின் மத்தியிலே அன்னைக்கு மிக பெரிய பேராலயத்தை எழுப்பி லூர்து அன்னைக்கு அர்ப்பணித்தார்.1896 ஆம் ஆண்டு மே முதல் நாள் இப்பேராலயம் அர்ச்சிக்கப்பட்டது. அவர் இப்பேராலயம் எழுப்பப்பட்ட இன்னல்களும், அவமானங்களும் ஏராளம்! அருட்தந்தை தாராஸ் அடிகளாரின் திரு உடல் ஆலயத்தின் திருபீடத்தருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது , ஆண்டுதோறும் அவரது நினைவு நாளில்(30/10/1916) அடிகளாரின் கல்லறை மந்திரிக்கப்பட்டு சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படும்.

   சேத்துப்பட்டு லூர்து மாதா திருத்தலம்சேத்துப்பட்டு லூர்து மாதா திருத்தலம்சேத்துப்பட்டு லூர்து மாதா திருத்தலம்

1996 ஆம் ஆண்டு அருட்தந்தை மரிய ஜோசப் அடிகளார், சேத்துப்பட்டு திருத்தல நூற்றாண்டு விழாவை சிறப்பாகவும் இறைவனின் அருள் ஆசீருடன் கொண்டாடி தூய லூர்து அன்னைக்கு பெருமை சேர்த்தார். சேத்துப்பட்டு மாதா மலை உரிமையை மீண்டும் போராடி மீட்டேடுதவரும் இவரே. பல குருக்கள் சேத்துப்பட்டு திருதல வளர்சிக்காக உழைத்திருக்கிறார்கள் , இன்றும் உழைத்து கொண்டிருக்கிறார்கள். திருதல பங்கு தந்தை பேரருட்திரு முனைவர் அ.ஸ்டீபன் அடிகளார் சிறப்பான முறையில் இறைமக்களை ஆன்மிக வழியில் வழி நடத்தி வருகிறார்.

மரிவலம்

மாதந்தோறும் பவுர்ணமி (முழுநிலவு ) தினத்தன்று சேத்துப்பட்டு மாதா மலையில் மரிவலம் நடைபெறுகிறது .

வழிப்பாட்டு நிகழ்வுகள்

மாலை 6 மணிக்கு ஜெபமாலை மற்றும் சிறப்பு கூட்டு திருப்பலி மாலை 8 மணிக்கு நற்கருணை ஆசீர் மற்றும் மாதா மலையை சுற்றி மரிவலம்
மாலை 9 மணிக்கு சுகம் அளிக்கும் நற்செய்தி வழிபாடு அதிகாலை 3 மணிக்கு நன்றி திருப்பலி

பங்கு ஆலயத்தில் (தினசரி வழிப்பாடுகள் )

ஞாயிறு காலை (6 மற்றும் 8 மணிக்கு சிறப்பு கூட்டு திருப்பலி )
மாலை (6.15 மணிக்கு கூட்டு திருப்பலி )

சனி காலை (6 மணிக்கு திருப்பலி )
மாலை (6 மணிக்கு தேர்பவனி மற்றும் திருப்பலி )

வெள்ளி காலை 6 மணிக்கும் மாலை 6 மணிக்கும் நற்கருணை ஆசீர்
மற்றும் சிறப்பு திருப்பலி

திங்கள் -வியாழன்
காலை 6 மணிக்கு திருப்பலி

மாதா மலையில் (தினசரி வழிபாடுகள் )

திங்கள் - வியாழன
காலை 7 மணிக்கு திருப்பலி

வெள்ளி - ஞாயிறு
காலை 11 மணிக்கு திருப்பலி

மாதத்தில் முதல் சனி அன்று மாதா மலை
ஆலயத்தில் காலை 7 மணிக்கு திருப்பலி

Address for contact
THE PARISH PRIEST ,
OUR LADY OF LOURDES SHRINE ,
CHETPET -606 801 , TIRUVANNAMALAI DISTRICT
SOUTH INDIA
PHONE NO : 04181 - 252367
MOBILE NO: 09786609593

மேலும் விபரங்கள் அறிய திருத்தல இணயைத்தளத்தைப் பார்வையிடவும். http://lourdesshrinechetpet.org/




sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்





A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com